சினிமா

கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ மிஸ்டர். ஜூ கீப்பர்’.

கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ மிஸ்டர். ஜூ கீப்பர்’.

ஜெ4 ஸ்டூடியோஸ் சார்பில் எஸ். ராஜரத்தினம் மற்றும் டி. ஜெபா ஜோன்ஸ் தயாரிப்பில், ஜெ. சுரேஷ் இயக்கத்தில், 'குக் வித் கோமாளி' மூலம் பிரபலமான நடிகர் புகழ் முதல் முறையாக நாயகனாக நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ' மிஸ்டர். ஜூ கீப்பர்'. ஒரு புலியைக் காப்பாற்றப் போராடும் ஒரு எளியவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து, ஒரு அழகான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடிகர் சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள சென்னையில் புதன்கிழமை (பிப்ரவரி 7) இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் டி. ஜெபா ஜோன்ஸ் பேசியது… என்னுடைய தயாரிப்பில் இது ஏழாவது திரைப்படம். சின்ன பட்ஜெட்டாக ஆரம்பித்த படம், இப்போது பெரிய படமாக வந்துள்ளது. இதுவரை திரையுலகில் இல்லாத வகையில் நிஜமான புலியை வைத்துப் படத்தை எடுத்துள்ளோம். இந்த மாதம் படம்…
Read More
சாம்சங் BKC லைஃப்ஸ்டைல் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்டு பிளாசாவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது!

சாம்சங் BKC லைஃப்ஸ்டைல் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்டு பிளாசாவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது!

