ஆரோக்யம்

‘ரெம்டெசிவைர்’ என்ற புதிய மருந்து ! கரோனாவிலிருந்து விடிவு ஏற்படுமா?

‘ரெம்டெசிவைர்’ என்ற புதிய மருந்து ! கரோனாவிலிருந்து விடிவு ஏற்படுமா?

சயன்ஸ் என்ற இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரையின்படி ரெம்டெசிவைர் (remdesivir) என்ற புதிய வைரஸ் எதிர்ப்பு மருந்து கோவிட்-19-க்கு எதிராக நல்ல பலன் அறிகுறிகளைக் காட்டி வருகிறது.இது வைரஸ் இரட்டிப்பாவதை தடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சார்ஸ் கோவ்-2 என்ற வைரஸ் ஆர்.என்.ஏ-வின் ஒரு இழையே. இது இரட்டிப்பாவதற்கு இது ஒட்டுண்ணியாகச் செயல்பட வேறு ஒன்று தேவை, இந்நிலையில் விஞ்ஞானிகள் ஆர்.என்.ஏ-வை நம்பியிருக்கும் ஆர்.என்.ஏ பாலிமெரேஸ் (RDRp) என்ற செயல்பாங்கிலுள்ள இடத்தைக் கண்டுப்பிடித்துள்ளனர், இதற்கும் போலியோ வைரஸ், ஹெபடைடிஸ் சி வைரசுக்கும் ஒற்றுமைகள் வலுவாக இருப்பதாகக் கூறுகின்றனர். இந்த ஆர்டிஆர்பியில் வேலை செய்யும் மருந்து நுவல் கரோனா வைரஸுக்கும் வேலை செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆர்.என்.ஏ.வை நம்பியிருக்கும் ஆர்.என்.ஏ பாலிமெரேஸ் என்பதுதான் ஆர்.என்.ஏ. இழைகளை உருவாக்கும் எந்திரமாகக் கருதப்படுகிறது. இந்த ரெம்டெசிவைர் என்ற இந்த மருந்து அதனுடன் எந்த இடத்தில் சரியாகப் பிணையும் என்பதையும் விஞ்ஞானிகள் அடையாளம் காட்டியுள்ளனர். ரெம்டெசிவைர் என்ற இந்த…
Read More
மருந்து, மருத்துவச் சாதனங்களுக்கு பற்றாக்குறை ? இந்திய மருந்துகள் துறை எச்சரிக்கை ?

மருந்து, மருத்துவச் சாதனங்களுக்கு பற்றாக்குறை ? இந்திய மருந்துகள் துறை எச்சரிக்கை ?

மருந்து, மருத்துவச் சாதனங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுவரும் பல்வேறு பிரச்சினைகளினால் எதிர்வரும் வாரங்களில் நாடு முழுவதும் பற்றாக்குறைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய மருந்துகள் துறை மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மருந்து உற்பத்தி என்பது வெறும் மருந்துகள் துறையோடு நின்றுவிடுவதில்லை. லாக் டவுன் காலத்தில் முடங்கியுள்ள பல்வேறு துறைகள் சார்ந்தது. தற்போதைய லாக் டவுன் சூழ்நிலையிலேயே மருந்து உற்பத்தியை மீண்டும் தொடங்க தேவையான உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய மருந்துகள் துறை வலியுறுத்தியுள்ளது.உலகமே கரோனா வைரஸ் என்னும் மோசமான ஆட்கொல்லி கிருமியால் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்தியாவிலும் அதன் ஊடுருவல் நாட்டின் இயல்புத்தன்மையையே முடக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. இதனால் மருந்துகள் மட்டுமே உச்சபட்சத் தீர்வு என்ற நிலையில் இந்தியாவின் மருந்து உற்பத்தி உலக சந்தையிலும் பெரும் தேவையாக உள்ளது. அதே நேரம் இந்திய மக்களுக்கும் இன்றைய நிலையில் தவிர்க்கமுடியாத ஒன்றாக உள்ளது. ஆனால்,…
Read More
கபத்தைப் போக்கும் பூண்டு.!

கபத்தைப் போக்கும் பூண்டு.!

