இடியாப்பச் சிக்கலில் எடப்பாடி ?

இடியாப்பச் சிக்கலில் எடப்பாடி ? சிக்கலை தீர்க்கப் போவது ஸ்டாலினா ? மோடியா ?எடப்பாடி பழனிசாமியை டெல்லி, பெருமளவு கை கொடுத்து உதவலைன்னே சொல்றாங்க. இதுதான் தற்போதைய ஹாட் டாபிக்காக ஓடிக் கிட்டிருக்குது.  எடப்பாடி பழனிசாமி எதுக்காக டெல்லிக்குப் போனாருங்கிற யூகங்கள் ஒருபக்கம் ஓடிக்கிட்டிருந்தாலும், அது தொடர்பான செய்திகளும் அப்பப்போ கசிந்து கிட்டுதான் இருக்குது. அந்தவகையில், அமித் ஷாவை சந்திச்சப்போ, கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானோரின் ஆதரவு தமக்குதான் உள்ளது. எனவே ஓபிஎஸ்ஸை என் வழிக்கு வரச் சொல்லுங்க ஜி’ என்ற ரீதியில் அவர் பேச, ‘அதெல்லாம் இருக்கட்டும்… 2024 எம்பி எலக்ஷன், 2026 அசெம்பிளி எலக்ஷன்னு வரிசையாக வரப்போகுது. இந்த தேர்தல்களில் அதிமுக -பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டுமென்றால், நீங்கள் அனைவரும் (ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி, சசிகலா) ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம். இதனை மனதில் வைத்து கொண்டு செயல்படுங்கள் என்று இபிஎஸ் இடம் கறாராக சொல்லி அனுப்பிவிட்டாராம்’ அமித் ஷா. ஆனால், இதுக்கு எடப்பாடி பழனிசாமியோ, வழக்கம்போலவே மறுத்தாராம்.. ஓபிஎஸ்ஸுடன் இணைவது சாத்தியமே இல்லைன்னு உறுதியா சொன்னதாக சொல்றாங்க. இதைதவிர வேறு சில விஷயங்களை அமித்ஷாவிடம் விவாதித்ததாகவும் சொல்றாங்க. இந்த சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.  அப்போது, காவிரி கோதாவரி நதி நீர் இணைப்பு போன்ற பிரச்சனைகளுக்காவே அமித்ஷாவை சந்தித்ததாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் தந்திருந்தார்.. ஆனால், இந்த விளக்கமே அவர் மேல உள்ள விமர்சனத்தை உறுதிப்படுத்திடுச்சி. காவிரி கோதாவரி பிரச்சனைக்காக, ஒரு உள்துறை அமைச்சரை, எடப்பாடி அவசர அவசரமாகப் போய் பாக்கணுமா என்ன ? ஏன், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை பாத்திருக்கலாமே? சம்பந்தமே இல்லாமல் ஒரு மழுப்பலான பதிலை சொன்னாலும், பொருத்தமாக எடப்பாடி சொல்லியிருக்க வேணாமான்னு கேள்வி எழுப்புகிறார்கள். அமித்ஷாவை எடப்பாடி சந்தித்த அன்றைய தினமே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீடியாக்களின் கவனத்தை திசை திருப்பிட்டாங்க. அவர்கள் பேசும்போது, “பெங்களூரில் அங்கிருக்ககூடிய விசாரணைக்குழு லோக்ஆயுக்தா என்று சொல்லக்கூடிய ஊழல் தடுப்பு மன்றம், எடப்பாடியின் சம்பந்தி மகன் மீது 12 கோடி ரூபாய் லஞ்சப்புகார் இருக்குது.. எடியூரப்பாவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சருக்கு 666 கோடி ரூபாய் கட்டிடம் ஒன்றை கட்டுவதற்காக 12 கோடி ரூபாய் லஞ்சப்பணத்தை கொண்டு போய், தந்துள்ளார்.. வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.. இந்த வழக்கு, எடப்பாடிக்கு அச்சத்தை தந்திருக்ககூடியதாக இருக்கலாம்..  ஓபிஎஸ் தரப்பு பற்றி அமித்ஷாவிடம் பேசப்பட்டதா? அல்லது வழக்குகளில் இருந்து மீள்வது குறித்து பேசப்பட்டதா?ன்னு உறுதியாக யாருக்கும் தெரியலை..  