சாம்சங் BKC லைஃப்ஸ்டைல் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்டு பிளாசாவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது; AI-ஆற்றல்கொண்ட இணைக்கப்பட்ட சாதன அனுபவங்களைக் காட்சிப்படுத்துகிறது. சாம்சங் BKC ஆனது சாம்சங்கின் அதிநவீன மற்றும் சமீபத்திய பிரீமியம் தயாரிப்புகள் மற்றும் அதன் இணைக்கப்பட்ட பல்-சாதன சூழல் அமைப்பு முழுவதும் வலுவான கலவையைக் காட்சிப்படுத்தும். வாடிக்கையாளர்கள் ஜனவரி 23 முதல் சாம்சங் BKC இல் சமீபத்திய கேலக்ஸி S24 தொடரை காணலாம் முன் பதிவு செய்யலாம் ஜனவரி 31, 2024 - இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் மின்னணு நிறுவனமான சாம்சங், இன்று இந்தியாவில் தனது முதல் ஆன்லைன்-டு-ஆஃப்லைன் (O2O) லைஃப்ஸ்டைல் ஸ்டோரை, மும்பையில் ரீடெயில் விற்பனை, ஓய்வு மற்றும் உணவருந்துவதற்காக சமீபத்தில் திறக்கப்பட்ட அதி-சொகுசு வளாகம், ஜியோ வேர்ல்ட் பிளாசா மாலில் தொடங்கியுள்ளது. இது, இந்தியா மீதான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. சாம்சங் BKC, மும்பையின் மத்திய வணிக மையமான பாந்த்ரா குர்லா வளாகத்தில் ஜியோ வேர்ல்ட்…
Read More
கவிதைகளுக்கு இசை அமைக்கும் சின்னஞ்சிறு பாடல்கள் கபிலன்வைரமுத்து பாலமுரளிபாலு மற்றும் இசைக் கலைஞர்களின் உருவாக்கம்.எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் கபிலன்வைரமுத்து, இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இணைந்து சின்னஞ்சிறு பாடல்கள் என்ற இசை ஆல்பம் ஒன்றைத் தயாரித்திருக்கிறார்கள். கபிலன்வைரமுத்து எழுதிய கடவுளோடு பேச்சுவார்த்தை, மனிதனுக்கு அடுத்தவன், மழைக்கு ஒதுங்கும் மண்பொம்மை போன்ற பல்வேறு கவிதை நூல்களில் இருந்து ஐந்து கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை மூன்று நிமிடங்களுக்கு மிகாத சிறிய பாடல்களாக வடிவமைத்திருக்கிறார்கள். ‘அணுவைத் துளைத்து ஏழ்கடல் புகுத்துவது மாதிரி சிறிய பாடல்களுக்குள் ஆழ்மன உணர்வுகளைச் சொல்ல வேண்டும் என்பதுதான் எண்ணம்’ என்று இசை ஆல்பத்தின் அறிமுகக் காணொளியில் கபிலன்வைரமுத்து கூறியிருக்கிறார். தில்லை, பாலை, சிந்துவாரம், புன்னை, மகிழம் என சங்கப் புலவர் கபிலர் பாடிய 99 வகையான பூக்களில் ஐந்து பூக்களின் பெயர்களை ஐந்து பாடல்களுக்கு சூட்டியிருக்கிறார்கள். பாடல்களை பிப்ரவரி முதல் வாரம் தொடங்கி ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட இசைக்குழு திட்டமிட்டிருக்கிறார்கள். ரம்யா…
Read More
ஜவான்' புகழ் இசையமைப்பாளர் அனிருத் தனது 'ஹுக்கும்- வேர்ல்ட் டூரை’ துபாயில் இருந்து ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளார்! இசை மாஸ்ட்ரோ என ரசிகர்களால் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் அனிருத், துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் 'ஹூக்கும் வேர்ல்ட் டூர் - அலப்பரை கெளப்பறோம் கான்செட்ர்ட்'டை அறிவித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் பாலிவுட் திரைப்படமான ’ஜவான்’ உட்பட தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில்தான் உலகம் முழுவதுமான தனது இசைப்பயணத்தை துபாயில் இருந்து ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளார். இந்தியாவின் முதன்மையான நிகழ்வு மேலாண்மை நிறுவனமான பிராண்ட் அவதார் (Brand Avatar), இந்தியாவைத் தளமாகக் கொண்ட ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை அமைப்பான பல்ஸ் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த இசை நிகழ்ச்சி, பிப்ரவரி 10, 2024 அன்று துபாய் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த இருக்கிறது. இந்த நிகழ்வு பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் இசை தாக்கங்களைக் கொண்ட…
Read More
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில், கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் “’சிங்கப்பூர் சலூன்’ படம் ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் எடிட்டர் ஆர்.கே. செல்வா, “’சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நான் இருக்க முக்கிய காரணம் எனது நண்பர், சகோதரர் ஆர்.ஜே. பாலாஜிதான். அவர்தான் என்னை இயக்குநர் கோகுலுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். படத்தின் கதை ஃபன்னாகவும் அதே சமயம் எமோஷனலாகவும் இருந்தது. கோகுல் சாரின் ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ படம் தியேட்டரில் ரொம்ப என்ஜாய் பண்ணிப் பார்த்தேன். அதில் விஜய் சேதுபதி சார் வேற மாதிரி நடித்திருந்தார். அப்படியான ஒரு இயக்குநரிடம் நான் பணிபுரிய போகிறேன் என்பதே மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் ஆர்.ஜே. பாலாஜியை நல்ல நடிகராகப் பார்க்கலாம். இந்த வாய்ப்புக் கொடுத்த ஐசரி கணேஷ் சாருக்கு…
Read More
