16
Sep
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, தனது ஏடிஎம் கட்டணம், குறைந்தபட்ச இருப்பு தொகை, டெபாசிட் மற்றும் பணம் எடுத்தல் உள்ளிட்ட கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது என்றும் இவ்வங்கி அறிவித்துள்ளது. அதிலும் இவ்வங்கியின் இணைய சேவைகளான மொபைல் வங்கி பரிவர்த்தனைகளுக்கு இவ்வங்கி மாதாந்திர வரம்புகளை முற்றிலுமாக நீக்கியுள்ளது.இதன் மூலம் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் இனி வரம்பற்ற சேவையை பெற முடியும் என்றும், முந்தைய மாதத்தில் 25,000 இருப்பு தொகை வைத்துள்ள சேமிப்பு கணக்குகளுக்கு அதிகபட்சம் 40 பரிமாற்றங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மாதத் சராசரியான இருப்பு தொகை 5,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 3,000 இருப்பு தொகையில் 50 சதவிகிதம் பராமரிக்காதவர்களுக்கு, 10 ரூபாய் அபராதமும், இதனுடன் ஜி.எஸ்.டியும், இதே 75 சதவிகிதம் இருப்பு தொகையை பராமரிக்காதவர்களுக்கு 15 ரூபாய் அபராதமும், இதனுடன் ஜி.எஸ்.டியுடன் சேர்த்து வசூலிக்கப்படும்…
