பால் விலையை அடுத்து தயிர், நெய் விலையையும் உயர்த்தியது ஆவின்…!

ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, தயிர், நெய், பால்கோவா போன்ற பால் உப பொருட்களுக்கான விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

பசும்பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தியும், எருமைப் பால் கொள்முதல் விலையில் 6 ரூபாய் உயர்த்தியும் தமிழக அரசு அறிவித்தது. கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட காரணத்தால் ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலையும் அதிகரிக்கப்பட்டது. விலை உயர்வானது கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலையில், பால் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து, அதன் உப பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி ஒரு லிட்டர் நெய்யின் விலை 460 ரூபாயில் இருந்து 495 ரூபாயாகவும், ஒரு கிலோ பால் பவுடர் 270 ரூபாயில் இருந்து 320 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பனீர் இனி 450 ரூபாய்க்கு விற்கப்படும். 230 ரூபாய்க்கு விற்பனையான அரை கிலோ வெண்ணெய் விலையில் 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு கிலோ பால்கோவாவின் விலையில் 20 ரூபாயை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பால்கோவா இனி 520 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் டிலைட் பால் அரை லிட்டர் விலை 26 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும், நறுமண பாலின் விலை அரை லிட்டருக்கு 22 ரூபாயில் இருந்து 25 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரை லிட்டர் தயிர் விலையை 25 ரூபாயில் இருந்து 27 ரூபாயாக ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. பால் உப பொருட்களுக்கான விலை உயர்வானது புதன் கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

பேட்டரி கார் தயாரிப்பில் ஹூண்டாய் நிறுவனம் ரூ. 7000 கோடி முதலீடு ! தமிழக அமைச்சரவை ஒப்புதல் !!

ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சரத்குமார் பரிசுகள் வழங்கினார்.

சென்னையின் நிலத்தடி நீர் குறையத் தொடங்கியது.! 2020-ல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா?

தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுக்கு ரோட்டரி கிளப் நிதியுதவி!

நாடு முழுவதும் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் !

இன்னொரு பயங்கரத்தை நோக்கி அமெரிக்கா ? எகிறும் வேலையிழப்புகள் ?

வோடபோன் ஐடியா சேவைகளுக்கான கட்டணங்கள் டிசம்பர் முதல் உயர்வு ?

கோயில் நிலங்களில் வசிக்கும் 20 ஆயிரம் பேருக்கு பட்டா.?