வெள்ளைப்பூண்டை பச்சையாக சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும் என நினைப்பவர் உள்ளனர். அப்படி சாப்பிட்டால் அதில் உள்ள "ஆசிட்" நேரடியாக வயித்துக்குள் சென்று, வயிற்றில் பிரச்னையை உருவாக்கி விடும். எதை எப்படி சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை உள்ளது.தினமும் வெள்ளைப்பூண்டை வேக வைத்தோ, தீயில் சுட்டோ சாப்பிட்டு வரலாம். உயர் ரத்த அழுத்தம் இதனால் குறையும்; இதயத்துக்கும் நல்லது. ரத்தக்குழாயில் படியும் கொழுப்பையும் வெளியேற்றும். பூண்டுச் சாறோடு தண்ணீர் சேர்த்து சாப்பிடலாம். காலரா, நிமோனியா காய்ச்சல் வந்தால், பூண்டுச்சாற்றில் தண்ணீர் கலந்து குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். வயிறு உப்புசம், பக்கவாதம், இதயநோய்,வயிற்று வலி போன்ற பல நோய்களுக்கு,வெள்ளைப்பூண்டு நல்ல மருந்து. நெஞ்சு சளி பிடித்தால், 50 மில்லி பால், 50 மில்லி தண்ணீரில், 10, 12 பூண்டுப்பல்லை உரித்துப்போட்டு வேக வைக்க வேண்டும். நன்கு வெந்ததும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், 2, சிட்டிகை மிளகுத்தூள், தேவையான அளவு பனங்கல்கண்டு…
Read More
நடமாடும் ரயில் மருத்துவமனை !

நடமாடும் ரயில் மருத்துவமனை !

உலகின் மிகபெரிய ரயில்வே என அழைக்கபடும் இந்திய ரயில்வே கொரோனா காரணமாக சேவையினை நிறுத்தியது நமக்கு தெரியும், அதைவிட மகா முக்கிய காரியம் ஒன்றை செய்கின்றது.ரயில் பெட்டிகளை கொரோனா மருத்துவ பெட்டிகளாக மாற்றுகின்றது, ஒரு பெட்டிக்கு 16 பேர் தங்கலாம், 20 ஆயிரம் பெட்டிகள் தயார்.ஆக இந்தியாவில் 3.2 லட்சம் பேர் ரயிலிலே சிகிச்சை பெறலாம் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இது நடமாடும் மருத்துவமனை, டெல்லி முதல் கன்னியாகுமரி வரை எங்கே கொரோனா அதிகமென்றாலும் இந்த ரயில் செல்லும், நோயாளிகளை ஏற்றி, நோயாளியினை தேடி மருத்துவமனையே செல்லும் ஏற்பாடு இது, அட்டகாசமான உத்தி, கொரோனா காலத்தில் மிக சரியான ஏற்பாடு.3.2 லட்சம் பேர் வரை ரயிலிலே எங்களால் சமாளிக்க முடியும் என இந்தியா சொல்லியிருப்பதை கண்டு உலகம் கைதட்டி வரவேற்கின்றது.உலகுக்கே வழிகாட்டுகின்றது என மகிழ்ந்து சொல்கின்றது சர்வதேச ஊடகங்கள்.உலகின் மிகபெரிய ரயில்வேயினை, மிகபெரும் மக்கள் தொகை கொண்ட இத்தேசத்துக்கு…
Read More
மலச்சிக்கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன….?

மலச்சிக்கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன….?

மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணம், நம் உணவு முறை. கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது. பால் சார்ந்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவது, பிட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் அதிக அளவில் சாப்பிடுவதேயாகும்.நார்ச்சத்துள்ள உணவு வகைகளைக் குறைவாகச் சாப்பிடுவது. தண்ணீர் குறைவாகக் குடிப்பது. காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடாதது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள் தான் பலருக்கும் மலச்சிக்கலை உண்டாக்குகின்றன. தினமும் மலம் கழிக்கும் முறை சரியாக அமையாவிட்டால், அது நாளடைவில் மலச்சிக்கலுக்கு வழி வகுக்கும். குறிப்பாக, மலம் வருகிற உணர்வு உண்டாகும்போது கழிப்பறை அருகில் இல்லாதது, முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பது, பயணத்தில் இருப்பது போன்ற காரணங்களால் மலம் கழிப்பதைத் தவிர்த்தால் காலப்போக்கில் பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகள் செயலிழந்து மலத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற உணர்வைத் தெரிவிக்காது. இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படும். முதுமையில் உணவுமுறை மாறுவது, உடற்பயிற்சி…
Read More
கொரோனாவால் ஏற்படும் மன அழுத்தத்தை எப்படிசரிசெய்வது?

