02
Oct
வாகன தொழில்துறையை மேம்படுத்த டயர் எக்ஸ்போ, கேரேஜ் எக்ஸ்போ கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. உலகம் முழுவதிலுமிருந்து 150 நிறுவனங்கள் அரங்கங்கள் அமைப்பு மொபிலிட்டி துறையில் இந்தியாவின் எதிர்காலம் என்னும் தலைப்பில் கருத்தரங்கு. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்கள் பங்கேற்றார்கள். டயர் மற்றும் வாகனத் தொழில் துறையில் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை தொகுத்து வழங்கும் `டயர் எக்ஸ்போ`கேரேஜ் எக்ஸ்போ மற்றும் `ஆட்டோமோடிவ் ஆப்டர் மார்க்கெட் இந்தியா 2019 பதிப்பு துவக்க கண்காட்சி ஆகியவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. வாகன தொழில்துறைக்கான ஆதாரம், உற்பத்தி, தொழில் பாதுகாப்பு மற்றும் சேவைகள் ஆய்வு, சான்றிதழ், லேபிளிங், உரிமம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உபகரணங்கள், சரக்கு தளவாடங்கள் கையாளுதல்,பட்டறை திட்டமிடல் மற்றும் ஆலோசனை என்னும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை ஒரே கூரையின் கீழ் இந்த கண்காட்சி கொண்டு வருகிறது. இந்த கண்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து…
