செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

வீட்டுக்கு ஒரு தொழில்முனைவர் ! எழுமின் அமைப்பின் இலட்சிய முழக்கம் !!ஜெகத் கஸ்பர் பேச்சு !!!

எழுமின் - தி ரைஸ் அமைப்பு நடத்தும் மூன்றாம் உலகத்தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு இவ்வாண்டு நவம்பர் 14,15,16 நாட்களில் சென்னை நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்தவக் கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது . மலேசியா , சிங்கப்பூர் மியன்மார் , ஆஸ்திரேலியா , அமெரிக்கா , கனடா , தென் ஆப்ரிக்கா பிரித்தானியா , ஜெர்மனி , நார்வே , பிரான்ஸ் , சுவிட்சர்லாந்து , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் , ஒமான் , கத்தார் , குவைத் , பஹ்ரைன் , சிறிலங்கா , மொரிசியா ' உள்ளிட்ட 35 - க்கும் மேலான உலக நாடுகளிலிருந்து வரும் தமிழ்த் தொழிலதிபர்கள் - திறனாளர்களை சந்திக்கவும் , தொழில் வணிக உறவுகள் உருவாக்கிக் கொள்ளவும் அரிய வாய்ப்பாக இம்மாநாடு அமையும் என்று. எழுமின் அமைப்பினை நிறுவியவர் அருட்திரு தமிழ்ப்பணி ஜெகத் கஸ்பார் பேசினார் . இது குறித்து ஜெகத் கஸ்பர்…
Read More
சுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு ?

சுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு ?

சுபஸ்ரீ உயிரிழக்கக் காரணமான பேனரை வைப்பதற்கு, மாநகராட்சி ஊழியர்களுக்கு ரூ. 1,000 லஞ்சம் வழங்கியதாக ஆடியோ ஓன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான ஜெயகோபால் மீது 304(A), 279, 336 ஆகிய பிரிவுகளில் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின் ஜெயகோபால் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவான 308-ன் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சுபஸ்ரீயின் மரணத்திற்கு லஞ்சம் முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.வெளியான ஆடியோவில், பள்ளிக்கரணை காவல் உதவி ஆய்வாளரான பாஸ்கர், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஜய் ஆகியோர் பேசியுள்ளனர். அதில்,…
Read More
மின் சாதனங்களில், ‘போஸ்டர்’ ஒட்டுவதை தடுக்க தனி சட்டம்: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு ?

மின் சாதனங்களில், ‘போஸ்டர்’ ஒட்டுவதை தடுக்க தனி சட்டம்: அமைச்சர் தங்கமணி அறிவிப்பு ?

மின் வினியோக சாதனங்களில், சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுக்க, தமிழக அரசு, தனி சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளது. தமிழக மின் வாரியம், மின் வினியோகம் செய்வதற்கு, மின் கம்பங்கள், 'பில்லர் பாக்ஸ், டிரான்ஸ்பார்மர்' உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்துகிறது. இவற்றில், 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. இதனால், பாதுகாப்பு கருதி, அந்த சாதனங்களை, மின் ஊழியர்கள் தவிர, வேறு யாரும் தொடக் கூடாது. இருப்பினும், அவற்றில், அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள், விளம்பர போஸ்டர்களை ஒட்டுகின்றனர். அதை தடுக்க, மின் வாரிய அதிகாரிகளும், எந்த நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், பல கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும் சாதனங்கள், விரைவில் பாழாவதுடன், மின் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.சென்னையில், சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த, பேனர் சரிந்து விழுந்ததில், இரு சக்கர வாகனத்தில் சென்ற, பல்லாவரத்தை சேர்ந்த தனியார் நிறுவன மென்பொறியாளர், சுபஸ்ரீ, 27,சமீபத்தில் உயிரிழந்தார். சாலையை ஆக்கிரமித்து, அரசியல் கட்சியினர் கட்டிய பேனரால், இளம்பெண்…
Read More
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி… தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம். !

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி… தமிழகத்தில் வாகன ஓட்டிகள் உற்சாகம். !

