‘ஜெய் ஹனுமான்’ சீக்வலின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக இருக்கும் நிலையில் ப்ரீ லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘ஜெய் ஹனுமான்’ சீக்வலின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாக இருக்கும் நிலையில் ப்ரீ லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது!

‘ஹனுமான்’ படத்தின் அமோக வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் வர்மா, மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஜெய் ஹனுமான்’ படத்தைத் தொடங்க இருக்கிறார். அவரது பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் (பிவிசியு) ஒரு பகுதியான இந்தப் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக படத்தைத் தயாரிக்க உள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ப்ரீ-லுக் போஸ்டர், பழங்காலக் கோவிலை நோக்கிச் செல்லும் ஹனுமானைக் கொண்டிருக்கும் காட்சிகள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வசீகரிக்கும் போஸ்டர் தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக நாளை வெளியிடப்படும் பெரிய அப்டேட்டுக்கான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த ஹனுமான் கதாபாத்திரத்தில் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பும், யூகங்களும் இப்போதே கிளம்பியிருக்கிறது.

தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் ஆகியோர் தாங்கள் தயாரிக்கும் படத்தின் உயர் தரத்திற்கும் அர்ப்பணிப்பிற்கும் புகழ் பெற்றவர்கள். ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படம் உயர் தயாரிப்பு மதிப்புகள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப தரங்களைக் கொண்டிருக்கும் என்பது உறுதி.

Related posts:

பிரபாஸ் நடிக்கும் 'சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

*’சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!*

குடும்பஸ்தன் -- விமர்சனம்..!

கேப்டன் விஜயகாந்த் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு ! கூட்டணிக்கு ஆச்சாரமா !!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'தி சோழா டைகர்ஸ்: அவெஞ்சர்ஸ் ஆஃப் சோம்நாத்' புத்தகத்தை புகழ்பெற்ற எழுத்தாளர் அமிஷ், ஒடிஸி சென்னை அடையாறில் வெளியிட்டார்!

நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்று தான் அட்வைஸ் கேட்டேன்.! வசந்த் ரவி !!

பேட்மிட்டன் வீராங்கனை டூ நடிகை: குயின்சி ஸ்டான்லி!

’ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!