*மைத்ரி மூவி மேக்கர்ஸ், மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ விஷுவல் கிளிம்ப்ஸ் ரசிகர்களின் இதயங்களை வென்றது!*

*நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!*

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் பான் இந்திய ரசிகர்களுக்கு பிரம்மாண்ட மற்றும் புதிய சினிமா அனுபவத்தை கொடுத்து வருகிறது. பல்வேறு கதைக்களங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பொழுதுபோக்கு என இந்நிறுவனம் தயாரிக்கும் படங்கள் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சென்றடைந்துள்ளது.

நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தலைமையிலான இந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படங்களின் அறிவிப்பு மற்றும் வெற்றிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. ‘புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ மற்றும் ‘டியூட்’ போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்து பல படங்களை தயாரித்து வருகிறது.

தற்போது அப்பா,மகள் பாசத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான ‘இருமுடி கட்டு’ படத்தைத் தயாரித்துள்ளது. பான் இந்திய நட்சத்திரமாக உருவெடுத்ததற்கு முன்னரே அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்பட்ட ரவி தேஜா, இந்தப் படத்தில் தனது வழக்கமான மாஸ் அவதாரத்தை விட்டு விலகி, வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் என்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான விஷுவல் கிளிம்ப்ஸ் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

மகளை உயிராக நேசிக்கும் அன்பான அப்பா, கோபம் நிறைந்த மனிதர், தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க மது பழக்கத்தை கைவிட்டு பகவான் ஐயப்பனின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் ஆன்மிக மனிதர் என மூன்று விதமான ரவி தேஜாவை இந்த க்ளிப்ம்ஸில் காண முடிகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படம் மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் முதல் பைலிங்குவல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிலும் ரவி தேஜாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

பகவான் ஐயப்பனின் ஆன்மிகப் பின்னணியில் உருவாகும் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் உறவுகள், தனிமனித மாற்றங்கள் மற்றும் மனித வாழ்க்கையின் உணர்ச்சிமிக்க பரிமாணங்களை மையமாகக் கொண்ட குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. மிகைப்படுத்தப்பட்ட கதை சொல்லலைத் தவிர்த்து, உண்மைத்தன்மை மிக்க கதாபாத்திரங்கள், மனதைத் தொடும் தருணங்கள் மற்றும் ஈர்க்கக்கூடிய திரைக்கதை என இந்தப் படம் உருவாகியுள்ளது. உணர்வுகளே இதன் மையமாக இருப்பதால், ‘இருமுடி கட்டு’ ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதன் கலாச்சார வேர்களும் ஆன்மிக அம்சங்களும் இந்த திரைப்படப் பயணத்திற்கு தனித்துவமான அழகை சேர்க்கின்றன.

விஷுவல் கிளிம்ப்ஸ் மற்றும் ‘இருமுடி கட்டு’ என்ற தலைப்பும் படத்தின் மையக்கருவை தெளிவாக பிரதிபலிக்கிறது. ஒரு திரைப்படத்தின் வெற்றி அதன் தலைப்பிலிருந்தே தொடங்குகிறது என்பார்கள். அந்த வகையில், இந்தத் தலைப்பு பகவான் ஐயப்பனுடன் தொடர்புடைய பக்தி மற்றும் ஆன்மிக உணர்வை அழகாக வெளிப்படுத்துகிறது.

இது வெறும் பக்தியின் அடையாளமாக மட்டுமல்லாமல், ஒரு மனிதனின் உணர்வு மற்றும் ஆன்மிக மாற்றப் பயணத்தையும் குறிக்கிறது. இது ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என படக்குழு உறுதியளித்துள்ளது.

*நடிகர்கள்:* ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், சாய் குமார், பேபி நக்ஷத்ரா, அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, ஸ்வாசிகா, மீசாலா லக்ஷ்மண், ராஜ்குமார் காசிரெட்டி, ரமணா பார்கவ், கிஷோர் காஞ்சரபாளம், கார்த்திக் அடுசுமல்லி, மகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

Related posts:

அரசியல்வாதிகள் வேலையை சரியாக செய்தால் நான் அரசியலுக்கு வர மாட்டேன்.!

‘வசீகர இளவரசன்’ சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ - தென்னிந்திய இசைப் பயணம் 2020 !

சொத்து வாங்குபவர்கள் கவனியுங்கள்!

வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவ் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது!

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் ‘டிமாண்டி காலனி3’ திரைப்படத்தில் ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் குரு சோமசுந்தரம்!

GAUTHAM RAM KARTHIK & APARSHAKTI KHURANA TEAM UP FOR SCI-FI CRIME THRILLER ‘ROOT – RUNNING OUT OF TIME’!

ஃபேஸ்புக் அக்கவுண்ட் லாக் இன் ஆகாத பட்சத்தில் இதை செய்து அக்கவுண்ட்டை ரிக்கவர் செய்யலாம் !

லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியத்தில் பிப்ரவரி 12, 2026 அன்று திரையிடப்படும் இந்திய திரைப்படம் 'பிரமயுகம்'!