ஆனால், அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி ஒண்ணு மட்டும் உறுதியாக சொன்னாராம்.. “கடந்த சில வாரங்களாகவே, தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் பயணம் செஞ்சுகிட்டு வர்றேன்.. எங்குமே ஓபிஎஸ்க்கான பலம் காணப்படலை.. அதனால் இல்லாவிட்டாலும் கட்சி பலமாகவே என்றைக்கும் இருக்கும்.. நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் எண்ணிக்கை அளவில் தம்முடைய ஆதரவாளர்களே அதிகம் இருக்கிறாங்க.. அந்த அடிப்படையில் பாஜக மேலிடம் என்கிட்ட மட்டுமே இனி தேர்தல் மற்றும் அரசியல் உறவை தொடரணும்னு எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேட்டுக்கொண்டாராம்.. இருந்தாலும் அமித்ஷா, தான் சொல்ல வந்த விஷயத்தில் உறுதியாக இருந்ததாக சொல்லப்படுது. மேலும், சட்டமன்ற கூட்டத்தில், அடுத்த சறுக்கல் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு பெரிய நெருக்கடிய கூடிய சீக்கிரம் சந்திக்க உள்ளதா தகவல் வெளியாகி உள்ளது.. ஆனால், அதையும் முறியடித்துக்காட்ட, பக்காவாக ஒரு பிளானை எடப்பாடி கையில் எடுத்துள்ளதாக இன்னொரு தகவல் பரவிகிட்டுவருது. திமுகவையும், ஓபிஎஸ்ஸையும் விடாமல் குற்றஞ்சாட்டி வர்ற நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு புதுநெருக்கடி ஒண்ணு நெருங்கி வர்றதா தகவல் சொல்கிறாங்க..

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை இன்னமும் ஓயலை.. ஓபிஎஸ் + சசிகலா + தினகரனை இணைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கொஞ்சங் கூட விருப்பம் இல்லைன்னு எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து சொல்லிக்கிட்டே வர்றாரு..ஆனால், ஒருங்கிணைந்த அதிமுகவைத்தான் பாஜக மேலிடம் விரும்புறதுனால அதற்கான அறிவுரைகளை எடப்பாடிக்கு சொன்னதாகவும், ஆனால், அப்போதுகூட எடப்பாடி அந்த பேச்சை காதில் வாங்கிக்கலைன்னும் சொல்லப்படுது.. இதைதவிர, கொடநாடு விவகாரம், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, என பல்வேறு விவகாரங்களில் எடப்பாடி பழனிசாமியின் பெயர் அடிபட்டுகிட்டு வருது. மேலும், நெடுஞ்சாலை துறை ஊழல்கள், சம்பந்தி தொடர்பான ஊழல்கள் விஸ்வரூபமெடுத்துள்ளன.. அதனால்தான், தன்னை காப்பாற்றும்படி, டெல்லி பாஜக தலைவர்களின் உதவியை நாடி எடப்பாடி பழனிசாமி சென்றதாகவும், ஓபிஎஸ் தரப்பில் விமர்சனம் பண்ணிகிட்டு வர்றாங்க… உதவி கேட்டும் பாஜக மறுத்துவிட்ட நிலையில், எடப்பாடிக்கு நெருக்கடிகளை தருவதற்கு மேலிடம் தயாராகி வர்றதாகவும் தெரியுது.. இப்படிப்பட்ட சூழலில்தான், புதுக்கோட்டை பாண்டித்துரை தொடர்புடைய இடங்களில், கடந்த வாரம், 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இந்த சோதனையில் எடப்பாடி பழனிசாமி தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக சொல்லப்ப்படுது.. முதல்வராகவும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமி காலத்தில், நெடுஞ்சாலைகளில் ஒளிரும் போர்டுகள் தமிழகம் முழுவதும் அமைக்கும் பணிக்கான டெண்டர் பாண்டித்துரையின் நிறுவனத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டதாகச் சொல்கிறாங்க அதுமட்டுமல்ல, போக்குவரத்து துறையில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணிக்கான டெண்டரும், இதே பாண்டித்துரைக்கே ஒதுக்கப்பட்டு, இதன் மூலம் பல கோடி ரூபாய் லாபம் பார்த்த நிறுவனம் ஒன்று, பெரிய தொகையை மேலிடத்துக்கு தந்ததாகவும் தகவல் ஒன்று வட்டமடித்து கொண்டிருக்கிறது. வருமான வரித்துறை சோதனையில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புடைய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வலம் வருவது, பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. ஆனால், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறைதான், பாண்டித்துரையிடம் ரெய்டு நடத்தியிருக்க வேண்டாம்.. ஆனால், அங்கேயும் சிலரை சரிக்கட்டி