நமது முன்னோர்கள் உணவில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, காரம் போன்றவற்றை மிகுந்த நேர்த்தியாக கையாண்டனர். ஒவ்வொரு சுவைக்கும் இயற்கை ரீதியாகவே பல்வேறு பொருட்களை கையாண்டனர். இயற்கையும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது. அதன் காரணமாக அவர்கள் நோய் நொடியின்றி வாழ்ந்து வந்தனர்.
ஆனால் நமது பாரம்பரியத்தை சீரழிக்கவும், நாகரீகம் என்ற போர்வையில் பல்வேறு பக்கவிளைவுகளை உருவாக்கும் பொருட்களை மனிதன் இடையில் புகுத்தியதன் விளைவு இன்று நோய் இல்லாத மனிதர்களை உருவாக்க காரணமாக அமைந்து விட்டது.மேற்கண்ட கெடுதல் தரும் பொருட்களில் முதன்மையாக இருப்பது வெண் சர்க்கரை, வெள்ளை சர்க்கரை என்பது இடையே உட்புகுந்த ஒரு விஷயமாகும். ஆரம்பக் காலத்தில் பனங்கற்கண்டு, கருப்பட்டி வெல்லம், கரும்பு சர்க்கரையை தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த காலத்தில் இப்போது போல உடல் பருமனோ, நீரிழிவு நோயோ இருந்ததாக யாரும் கேள்விப்பட்டதே இல்லை.
நீரிழிவு என்பது பரம்பரை வியாதி என்பது மாறி காய்ச்சல், சளி போல அனைவருக்கும் உண்டாக காரணமாக இருப்பதே இந்த வெள்ளை சர்க்கரை தான். உணவில் நிற வேறுபாடு ஏற்பட்ட பிறகு தான் நமது உடலிலும், உடல் நலத்திலும் நிறைய வேறுபாடுகள் உண்டாக ஆரம்பித்தன…வெள்ளை சர்க்கரையில் ஃபிரக்டோஸ் அளவு அதிகம். இது கல்லீரலில்அதிகப்படியான கொழுப்பு சேர்வதற்கு காரணியாக இருக்கிறது. இதனால் கல்லீரல் செயல்திறன் பாதிப்பு அதிகரிக்கிறது.கரும்பு சர்க்கரையில் இதுபோன்ற பிரச்சனையில்லை. நமது கல்லீரல் மட்டுமின்றி உடலில் இருக்கும் நச்சுக்களையும் போக்கி சுத்திகரிப்பு செய்ய கரும்பு சர்க்கரை உதவுகிறது.
வெள்ளை சர்க்கரை நேரடியாக கல்லீரலில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் செரிமான மண்டலத்தையும் பாதிக்கிறது. இதனால் செரிமான கோளாறுகள், மலம் கழித்தல் பிரச்சனைகள் உண்டாகவும் வெள்ளை சர்க்கரை ஓர் காரணியாக திகழ்கிறதுகரும்பு சர்க்கரை குடலியக்கத்தை ஊக்குவித்து செரிமானத்தை சரி செய்ய உதவுகிறது.வெள்ளை சர்க்கரையில் கலோரிகள் அதிகம், நீங்கள் பருகும் அனைத்து குளிர் பானங்களிலும் செயற்கை சர்க்கரையின் அளவு அதிகம். இதனால் தான் உடல்பருமன் மற்றும் நீரிழிவு பாதிப்புகள் அதிகமாக உண்டாகின்றன. குழந்தைகள் தொடர்ந்து வெள்ளைச் சர்க்கரையை அதிகம் கலக்கும் குளிர்பானங்களை குடிப்பதால் அளவிற்கு மீறிய உடல் பருமன் ஏற்படவும் இந்த வெள்ளைச் சர்க்கரைத்தான் காரணமாகத் திகழ்கிறது.கரும்பு சர்க்கரையில் கலோரிகள் குறைவு மற்றும் இது இயற்கை சர்க்கரை. நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் கூட இதை உட்கொள்ளலாம் என நாட்டு மருத்துவர்கள் கூறுகின்றனர்.