முகக்கவசத்தில் கொரோனா 7 நாட்கள் வரை உயிழ் வாழும் ? ஆய்வில் வெளியான தகவல்கள் ?

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் கோரத்தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. இதனால் இதை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து நாடுகளும், ஊரடங்கு உத்தரவிட்டது. இந்நிலையில், முகக்கவசத்தில் கொரோனா 7 நாட்கள் வரை உயிர் வாழும் என்றும், ரூபாய் நோட்டுகள் மற்றும் எவர்சில்வர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களின் மீது சில நாட்கள் உயிர் வாழலாம் என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் கிருமி நாசினிகள் மற்றும் பிளீச்சிங் பவுடர்கள், சோப்கள் போன்றவை வைரஸை எளிதில் கொன்று விடலாம் என்பதும் தெரியவந்துள்ளது. அதிலும் , அச்சடிக்கப்பட்ட காகிதம், டிசு பேப்பர் போன்றவற்றில் குறைந்தது 3 மணிநேரத்திற்கு, மரப்பலகை மற்றும் துணிகளில் இரண்டு நாட்கள் வரையிலும் உயிருடன் இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது முகக்கவசம் அணியும் நபர்கள், முகக்கவசத்தின் வெளிப்புறத்தில் தொடாமல் இருப்பது பாதுகாப்பானது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.