பாண்டித்துரை வைத்திருப்பதாகவும், அதனால்தான், அவரை கண்காணித்து வந்த வருமான வரித்துறை களத்தில் அதிரடியாக இறங்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.. அதிமுக இணைப்பை வேண்டி, தொடர்ந்து எடப்பாடியை நெருக்கிக் கொண்டிருக்கிறது பாஜக.. ஆனால், இன்னமும் பிடிகொடுக்காமல் இழுத்தடிக்கப்படும் நிலையில், அவர் சம்பந்தப்பட்டவர்களுக்குதான் செக் வைத்து ஆட்டத்தை தொடங்கி உள்ளதாம் பாஜக.. பாண்டித்துரை மீதான ரெய்டு, எடப்பாடிக்கு தரப்பட்ட அபாயமணி என்கிறார்கள்.. தன்னுடய ஆதாயத்துக்காகவே பாஜக இதுபோன்ற அதிரடிகளை செய்வதாக எடுத்துக் கொண்டாலும்கூட, இதற்கு பிறகாவது எடப்பாடி பழனிசாமி சமாதானம் ஆவாரா? ஓபிஎஸ்ஸை சேர்த்து கொள்வாரா? தொண்டர்களின் மனநிலைமையை புரிந்து கொள்வாரா? தெரியவில்லை.. இந்த சூழ்நிலைல தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்பி உதயகுமாரை சபாநாயகர் அங்கீகரிக்காதபட்சத்தில், ஓபிஎஸ்ஸுக்கு சப்போர்ட் கிடைத்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு இது சறுக்கலாக பார்க்கப்படுகிறது.. இதனிடையே, 2024 எம்பி தேர்தலில், 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும், கட்சியின் பூத் கமிட்டிகள் தான், தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளாராம்.. ஆனால், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் இருப்பதால், அவர்களை எல்லாம் மாற்றி விட்டு தன்னுடைய ஆதரவாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், அவர்களை உற்சாகப்படுத்த கவனிக்க வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு போட்டுள்ளதாக புது தகவல் ஒன்று வட்டமடிக்கிறது

இந்த மாதிரியான பரபரப்பான சூழ்நிலைல எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 4 முக்கியமான சிக்கல்கள் உருவாகி இருக்குது.. தமிழ்நாடு சட்டசபையில் நேற்று ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு அறிக்கையும் தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு 4 விதமான சிக்கல்கள் ஏற்பட்டிருக்குது.அது என்னன்னு பாக்கலாம்..  முதல் சிக்கல் 1 – தூத்துக்குடி எடப்பாடிக்கு காத்திருக்கும் முதல் கண்டம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் நேரடியாக தமிழ்நாடு போலீஸ் தவறு செய்து உள்ளதாக ரிப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அருணா ஜெகதீசன் குழு வெளியிட்ட அறிக்கையில், ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹ 10 லட்சமும் வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஸ்டாலின் இந்த நடவடிக்கை அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்ததுதான் நடந்தது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. எடப்பாடிக்கு இந்த துப்பாக்கி சூடு பற்றி நொடிக்கு நொடி விவரம் சென்றதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் கண்டிப்பாக போலீசாரை கட்டுப்படுத்தியவர் என்ற குற்றச்சாட்டில் எடப்பாடி மீது வரும் நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. நேற்று இதை பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலினும், எடப்பாடி இதில் முழுக்க முழுக்க பொய்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி கிராமத்து பக்கம் கடப்பாரையை விழுங்கிவிட்டு கசாயம் குடித்துவிட்டேன் என்று கூறும் பழமொழியை விட மிகப்பெரிய பொய் கூறியுள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதன்பின் பல்வேறு திமுக எம்எல்ஏக்கள் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அதோடு இதில் குற்றம் செய்தவர்களை கூண்டில் ஏற்றாமல் விட மாட்டேன் என்றும் ஸ்டாலின் சபதம் செய்து இருக்கிறார். இதனால் தூத்துக்குடி வழக்கில் எடப்பாடி பழனிசாமி குறி வைக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவருக்கு இருக்கும் இரண்டாவது சிக்கல். 