எண்டெமோல் ஷைன் இந்தியாவின் ‘பிக் பாஸ் தமிழ்’ ஜியோஹாட்ஸ்டாரில் முதலிடத்தைப் பிடித்து, தமிழ் பொழுதுபோக்கு உலகில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தது!

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் எண்டெமோல் ஷைன் இந்தியாவின் ‘பிக் பாஸ் தமிழ்’, ஜியோஹாட்ஸ்டாரின் தமிழ் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து, தமிழ் பொழுதுபோக்கு தளத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சமீபத்திய தரவரிசையின்படி, ‘பிக் பாஸ் தமிழ்’ நிகழ்ச்சி முதலிடத்தை பிடித்திருப்பது பார்வையாளர்கள் மத்தியில் நிலவும் மிகப்பெரிய வரவேற்பையும் ஈடுபாட்டையும் காட்டுகிறது. தொலைக்காட்சி, டிஜிட்டல் தளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாகவும் ‘பிக் பாஸ் தமிழ்’ இருந்து வருகிறது.

ஜியோஹாட்ஸ்டாரின் தமிழ் பிரிவில் பிக் பாஸ் தமிழ் முதலிடத்தைப் பிடித்திருப்பது, தமிழ் மார்க்கெட்டில் மிகவும் வலுவான ரியாலிட்டி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றாக தொடர்ந்து வருவதை மேலும் உறுதிப்படுத்துகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் இந்த நிகழ்ச்சி நெருக்கமாக இருப்பதையும் இந்த சாதனை எடுத்துக்காட்டுகிறது.

இந்த வெற்றி, பனிஜே ஏசியாவின் ஒரு பகுதியாக செயல்படும் எண்டெமோல் ஷைன் இந்தியாவின் வலிமையையும் எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில் ‘பிக் பாஸ்’ பிரான்சைஸ் நிகழ்ச்சியை தயாரித்து வரும் எண்டெமோல் ஷைன் இந்தியா, உலகளவில் வெற்றிபெற்ற நிகழ்ச்சி வடிவங்களை இந்தியாவின் பல்வேறு மொழி மற்றும் பிராந்திய பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு உருவாக்குவதில் சிறப்பான அனுபவத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை பல்வேறு சந்தைகளில் வலுவான பொழுதுபோக்கு பிரான்சைஸாக எண்டெமோல் ஷைன் இந்தியா உருவாக்கியுள்ளது.

தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் பல்வேறு மொழிப் பிரிவுகளில் பிக் பாஸ் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்த பிரான்சைஸ் நிகழ்ச்சி நாடு முழுவதும் தனக்குள்ள அபாரமான வரவேற்பை தொடர்ந்து நிரூபித்து வருகிறது. அதேவேளையில், ‘பிக் பாஸ் தமிழ்’ முதலிடத்தைப் பிடித்திருப்பது, தமிழ் பார்வையாளர்கள் மத்தியில் நிகழ்ச்சிக்குள்ள வலுவான வரவேற்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்த ஆண்டு ஒரே நாளில் தொடங்கிய ‘பிக் பாஸ் சவுத் கார்னிவல்’ நிகழ்ச்சியால் தென்னிந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தொடக்க நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்கும் வகையில், அந்தந்த மொழிப் பதிப்புகளின் பிரபல தொகுப்பாளர்களான மோகன்லால் (மலையாளம்), நாகார்ஜுனா (தெலுங்கு), கிச்சா சுதீப் (கன்னடம்) மற்றும் விஜய் சேதுபதி (தமிழ்) ஆகியோர் தங்களது நிகழ்ச்சிகளில் இருந்து ஒன்றாகத் தோன்றி, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ‘பிக் பாஸ் சவுத் கார்னிவல்’ நிகழ்ச்சி பிரமாண்ட வெற்றியடைய வாழ்த்தினர்.

Related posts:

வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடிக்கும் "படையாண்ட மாவீரா"விற்கு ஐந்தாம் பாடலை வழங்கினார் கவிப்பேரரசு வைரமுத்து!

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்!

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தொழில் அதிபர் ஏ.எம். கோபாலன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது...

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம் !

ஜி.எஸ்.டி.தாக்கல் செய்யாதவர்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் ?

சிடிசி குழுமத்திலிருந்து ரூ. 215 கோடி நிதியை திரட்டியிருக்கும் டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம் .!

Production No. 2 – இயக்குநர் சிவநேசனின் இயக்கத்தில் ஸஸ்பென்ஸ் த்ரில்லர்!

ZEE5 app-ல் போலீஸ் டைரி 2.0 வெற்றி பெறும் ! தயாரிப்பாளர் குட்டிபத்மினி நம்பிக்கை !