14
Mar
நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தனது உலகளாவிய தயாரிப்பு மற்றும் இன்னோவேஷன் ஸ்டுடியோவான ஐலைன் ஸ்டுடியோஸை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இந்தியாவில் நெட்ஃபிலிக்ஸ் தனது இருப்பை மேலும் விரிவுபடுத்துவதுடன் இந்தியாவின் அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் (AVGC) துறையில் நீண்டகால முதலீட்டையும் குறிக்கிறது. உலகளாவிய தயாரிப்பு மற்றும் புதுமை கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் இந்தத் தொடக்கம் அமைந்துள்ளது. மேம்பட்ட விஷூவல் எஃபெக்ட்ஸ், விர்ச்சுவல் புரொடக்ஷன் மற்றும் அடுத்த தலைமுறை தயாரிப்பு தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து உலகளவில் இந்தியாவை முக்கிய மையமாக நிலைநிறுத்தும் நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் ஐலைன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் ஷாபிரோ, தெலங்கானா மாநில முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் சஞ்சய் ஜாஜு மற்றும் இந்திய நடிகர்-தயாரிப்பாளர் ராணா டகுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். 32,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள…