2 –  இந்த நிலையில்தான் இப்போ கோடநாடு வழக்கில் விசாரணை சூடு பிடிச்சிருக்குது. . கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை தீவிரமாக நடத்த தமிழ்நாடு போலீஸ் முடிவு செஞ்சிருக்குது. இதற்காக அண்டை மாநிலங்களுக்கு செல்லவும் தமிழ்நாடு போலீஸ் தயாராகி வருதாம். வழக்கு சிபிசிஐடி கைக்கு மாத்தியாச்சு. இந்த வழக்கில் குற்றவாளிகள் மற்றும் சாட்சியங்களில் ஒருவரான சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மேலேயே குற்றஞ்சாட்டி இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுது.  எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சயான் வாக்குமூலம் அளித்ததாக வெளியாகும் செய்திகள் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய சிக்கலாக பார்க்கப்படுது. எடப்பாடி பழனிசாமியை நோக்கி இவர் தனது கையை திருப்பி உள்ள நிலையில்தான் அண்டை மாநிலங்களுக்கு சென்று இந்த வாக்குமூலம் தொடர்பாக விசாரணை நடத்தவும் சிபிசிஐடி போலீஸ் திட்டமிட்டுள்ளது. இது எடப்பாடிக்கு இருக்கும் இரண்டாவது பெரிய கண்டம். மூன்றாவது சிக்கல் 3 – பொதுக்குழு வழக்கு அதிமுக பொதுக்குழு வழக்கும் அவருக்கு இருக்கும் இன்னொரு கண்டம் ஆகும். அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் அடுத்த மாதம் விசாரணை நடத்த உள்ளது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் நீதிபதிகள் முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் அளித்த விளக்கத்தில்,எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களுக்கே மெஜாரிட்டி இருப்பதாக வாதம் வைத்தது. ஆனால் நாங்கள் மெஜாரிட்டி பற்றி ஆராய போவதில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. மெஜாரிட்டி யாருக்கு இருக்கிறது என்பது எங்கள் கவலை இல்லை. பொதுக்குழு எப்படி கூடியது என்பதே எங்கள் கவலை.  பொதுக்குழு சட்டப்படி கூட்டப்பட்டதா என்பதை வழக்கில் ஆராய போகிறோம் என்று நீதிபதிகள் கூறி உள்ளனர். அதாவது மெஜாரிட்டி பற்றி கவலைப்பட போவது இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதுதான் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இடியாக வந்து இருக்கும் செய்தி. ஏன்னா அதிமுக சட்டப்படி பொதுக்குழுவை ஒருங்கிணைப்பளார், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே கூட்ட முடியும். இவர்களின் பதவிக்காலம் காலாவதி ஆகிடுச்சின்னு எடப்பாடி வாதம் வைக்க முடியாது. இது எடப்பாடிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.  நாலாவது சிக்கல் 4 – ரெய்டு இன்னொரு பக்கம் எடப்பாடியின் உறவினர் காண்டிராக்டர் செய்யாதுரை வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு எல்லாருக்கும் தெரியும்.. இங்க லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கில் எடப்பாடிக்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் காய் நகர்த்தப்படலாம். எடப்பாடிதான் அரசு ஒப்பந்தங்களை அத்துமீறி கொடுத்ததாக புகார் உள்ளது. இதனால் இந்த வழக்கிலும் எடப்பாடிக்கு மிகப்பெரிய சிக்கல் காத்திருக்குது.

