ரயில்வேயில் 1,265 காலியிடங்கள் | வேலைவாய்ப்பு!

ரயில்வேயில் 1,265 காலியிடங்கள் | வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் (Station Master) பணியிடங்களுக்கான 1,265 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் வெளியிட்டுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப் படிப்பு முடித்த தகுதியானவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில்வே மண்டலங்களில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

2026ஆம் ஆண்டு முதல் ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தனியாக அறிவிக்கப்படும் என ரயில்வே வாரியம் முடிவுசெய்துள்ளது. இதன்படி, இப்பணிக்கான கல்வித் தகுதி, தேர்வு நடைமுறைகள், காலிப் பணியிட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முக்கிய தேதிகள்: ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு 2026 அக்டோபர் 27 அன்று தொடங்கியது.

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நவம்பர் 25ஆம் தேதி இரவு 11.59 மணிக்குள் இணையவழியில் மட்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த நவம்பர் 27ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள்: நாடு முழு வதும் உள்ள பல்வேறு ரயில்வே பணி யாளர் தேர்வு வாரியங்கள், ரயில்வே மண்டலங்களில் மொத்தம் 1,265 ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்கள் உள்ளன.

இதில் அதிகபட்சமாக மும்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின்கீழ் 177 காலிப் பணியிடங்கள் உள்ளன. அடுத்த படியாக ஜம்மு – ஸ்ரீநகர் பகுதியில் 122, சென்னையில் 119 காலிப் பணியிடங்கள் உள்ளன.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: ஜனவரி 1, 2027 அன்று விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி செய்தவராகவும், அதிகபட்சம் 33 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

ஊதியம்: ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய நிலை 6 இன்படி, ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கு அடிப்படை ஊதியமாக ரூ.35,400 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ரயில்வே பணி யாளர் தேர்வு வாரியத்தின் https://www.rrbapply.gov.in/ என்கிற அதிகாரபூர்வ இணையத்தளத்துக்குச் சென்று விண்ணப் பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்க ளுக்குப் பொருத்தமான ஒரு ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட வாரியங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதி இல்லை.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள், கணினி வழித் தேர்வு (CBT), கணினி வழித் திறனறித் தேர்வு (CBAT), சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு: ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தைப் பார்க்கலாம்: https://rrb.indianrailways.gov.in/

Related posts:

ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' பத்திரிகையாளர் சந்திப்பு !!

காதலும் த்ரில்லும் கலந்த விறுவிறுப்பான திரைப்படம் 'சிக்னல் அட் 11.30'!!

இசையமைப்பாளர் ராலே ராஜனின் “Feel the Spark” வைரல் சாதனை!

கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும்"- நடிகர் ஹரிஷ் கல்யாண்!

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் ‘டிமாண்டி காலனி3’ திரைப்படத்தில் ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் குரு சோமசுந்தரம்!

அங்கம்மாள்’ படத்தின் முன்னோட்ட காட்சிகளில் கிடைத்த வரவேற்பைப் போல திரையரங்குகளிலும் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும்

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம், ஸ்பிரிட் மீடியா ராணா டக்குபட்டி இணைந்து வழங்கும் 'நீளிரா' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு!

ஏர்டெல், வோடபோன் கடன் பிரச்னையால் பதறும் வங்கிகள்..?