சினிமா

ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் !

ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் !

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் சாம் சி.எஸ். இசையில் விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லராக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரித்து இயக்கிய 'ருத்ரன்' திரைப்படம் சமீபத்தில் பெரும் வெற்றியை பெற்றது. அதே போன்று கதிரேசன் தயாரித்து இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த 'டைரி'யும் வெற்றிப் படமாகும். இவற்றைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் மற்றும் இன்னாசி பாண்டியன் ஆகியோருடன் தயாரிப்பாளர் கதிரேசன் மீண்டும் இணைந்துள்ளார். விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் ஆக உருவாக உள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் நாயகனாக நடிக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் இத்திரைப்படம் தயாராகிறது. பிரபல…
Read More
நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்காக, 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். இது விஷாலின் 34வது படமாகும். இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யாண் சுப்பிரமணியம் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர்கள் ஆவர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் இன்று தொடங்கியது. திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் படக் குழுவினர் இதில் பங்கேற்றனர். தேவி ஶ்ரீ பிரசாத் அதிரடி இசையில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படம் சென்னை, தமிழ்நாட்டின் தென் பகுதிகள், ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்படவுள்ளது.…
Read More
“லவ்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

“லவ்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

RP Films சார்பில் RP பாலா தயாரித்து இயக்க, நடிகர்கள் பரத் - வாணி போஜன் நடிப்பில், காதல், த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள படம் "லவ்". ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மூத்த பத்திரிக்கையாளர்கள் இணைந்து “லவ்” படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர். பாடலாசிரியர் AA PA ராஜா பேசியதாவது... முதலில் பிஜி முத்தையா சார் தான் இந்த படத்திற்காக என்னை கூப்பிட்டார். இயக்குநர் யாரெனக் கேட்டபோது RP பாலா என்றார். அவரே பல படங்களுக்கு பாடல்கள் எழுதியவர், மிகச்சிறந்த பாடலாசிரியர். அவர் என்னை ஏன் கூப்பிடுகிறார் என்று தோன்றியது. பாடல் எழுதத் தெரிந்த இயக்குநரிடம் பணிபுரிவது மிகக் கடினம். ஆனால் அவர் நான் பிஸியாக இருக்கிறேன், நீங்கள் எழுதுங்கள் என்றார். வைரல் வரிகள் இல்லாமல் முழுக்க தமிழில் பாட்டுக் கேட்ட முதல் இயக்குநர் இவர் தான். அதுவே மிக…
Read More
தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர் !

தோனி மற்றும் சாக்ஷி தோனி வெளியிட்ட LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர் !

மகத்தான கிரிக்கெட் வீரரான முதன்மை கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” சார்பாக தயாரித்து இருக்கும் LGM (LET”S GET MARRIED) திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திங்கள்கிழமை அன்று கோலாகலத்துடன் ஆரவாரமாக நடைபெற்றது. “தோனி எண்டர்டெயின்மெண்ட்” நிறுவனத்தின் மூலம் முதன்முறையாக திரைப்படத் தயாரிப்புத் துறைக்குள் நுழைந்திருக்கும் மாபெரும் கிரிக்கெட் வீரரான தல தோனி அவர்கள், தன் மனைவி சாக்ஷி தோனியுடன் சேர்ந்து தயாரித்திருக்கும் LGM திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலரை திரை பிரபலங்கள், ஊடக, பத்திரிக்கை, இணைய நிருபர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். LGM திரைப்படம் காமெடிக் காட்சிகள் நிறைந்த குடும்பத்தோடு கண்டு ரசிக்கக் கூடிய ஒரு திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நாயகன் நாயகியாக ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா…
Read More
டாக்டர் சிவராஜ் குமாரின்,’சிவண்ணா எஸ்சிஎஃப்சி01′ (#ShivannaSCFC01) பான் இந்தியா படமாக உருவாகிறது!

டாக்டர் சிவராஜ் குமாரின்,’சிவண்ணா எஸ்சிஎஃப்சி01′ (#ShivannaSCFC01) பான் இந்தியா படமாக உருவாகிறது!

டாக்டர் சிவராஜ் குமார், கார்த்திக் அத்வைத், சுதீர் சந்திர பாதிரியின் புதிய திரைப்படம் 'சிவண்ணா எஸ்சிஎஃப்சி01' (#ShivannaSCFC01) பான் இந்தியா படமாக உருவாகிறது கன்னட சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்கும் இளம் தமிழ் இயக்குநர் சிவண்ணா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கன்னட சூப்பர்ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுதீர் சந்திர பாதிரியுடன் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளார். சிவராஜ் குமாரின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கான்செப்ட் போஸ்டர் ஒன்றின் மூலம் வெளியிடப்பட்டது. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் எஸ்சிஎஃப்சியின் (சுதீர் சந்திரா பிலிம் கம்பெனி) இந்த பான் இந்தியா திரைப்படத்தை விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தைத் இயக்கிய கார்த்திக் அத்வைத் இயக்குகிறார்.'சிவண்ணா எஸ்சிஎஃப்சி01' (#ShivannaSCFC01) என்று அழைக்கப்படும் இத்திரைப்படம் அதிக பொருட்செலவில் வலுவான தொழில்நுட்ப கூட்டணியுடன் உருவாகிறது. 'விக்ரம் வேதா' மற்றும்…
Read More
இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் ‘அநீதி’ திரைப்படத்தின் இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா !

இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் ‘அநீதி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு 'பிளட் அண்டு சாக்லேட்' என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘அநீதி’ திரைப்படத்தின் இசை மட்டும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் கூறியதாவது... "இயக்குநர் வசந்த பாலன் இயக்குநர் ஷங்கரிடம் இருந்து வந்தவர். 'அநீதி' திரைப்படம் எப்படி இருக்கும் என்பதற்கு வசந்தபாலனின் முந்தைய திரைப்படங்களே சான்று. ஒரு படத்திற்கு தயாரிப்பாளர் கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று சொல்வார்கள், இங்கு நண்பர்கள் அனைவரும் சேர்ந்து தயாரிப்பாளர்கள் ஆகி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்று அதன்…
Read More
மாமன்னன் திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!!

மாமன்னன் திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சகர்களின் பாராட்டுக்களோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில்.. ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் பேசியதாவது… மாமன்னனின் இந்த வெற்றியில் பங்கு கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. ஒளிப்பதிவு பற்றி எல்லோரும் குறிப்பிட்டார்கள். படத்தை பாராட்டி வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி. உதயநிதி சார் மிக ஆதரவாக இருந்தார். படத்திற்காக கேட்டது அனைத்தும் கிடைத்தது. எல்லோருமே நன்றாக நடித்திருந்தார்கள். படத்தை பாராட்டி வெற்றியடையச் செய்த அனைவருக்கும் மீண்டும்  நன்றி. ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் பேசியதாவது… மாமன்னன் மிக முக்கியமான படம். உதய் சார் வாழ்வில்…
Read More
சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘கண்ணே கலைமானே’ இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது!

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘கண்ணே கலைமானே’ இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது!

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான 'கண்ணே கலைமானே' இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நாயகனாக நடித்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான 'கண்ணே கலைமானே' திரைப்படம் மனதைத் தொடும் வகையில் மனிதம் பேசியதற்காக பெரிதும் பாராட்டுகளை பெற்றது. இத்திரைப்படம் தற்போது சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை 'கண்ணே கலைமானே' குவித்து சாதனை படைத்துள்ளது. சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை உதயநிதி ஸ்டாலினும், சிறந்த நடிகைக்கான விருதை தமன்னாவும், சிறந்த துணை நடிகைக்கான விருதை வடிவுக்கரசியும் 'கண்ணே கலைமானே' திரைப்படத்திற்காக இந்தோ-பிரெஞ்சு சர்வதேச பன்னாட்டு விழாவில் வென்றுள்ளனர். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இயக்குநர் சீனு ராமசாமி, "இயற்கை விவசாயிக்கும் கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் இருந்து வந்த நேர்மையான வங்கி அதிகாரிக்குமான வாழ்வியல் உண்மை பேசும் 'கண்ணே…
Read More
இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் ‘அநீதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !

இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் ‘அநீதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு 'பிளட் அண்டு சாக்லேட்' என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ‘அநீதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா கூறியதாவது... "இயக்குநர் வசந்தபாலன் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நா. முத்துக்குமார் அவர்கள் வசந்தபாலன் பற்றி நிறைய சொல்லுவார். நா. முத்துக்குமாரின் நீட்சியாகத்தான் இந்த திரைப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி உள்ளேன். ஒன்று காதல் பாடலாகவும் மற்றொன்று நீதி, அநீதி பற்றி விவரிக்கும் பாடலாகவும் அமைந்துள்ளது. ஜி வி பிரகாஷ் மிகவும் பிரமாதமாக இசையமைத்துள்ளார்." இத்திரைப்படத்தின் வசனகர்த்தா…
Read More
இன்பினிட்டி – விமர்சனம்: !

இன்பினிட்டி – விமர்சனம்: !

மென்பனி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சாய் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இன்ஃபினிட்டி’. இந்த படத்தில் நட்டி நட்ராஜ், வித்யா பிரதீப், முனீஷ்காந்த், சார்லஸ் வினோத், வினோத் சாகர், ஜீவா ரவி என பலரும் நடித்துள்ளனர். சரவணன் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் பாலசுப்ரமணியம் இசையமைத்துள்ளார். படத்தின் ஆரம்பத்தில் இளம்பெண் ஒருவர் எரித்து கொல்லப்படுகிறார். இதனிடையே பாரில் ஒருவர், எழுத்தாளர் ஒருவர் என இருவர் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். இதனை விசாரிக்க சென்ற காவல்துறை அதிகாரியும் கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கு சிபிஐ அதிகாரியாக உள்ள நட்டியிடம் விசாரணைக்கு வருகிறது. பல கட்ட விசாரணைக்குப் பின் எரித்து கொல்லப்பட்ட பெண்ணுக்கும், இந்த தொடர் கொலைக்கும் சம்பந்தம் உள்ளதை கண்டறிகிறார். ஒரு க்ரைம் த்ரில்லருக்கு, இன்ஃபினிட்டி மனநிலையுடன் ஒத்துப்போவதில்லை, அது நம்மைச் சுற்றியுள்ள இருண்ட உலகத்தைத் தழுவுவதற்குத் தடையாகிறது. முதல் 30 நிமிடங்களில் பல விஷயங்கள் திறக்கப்படுகின்றன, அது நன்றாக இருக்கிறது, ஆனால் அடுத்தடுத்த நிகழ்வுகள்…
Read More