வழக்குகளின் பிடியில் சிக்கி உள்ள நிலையில், கைதூக்கி விட பெரிதாக மேலிடம் முன்வரலையாம்.. குறிப்பாக, டெண்டர் விவகாரம் குறித்து எடப்பாடிக்கு எதிரான முக்கிய தகவல்களை, இங்கு மாநிலத்துக்கு பாஸ் செய்வதே டெல்லியில் உள்ள சில சோர்ஸ்கள்தானாம்.. அதனால், எடப்பாடி விஷயத்தில் ஏதோ ஒரு “தேர்தல் கணக்கு” போட்டு மேலிடம் வேலை செய்றதாகவே சொல்றாங்க.  மேலும், தேர்தலுக்கு இன்னும் டைம் இருக்கிறதுனால், இப்போதைக்கு இதுபோன்ற பிரச்சனைகளில்பாஜக தலையிட விரும்பலைன்னு தெரியுது.. இது எடப்பாடி டீமுக்கு பெருத்த வருத்தத்தை உண்டுபண்ணி வருதாம்.. அதுமட்டுமல்ல, தற்சமயம், பெங்களூர் வழக்கில் எடப்பாடி சம்பந்தி மகன் சிக்கி உள்ள நிலையில், உண்மையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு, டெல்லி உதவ போகிறதா? தன் ஆதரவை தர போகிறதா? என்பதெல்லாம் இந்த கேஸை வைத்துதான் முடிவு செய்யப்படும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இந்த வழக்கில் எடப்பாடிக்கு கை கொடுத்து உதவினால், அடுத்தடுத்து உள்ள வழக்குகளும் சுமூகமாக முடிய வாய்ப்பிருக்கும், இல்லாவிட்டால், எடப்பாடியின் நெருக்கடிகளால் அதிக லாபம் அடைவது திமுகவை விட பாஜகதான் என்றும் அறுதியிட்டு சொல்கிறார்கள்.