கொரோனாவால் ஏற்படும் மன அழுத்தத்தை எப்படிசரிசெய்வது?

1. கொரோனா தொற்று தடுப்பு எவ்வளவு முக்கியமானதோ அதேபோன்று தொற்று தாக்கிய காலங்களில் மனநலம் பேணுவதும் மிக முக்கியமானதாகும். ஏனெனில் நோய் தொற்று தாக்குதலில் இருந்து விடுபடுவதற்கு தனிமைப்படுத்துதல் அவசியமாகி விடுகிறது. 2. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பிறரிடம் தொடர்பு இல்லாமல் இருப்பதால் மனசோர்வு நோய்க்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. எதிர்கொள்ள இருக்கும் நிச்சயமற்ற காலத்தை நினைக்கும்போது மனஅழுத்தம் ஏற்படும். வீட்டில் அவர்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்துவிடும் நிலையில் உதவி செய்ய ஆள் இல்லாதபோது மனம் பதற்றமடையும். 3. இயல்பாக தும்மலோ, இருமலோ, மூக்கில் பசபசப்போ வெளிப்பட்டால் இது கொரோனாவின் அறிகுறி என்று அச்சப்படும் நிலை ஏற்படும். விடுமுறை காலங்களில் இணையதள பயன்பாட்டையே நம்பி இருப்பதால் அதிலிருந்து விடுபட முடியாமலும், அதற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையும் ஏற்படும். பேரிடர் நீங்கி, சமூக அமைதி திரும்பிய பின்னரும், பேரிடர் காலத்தில் கடந்து வந்த எதிர்மறை சம்பவங்களின் பிரதிபலிப்பாக மன அழுத்தம்,…
Read More
சமூக விலகல் பயத்தை கொண்டு வந்து பயம் என்பது தினசரி பிரச்னைகளில் ஒன்றாகி விட்டது.?

சமூக விலகல் பயத்தை கொண்டு வந்து பயம் என்பது தினசரி பிரச்னைகளில் ஒன்றாகி விட்டது.?

கொரோனா' வைரஸ் தொற்றால், சீனாவின் குறிப்பிட்ட பகுதி மக்கள் பாதிக்கப்படும் செய்தியை படித்த போது, இங்கு வரும் சீனர்கள், நமக்கும் இதை பரப்பி விடுவரோ என்ற சந்தேகம் இருந்தது. அடுத்த கட்டமாக, நம் நாட்டிலும், இதன் பாதிப்பு வரத் துவங்கியதும், எங்கே நமக்கும் வந்து விடுமோ என்ற பயம் வர ஆரம்பித்தது.உலகம் முழுதிலும் இதன் பாதிப்பால், ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாவதும், அதில், பலர் உயிர் இழப்பதையும் பார்த்த போது, பயம் இன்னும் அதிகமானது. தொற்று பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த போது, 'இது ஏதோ வெளிநாட்டில் வந்த பிரச்னை இல்லை; என்னுடைய நாட்டில், எனக்கு வந்திருக்கும் பிரச்னை' என்ற பயம், இன்னும் அதிகமானது.இதற்கும் ஒருபடி மேல் சென்று, 'யாருடனும் நெருங்க கூடாது... வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, சமூக விலகல் ஒன்று தான் வழி' என்று சொல்லி, அதை…
Read More
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் Vs கொரோனாவைரஸ் ? என்ன நடக்கிறது உடலுக்குள் ?

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் Vs கொரோனாவைரஸ் ? என்ன நடக்கிறது உடலுக்குள் ?

வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் இருந்து ஒரு கப்பல் அந்த நாட்டின் மேற்குப் பகுதிக்கு வர வேண்டுமானால் பல்லாயிரம் கி.மீ அட்லாண்டிக் கடலில் பயணம் செய்து, தென் அமெரிக்க கண்டம் முழுவதையும் சுற்றிக் கொண்டு பின்னர் அட்லாண்டிக் கடலில் பல ஆயிரம் கி.மீ. பயணித்து, கிட்டத்தட்ட அண்டார்டிகா வரை போய், அமெரிக்காவின் மேற்குப் பகுதியை அடையக் கூடிய நிலை இருந்தது. கொல்கத்தாவில் இருந்து ஒரு கப்பல் மும்பைக்கு வர வேண்டுமானால், எப்படி இலங்கையை சுற்றித் தான் வர வேண்டுமோ அப்படி! ஆனால், இந்த இரு அமெரிக்க கண்டங்களுக்கு இடையே மத்திய அமெரிக்காவில் பனாமா நாட்டின் ஓரிடத்தில் ஒரு சிறிய நீர் வழிப்பாதை இந்த இரு கடல்களையும் இணைக்கிறது. மிகக் குறுகிய இந்த நீர் வழிப் பாதையில் சிறிய படகுகள் மட்டுமே செல்ல முடியும். இங்கே பெரும் கப்பல்கள் பயணிக்க வேண்டுமானால், 82 கி.மீ தூரத்துக்கு இந்த நீர் வழிப்பாதையை அகலப்படுத்தியாக வேண்டும்.…
Read More
பிளாஸ்மா சிகிச்சையை கையில் எடுக்கும் தமிழகம்?

பிளாஸ்மா சிகிச்சையை கையில் எடுக்கும் தமிழகம்?

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலக அளவில் இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், பிளாஸ்மா சிகிச்சையை முறையை மேற்கொள்ள கேரள அரசுக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதியளித்துள்ளதை அடுத்து தமிழக அரசும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசிற்கு 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் கண்டறியப்பட்டு 4 மாதம் ஆன நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்தவொரு மருந்தும் கண்டறியப்படவில்லை. மலேரியாவுக்கு பயன்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து, நோயை கட்டுப்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பரிந்துரைத்தாலும் அது இன்னும் நிரூபிக்கப்படாத சோதனையாகவே உள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க மாற்று வழியான பிளாஸ்மா சிகிச்சை முறையை கையாள டாக்டர்கள் முடிவு செய்தனர். அதாவது, ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து சிகிச்சையளிக்கும் முறையாகும்.ஒருவர் உடலில் கொரோனா வைரஸ் தொற்றும்போது, அதற்கு எதிரான தனி நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகின்றன. உதாரணமாக அம்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவருக்கு…
Read More
தினமும் நான்கு வேப்பிலை கொழுந்து உண்டு வந்தால் ஏற்படும் நன்மைகள்!

தினமும் நான்கு வேப்பிலை கொழுந்து உண்டு வந்தால் ஏற்படும் நன்மைகள்!

பொதுவாக வேப்பிலை மரம் நகரத்தில் பல இடங்களில் காணப்படும். எளிதாய் கிடைக்கும் இந்த வேப்பிலையில் பல நன்மைகள் உண்டு.தமிழ்நாட்டின் பாரம்பரிய ஆயுர் வேதத்தின் ஆணி வேறாக கருதப்படும் வேப்பிலையின் பயன்களை பற்றி தான் அறிந்து கொள்ளப்போகிறோம். இன்றைய கால கட்டத்தில் நோய்க்கு கட்டுப்பாடே கிடையாது. பல விதமான நோய்கள் பெயர் கூட தெரியாத நோய்கள் மக்களை வதைக்கிறது. இதற்கெல்லாம் மருந்து இருக்கிறதா இல்லையா என்பதே ஒரு பெரும் கேள்வியாக மக்களிடம் உள்ளது.ஆனால் நம் தமிழகத்தில் அனைத்திற்கும் தீர்வு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே கண்டு பிடிக்கப்பட்டது. அப்படி நம் முன்னோர்கள் கண்டறிந்த நோய் தீர்க்கும் மற்றும் நோயை அண்ட விடாத ஓர் இயற்கையின் அற்புதம் தான் வேப்பிலை கொழுந்து. தினமும் நான்கு வேப்பிலை கொழுந்து உண்டு வந்தால் பெரும் நன்மைகள்! வேப்பிலை கசாயம் கிருமிகளை கொன்று காய்ச்சலை குணப்படுத்தும் தன்மை கொண்டதாகும்.வயிற்றுப் புண்களை ஆற்றி, கிருமிகளை அழித்து வயிற்றை முற்றிலும் சுத்தப்படுத்தி…
Read More