தமிழகத்தில் அபராதம் குறைகிறது, முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்... டாப்-10 செய்திகள்! 1. மாருதி சுஸுகி ஜிம்னி நமக்கு இல்லை! வெளிநாடுகளில் சுஸுகி விற்பனை செய்து வரும் ஜிம்னி எஸ்யூவி கார், ஜிப்ஸிக்கு மாற்றாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்திய ஆஃப் ரோடு பிரியர்கள் மத்தியில் ஆவலை தூண்டியிருந்த மாருதி சுஸுகி ஜிம்னி அறிமுகம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அபராதம் குறைகிறது, முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்... டாப்-10 செய்திகள்! 2. சீனாவில் லான்ச் ஆனது க்விட் எலெக்ட்ரிக் கார்! ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் நம்ப முடியாத மிக குறைவான விலையில் சீனாவில் லான்ச் ஆகியுள்ளது. அடுத்ததாக இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 3. முன்பணம் இல்லாமல் புத்தம் புதிய மஹிந்திரா கார்! மாதச் சந்தா திட்டத்தில்…
Read More
சென்னையில் 24,000 சதுர அடியில் அமேசான்.இன் விநியோக நிலையம் !

சென்னையில் 24,000 சதுர அடியில் அமேசான்.இன் விநியோக நிலையம் !

அமேசான்.இன் தனது மிகப்பெரிய விநியோக நிலையத்தை தமிழகத்தில் தொடங்குவதாக  அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள புதிய நிலையம் அமேசானுக்கு அதன் கடைசி மைல் விநியோக வலையமைப்பை வலுப்படுத்தவும், நகரம் முழுவதும் விரைவான விநியோகங்களை உறுதி செய்யவும் உதவும். டெலிவரி நிலையங்கள் அமேசான் லாஜிஸ்டிக்ஸை திறனை நிரப்பவும், வாடிக்கையாளர் ஆர்டர்களின் வளர்ந்து வரும் அளவை ஆதரிக்க அமேசானின் விநியோக திறன்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கவும் உதவுகின்றன. நாமக்கல், திருச்செங்கோடு, சிவகாசி, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் போன்ற தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள் மற்றும் நகரங்களில் தனது விநியோக வலையமைப்பை விரிவுபடுத்துவதாக நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், அமேசான்.இன் 120 க்கும் மேற்பட்ட பிரபலமான மற்றும் விநியோக சேவை கூட்டாளர் நிலையங்களையும், மாநிலம் முழுவதும் 1400 க்கும் மேற்பட்ட ‘எனக்கு இடம் உள்ளது’ கூட்டாளர்களையும் கொண்டிருக்கும். டெலிவரி நெட்வொர்க்கின் இந்த 2x வளர்ச்சியானது அமேசான் தமிழ்நாடு முழுவதும் சிறிய நகரங்களுக்குள் மேலும் ஊடுருவி, மாநிலத்தின் 1200…
Read More
வி ஐ டிக்கு மத்திய அரசாங்கம் ” சீர்மிகு நிறுவனம் ” அங்கீகாரம் வழங்கியுள்ளது !

வி ஐ டிக்கு மத்திய அரசாங்கம் ” சீர்மிகு நிறுவனம் ” அங்கீகாரம் வழங்கியுள்ளது !

வி ஐ டிக்கு மத்திய அரசாங்கம் " சீர்மிகு நிறுவனம் " அங்கீகாரம் வழங்கியுள்ளது - சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் ஆராய்ச்சியில் இணைந்து வி ஐ டி உலக தரவரிசை பட்டியலில் முன்னேறும். வி ஐ டி க்கு மத்திய அரசாங்கம் " சீர்மிகு நிறுவனம் " அங்கீகாரம் வழங்கியுள்ளது. மத்திய அரசு தேர்வு செய்யப்பட்ட தனியார் உயர் கல்வி நிறுவனங்களுக்கு " சீர்மிகு நிறுவன " அங்கீகாரம் வழங்கியுள்ளது . இதனால் அந்தந்த கல்வி நிறுவனங்கள் தரமான முயற்சிகளை எடுத்து கல்வியின் தரத்தை உயர்த்துவதோடு உலக அளவில் ( கல்வி நிறுவனங்கள் ) தரவரிசை பட்டியலில் இடம் பெற வாய்ப்புள்ளது. வி ஐ டி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் கூறுகையில் இன்னும் 3 வருடங்களில் உலகின் தலைசிறந்த 500 பல்கலைக்கழகங்கள் தரவரிசை பட்டியலில் வி ஐ டி இடம் பெற போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். ஏற்கனவே வி ஐ டி…
Read More
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ? இது மனிதர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட வறட்சி ?

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ? இது மனிதர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட வறட்சி ?

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எளிய மனிதர்கள் இரவு முழுக்க வெற்றுக் குடங்களோடு தெருவில் காத்துக் கிடக்கின்றனர்.நாளுக்கு நாள் தனியார் தண்ணீர் டேங்குகளில் விற்கப்படும் தண்ணீரின் விலை கூடிக் கொண்டே போகிறது. வியாழக்கிழமை மாலை பெய்த மழை தொடரும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் , நேற்று சுத்தமாக மழை பெய்யவில்லை. இருக்கின்ற தண்ணீர் எத்தனை நாட்களுக்கு வரும் என்று தெரியாத நிலையில் இந்த சிக்கல்களில் இருந்து சென்னை எப்படி மீண்டெழும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த சிக்கல்களுக்கான நிரந்தரத் தீர்வுகள் என்ன, இந்த நிலை எதிர்காலத்தில் ஏற்படாமல் காத்துக்கொள்ள அரசும் , மக்களும் செய்ய வேண்டிய முதன்மையான செயல்கள் என்னென்னெ போன்ற கேள்விகளோடு, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசியரும் நீரியல் நிபுணருமான ஜனகராஜன் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல் பின்வருமாறு. கடுமையான வறட்சியினை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம். இது மழைப்பொழிவு இல்லாமல் ஏற்பட்ட…
Read More
நீர் நிலைகளை முறையாக பராமரிக்க வேண்டும்? மத்திய அரசுஅதிரடி !

நீர் நிலைகளை முறையாக பராமரிக்க வேண்டும்? மத்திய அரசுஅதிரடி !

வருங்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க நகரங்களில் உள்ள வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்பது கட்டாயம்' என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பு பிரிவை ஏற்படுத்தி கண்காணிப்பை பலப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. அதுபோல 'அந்தந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகங்கள் குறைந்தபட்சம் ஒரு நீர் நிலையையாவது முறையாக பராமரிக்க வேண்டும்' என அறிவுரை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் இந்த ஆண்டு கோடை முடிந்த பின்னரும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக தமிழகத்தில் இந்த ஆண்டு குடிநீருக்கே அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருவ மழை சரிவர பெய்யாமல் குறைந்தது தான் இதற்கு காரணம். அதே நேரம் பெய்த மழை நீரை பாதுகாக்கத் தவறியதும் தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதுபோல 2001ம் ஆண்டில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட கட்டாய மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கிடப்பில் போட்டதும் இப்போது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 'மழை…
Read More
வாடகை வீட்டுச் சிக்கல்களும் புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களும்!

வாடகை வீட்டுச் சிக்கல்களும் புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களும்!

நாடு முழுவதும் வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டம் அமலாகி உள்ள நிலையில், இச்சட்டம் தமிழகத்தில் முதலில் நடைமுறைக்கு வருவது கவனிக்கத்தக்கது.வாடகை வீட்டு சிக்கல்களை தீர்க்க உதவும் புதிய சட்டம் தமிழக அளவில் 2011ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி சுமார் 24 சதவிகித மக்கள் வாடகை வீட்டில் வசித்து வருவதாக அறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழக அரசு கடந்த வருடம் வாடகை மசோதா சட்டத்தை நிறை வேற்றியது. அதுகுறித்த விதிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கன புதிய சட்டம், வாடகை தொடர்பான விதிமுறைகள், நடைமுறைகள் (The Tamil Nadu Regulation of Rights and Responsibilities of Landlord and Tenants Act, 2017) சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பிப்ரவரி முன்றாம் வாரம் முதல் அமலுக்கு வந்துள்ளது. முந்தைய தமிழ்நாடு கட்டுமான வாடகை மற்றும் குத்தகை சட்டத்தின்படி வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம்…
Read More
மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு ! பழனிசாமி அறிவிப்பு !!

மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு ! பழனிசாமி அறிவிப்பு !!

'தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை - 2019'ஐ தமிழக அரசு வெளியிட்டது. மின்சார வாகனங்கள் தயாரிப்பை அதிகரிக்கவும் விலையை குறைக்கும் வகையிலும் பல்வேறு வரி சலுகைகள் புதிய கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் காற்று மாசுபடுவதை குறைக்கவும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக மின்சார வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்ய வசதியாக 'தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை - 2019' தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையை முதல்வர் பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், போக்கு வரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். புதிய கொள்கையின்படி அனைத்து மின்சார இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பஸ்கள், இலகு ரக சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கு 100 சதவீதம் மோட்டார் வாகன வரி விலக்கு 2022ம் ஆண்டு வரை வழங்கப்படும். மின்சார…
Read More