இப்படி பாஜக, ஓபிஎஸ் டென்ஷன் போதாதென்று, சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசியதை கேட்டு ஷாக் ஆகி உள்ளாராம் இபிஎஸ்… ‘கட்சி தலைமை விவகாரத்துல அண்ணே கொஞ்சம் இறங்கிதான் வாங்களேன்… இல்லைன்னா சிவசேனா மாதிரி நம்முடைய கட்சியும், சின்னமும் கூட முடக்கப்பட வாய்ப்பிருக்கு… சின்னம் இல்லாம தேர்தலை சந்திப்பது அவ்வளவு நல்லதுக்கு இல்ல’ என்ற ரீதியில் பேசி இருந்தாராம் அந்த மூத்த நிர்வாகி. அவரது பேச்சை கேட்ட இபிஎஸ், இதுபோன்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் என் பக்கம் இருக்குறாங்கங்கிற தைரியத்தில் தான் ஓபிஎஸ், பாஜகவை இதுநாள்வரை எதிர்த்துகிட்டு வர்றேன். இப்போ இவங்களே இப்படி பேசுனா எப்படி?’ன்னு கட்சியில் தமக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி நொந்து போய்ட்டாராம் எடப்பாடி பழனிசாமி.டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் என ஒவ்வொருவரையும் இபிஎஸ் ஓரங்கட்டுவதால் இபிஎஸ் அரசியல் சாணக்கியத்தனம் மிக்கவர் என்று யாராவது நினைத்தால் அது மிகப்பெரிய தவறு என்கின்றனர் அரசியல் விவரம் அறிந்தவர்கள். இபிஎஸ் -ஓபிஎஸ் இடையே நடைபெற்றுவரும் அதிமுக தலைமை யுத்தம் உட்கட்சி பிரச்னை. இதில் பாஜக ஒருபோதும் தலையிடாது என்று அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து சொல்லிக்கிட்டு வந்தாலும், இதில் பாஜக மேலிடத்தின் பார்வை சுத்தமாக இல்லைன்னு சொல்ல முடியாதுங்கிறாங்க அவங்க. பாஜக மேலிடத்தின் ஆசி இருந்ததால்தான் டிடிவி, சசிகலாவை அதிமுகவில் இருந்து தைரியமாக ஓரங்கட்டினார் இபிஎஸ். அதே வேகத்தில் ஓபிஎஸ்ஸை கட்சியைவிட்டு வெளியேற்றிடலாம்னு நெனச்ச இபிஎஸ்ஸுக்கு டெல்லியில் இருந்து இதுநாள்வரை ரெட் சிக்னலே கிடைச்சுகிட்டு வருதாம். இதனை கிரீன் சிக்னலாக மாற்ற அமித் ஷா, பியூஷ் கோயல் என பாஜகவின் முக்கிய புள்ளிகளை மாறி மாறி சந்தித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. எல்லோரும் ஒன்றாக இருங்க என்ற பாஜகவின் விருப்பத்துக்கு மாறாக, ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டும் முயற்சியில் தொடர்ந்து இருந்துவரும் இபிஎஸ், அதில் வெற்றிப் பெறுவதுதான் தற்போது அவர் முன்னுள்ள மிகப்பெரிய சவால். ஆனால் அவரது அணியில் உள்ள மூத்த நிர்வாகிகள் சிலரே…. ஓபிஎஸ் விஷயத்தில் கொஞ்சம் இறங்கி வாங்கன்னு இபிஎஸ்சுக்கு அட்வைஸ் செய்ய துவங்கி உள்ளதால், பாஜக டெல்லி மேலிடத்தின் ஆசிப் பெற்ற ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டுவது இபிஎஸ்ஸுக்கு அவ்வளவு எளிதான விஷயமாக இருக்காது என்கின்றனர் அரசியல் விமரசகர்கள்.
இப்படி, பாஜக தொடர்ந்து  அழுத்தம் கொடுத்து. வருவதாக கூறப்படும் நிலையில் இரட்டை தலைமை என்ற நமது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருக்கும் ஓபிஎஸ், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் மத்தியில் மெல்ல எழுந்துள்ள எதிர்ப்புக் குரல் என்று மூன்று பக்கமும் இபிஎஸ்சுக்கு நெருக்கடி இருந்து வருவதால், ஒற்றை தலைமை யுத்தத்தில் அரசியல் ரீதியாக ஓபிஎஸ்ஸை வீழ்த்தி இருந்தாலும், இந்த விஷயத்தில் இறுதியில் இறங்கி வருவதை தவிர இபிஎஸ்ஸுக்கு வேறு வழியில்லையாம். அவர் எவ்வளவு சீக்கிரம் இறங்கி வரப்போறாருங்கிறதுதான் விஷயமேங்கிறாங்க அரசியல் ஆர்வலர்கள்.

Related posts: