அதிமுகவுக்கு மட்டுமல்ல, திமுகவுக்கும் ஒரு ஷாக் செய்தி அரசியல் களத்தில் சுத்திக்கிட்டிருக்குது..
காரணம் என்ன்னா சசிகலா தரப்பிலிருந்து வெளி வந்து கொண்டிருக்கும் முக்கிய தகவல்தான்..!
தொண்டர்களுடன் ஆடியோ ரிலீஸ், ஆன்மீக சுற்றுப்பயணம்ன்னு மறைமுகமான நடவடிக்கைகள் சசிகலாவுக்கு சறுக்கலைத்தான் தந்ததுன்னு சொல்லலாம். சசிகலாவோட மெத்தனம் தான் எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் பலத்தை தந்திடுச்சின்னு சொல்றாங்க. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்ல, அமமுகவில் இணைந்து தேர்தலை சசிகலா சந்தித்திருந்தால், இந்த அளவுக்கு சசிகலா பலத்தை இழந்திருக்க மாட்டார்ன்னு அரசியல் விமர்சகர்கள் சொல்றாங்க. எப்படியும் குறைந்தபட்சம் 10 சதவீத வாக்குகளையாவது பெற வாய்ப்பு இருந்திருக்கும்.. அதிமுகவுக்கும் ஒரு பயத்த காட்டுன மாதிரியாகவும் இருந்திருக்கும்.. அமமுக என்ற கட்சியையே சசிகலா விரும்பாதது மட்டுமில்லாம, அக்கட்சியை கலைக்கச்சொல்லி தினகரனை வற்புறுத்தி வந்ததும், அதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பையும் யாராலும் மறக்கவும் முடியாது மறுத்துவிடவும் முடியாது. இப்போதைக்கு சசிகலா என்ன மாதிரியான முடிவுகளை எடுப்பார்ங்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கு.. அமமுகவுடன் இனியாவது இணைந்து கட்சியை பலப்படுத்துவாரா? அப்படியில்லண்ணா வழக்குக்கு அப்பீல் எல்லாம் போகாமல், எடப்பாடி பழனிசாமி தரப்போட சுமூகமாக பேசி முடித்து கொள்வாரா?ங்கிறது தெளிவா தெரியலை..
இந்த சூழ்நிலைல தான் 2 விதமான செய்திகள் கசிஞ்சி வந்திருக்குது. முதலாவதாக, வெளிப்படையாகவே சீனியர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து ஆதரவை பெறலாமான்னு யோசிச்சுகிட்டு வர்றாராம் சசிகலா.. இப்போதைக்கு அதிமுகவின் சீனியர்கள்தான் சசிகலாவின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறதால, இவர்களையெல்லாம் மீறி எதையும் செய்ய முடியாதுங்கிற நிர்ப்பந்தமும் சசிகலாவுக்கு ஏற்பட்டிருக்குதுன்னு அடிச்சி சொல்றாங்க..அதனால, இவர்களையெல்லாம் சரிக்கட்டினால்தான், அதிமுகவை கைப்பற்ற முடியும்ங்கிறதை இப்போதான் உணர்ந்திருக்கிறதாகவும் கூறப்படுது. அதேபோல, தனிக்கட்சி தொடங்கவும் சசிகலாவுக்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுது..
சமீபத்தில், தனியார் டிவிக்கு சசிகலா அளித்த பேட்டியில், “என் அரசியல் பயணத்திற்கான நேரம் வந்து விட்டது. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். மத்திய அரசால் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த நெருக்கடியும் இல்லை”ன்னு சொல்லியிருக்கிறார்.. அதாவது, ஏற்கனவே, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, தேனி கண்ணன் உள்ளிட்ட சில ஜாதி கட்சிகளின் தலைவர்கள் சசிகலாவின் தீவிர அரசியல் பயணத்தை வரவேற்றிருக்கிற
நிலையில், இதுவும் சசிகலாவுக்கு தெம்பூட்டி வர்றதாகச் சொல்றாங்க. அதனால்தான், இனியும் அதிமுகவை நம்பி இருக்க வேண்டாம், பேசாமல் “சசிகலா பேரவை”ங்கிற பேர்ல ஒரு கட்சியைத் தொடங்கி நேரடி அரசியலில் ஈடுபடலாம்ங்கி ஆலோசனையை சசிகலாவுக்கு சொல்லியிருக்கிறாங்களாம். இந்த இக்கட்டான சூழ்நிலைல தனிக்கட்சி தொடங்க காரணமும் சொல்லப்படுது.. சசிகலா தன் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார். தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாய மக்களை குறி வைத்து கடந்த சட்டசபை தேர்தலிலேயே அதிமுகவுக்கு எதிராக களமிறங்கியிருக்கலாம்.. காவிரி டெல்டா அந்த தேர்தலை புறக்கணித்ததால்தான், அதிமுக அங்கு வலுவாகி விட்டது.. தென்மாவட்டமும், காவிரி டெல்டா பகுதிகளும்தான் சசிகலாவின் மொத்த பலமே.. இங்கும் அதிமுக கொடி நாட்டப்பட்டு விட்டதால், சொந்த பகுதியிலேயே செல்வாக்கை நிரூபிக்க வேண்டி உள்ளது.. அதனால்தான், வரப்போகும் எம்பி தேர்தலிலாவது சசிகலா நேரடியாக போட்டியிட வேண்டும்.. அதற்கு சொந்த கட்சி துவங்கினால்தான் சாத்தியமாகும் என்பதே அவருடைய ஆதரவாளர்கள் வழங்கி வரும் ஆலோசனைகளாகும்…
அந்த வகையில், சசிகலா பேரவை சார்பில் 39 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்றும், அவர்கள் வாங்குகிற ஓட்டு சதவீத கணக்கின் பலம் நிரூபிக்கும்பட்சத்தில், அதிமுகவில் சசிகலா இணைவதற்குரிய முக்கியத்துவம் தானாக தேடி வரும்னே அவர்கள் நம்புகிறார்கள். அதோட, பாஜகவுக்கும் சசிகலாவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை இருக்குதுங்கிறாங்க. . இந்த முடிவை சசிகலாவும் பரிசீலித்து வருவதாகச் சொல்லப்படுது. ஒருவேளை தனிக்கட்சி ஆரம்பித்தாலும், அமமுகவையும் இணைத்து கொண்டு தேர்தலை சந்தித்தால், கூடுதல் பலத்தை சசிகலாவுக்கு பெற்று தரும் னு அவரது ஆதரவாளர்கள் சொல்றாங்களாம். இந்த கணக்குகள் எல்லாம் சாத்தியமானால், அது திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்னு அரசியல் நோக்கர்கள் கணித்து சொல்கிறார்கள்..
எந்த அளவுக்கு, அதிமுக – சசிகலா – அமமுகவுக்குள் பூசல்கள் உள்ளதோ, அவை அத்தனையும் திமுகவுக்கு பலத்தை தரும்.. ஆனால், இவைகள் பலமாகும் பட்சத்தில், திமுகவுக்கு சறுக்கலை ஏற்படுத்தும் நிலைமையும் உள்ளது.. இருந்தாலும், சசிகலா தனிக்கட்சி தொடங்குவாரா? அமமுக இணையுமா? அதிமுகவுக்கு செக் வைப்பார்களா? திமுக இதனால் பாதிக்கப்படுமா? இதெல்லாம் நடக்குமா?ன்னு இப்பவே சொல்லமுடியாது. சசிகலா எடுக்கும் தீர்க்கமான முடிவைப் பொறுத்து காட்சிகள் மாறும் . அதுவரைப் பொறுத்திருப்போம்..!