'தமிழர் திருநாள் தையே', ஜேம்ஸ் வசந்தன் இசையில், கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், நடிகர்-இயக்குநர் சசிகுமார் தோன்றும் பொங்கல் பாடல் வெளியீடு ஜேம்ஸ் வசந்தன் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள 'தமிழர் திருநாள் தையே' பொங்கல் பாடலில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்கத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பில் முக்கிய பொறுப்பு வகிப்பவரும் தொழிலதிபருமான கால்டுவெல் வேள்நம்பி இந்தப் பாடலின் தேவையை உணர்ந்து இதை தயாரிக்க முன்வந்தார். பொங்கல் பண்டிகை, தமிழர்களின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அதன் மகத்துவத்தை இந்த பாடல் கொண்டாடுகிறது. 'தமிழர் திருநாள் தையே' பாடலில் சசிகுமார் உடன் வேல்முருகன், பிரியங்கா என் கே, அமர்முகம், நந்தினி, கோபிநாத் சாய் லலிதா மற்றும் புவி, ஜேம்ஸ் வசந்தன், கால்டுவெல் வேள்நம்பி உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். முதல் யூனிட் இயக்குநர் பூபேஷ் எஸ். மற்றும் இரண்டாம் யூனிட் இயக்குநர் ராஜா குருசாமி இணைந்து இந்த கண்கவர் வீடியோ பாடலை…
Read More
அபிஷேக் செளபே இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள ’கில்லர் சூப்’ தொடர் பற்றி துபாளி! நெட்ஃபிளிக்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீரிஸான ‘கில்லர் சூப்’ க்ரைம், டார்க் காமெடி, விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றுக்காக அதன் தனித்த வெற்றியைத் தக்க வைத்துள்ளது. இதன் திரைக்கதை மட்டுமல்லாது, இதில் நடித்துள்ள நடிகர்களின் திறமையான நடிப்பும் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. அதன் மையத்தில் துபாளி என்ற கதாபாத்திரம் உள்ளது. குறிப்பாக இயக்குநர் அபிஷேக் செளபாயின் வழிகாட்டுதலில் உருவாகியுள்ள துபாளி கதாபாத்திரம் மூலம் தன்னைப் பற்றி இன்னும் அதிகம் கண்டறிந்ததாக சொல்கிறார் அன்புதாசன். தமிழில் ’மீசைய முறுக்கு’, ‘கோலமாவு கோகிலா’, ’ஸோம்பி’, ’ஆதித்ய வர்மா’ மற்றும் ’ஓ மணபெண்ணே’ போன்ற வெற்றிப் படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் அன்புதாசன். ’கில்லர் சூப்’ தொடரில் துபாளி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் தன்னை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றிருக்கிறார் நடிகர் அன்புதாசன். இதுகுறித்து உற்சாகமாக அவர் பகிர்ந்துகொண்டிருப்பதாவது, "அபிஷேக் சௌபேயுடன் இணைந்திருப்பது…
Read More
மாஸ் ஹீரோ என்டிஆர் நடிப்பில், கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தேவரா’ படத்தின் முதல் பாகத்தின் கிளிம்ப்ஸ் சர்வதேச தரத்துடன் வெளியாகியுள்ளது! மாஸான புதிய அவரதாரத்தில் நடிகர் என்டிஆர் மிரட்ட உள்ள ஆக்‌ஷன் டிராமா திரைப்படம் ‘தேவரா’. இந்தப் படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். சயிஃப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட இயக்குநர் கொரட்டாலா சிவா திட்டமிட்டுள்ளார். இதன் முதல் பாகமான, ‘தேவரா பார்ட்1’ உலகெங்கிலும் ஏப்ரல் 5, 2024 அன்று தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தினை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். ‘தேவரா’வின் உலகை அறிமுகப்படுத்தும் வகையிலான கிளிம்ப்ஸ் இன்று வெளியாகியுள்ளது. விஷூவல்ஸ், இசை என சர்வதேச தரத்துடன் இந்த பான் இந்தியா கிளிம்ப்ஸ் உருவாகி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி…
Read More
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யமாஹா வழங்கும் அற்புதமான சலுகைகள்.150cc FZ மாடல் வரம்பு மற்றும் 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர்களில் இப்புதிய சலுகைகளும் நிதி திட்டங்களும் பொருந்தும்தமிழகத்தில் அறுவடைத் திருநாளான பொங்கலைக் கொண்டாடும் வகையில், யமாஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. 31 ஜனவரி 2024 வரை செல்லுபடியாகும் இந்தப் பிரத்யேக சலுகைகள் Yamahaவின் 150cc FZ மாடல் வரம்பு, FZ16 மற்றும் 125cc Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர்களுக்குப் பொருந்தும். வழங்கப்படும் சலுகைத் திட்டங்கள் கீழ்க்காணுமாறு: 150cc FZ-S Fi V4, FZ-S Fi V3 மற்றும் FZ Fi ஆகியவற்றில் ரூ. 6,000/- வரையிலான பலன்கள் அல்லது ரூ. 1,999/- டவுன் பேமெண்ட் சலுகை FZ-X இல் ரூ.7,000/- வரையிலான பலன்கள் அல்லது ஜீரோ டவுன் பேமெண்ட் சலுகை 125 Fi ஹைபிரிட் ஸ்கூட்டர்கள் - RayZR மற்றும் Fascino ஆகியவற்றில் ரூ.4,000/- வரையிலான…
Read More
அன்னதானம் வழங்கி பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் வெற்றி!! தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகரான வெற்றி இன்று தன் பிறந்தநாளை, கோவிலில் எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடியுள்ளார் . தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் இடம்பிடித்து,  நல்ல நடிகர் என்றும் பெயர் வாங்குவது, அரிதினும் அரிதான விஷயம். ஆனால் அறிமுகமாகி எட்டு தோட்டாக்கள், ஜீவி என முதல் இரண்டு படங்களிலேயே, அந்த உயரத்தை அடைந்தவர் நடிகர் வெற்றி. அவர் படங்களின் கதை களங்கள் மற்ற படங்களிலிருந்து வேறுபட்டு, ரசிகர்களின் ரசிப்பு திறனை கூட்டுவதாக அமைந்துள்ளது. தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படங்களிலும் தன்னை மெருகேற்றிக் கொள்வதோடு, ரசிகர்களுக்கும் விருந்து படைத்து வருகிறார் வெற்றி. அவருக்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் மிக முக்கியமானவராக கருதப்படும் வெற்றி, தன் படங்கள் போலவே தன் பிறந்தநாளையும் தனித்துவமாக கொண்டாடியுள்ளார். தான் வசிக்கும்…
Read More