06
Mar
மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினத்தில் நடந்த மாசிமக தீர்த்தவாரி உற்சவ விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். உலக புகழ்பெற்ற கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயில் சார்பில், ஆண்டுதோறும் மாசி மகத்தன்று கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு மாசி மகத்தை முன்னிட்டு நேற்று காலை தலசயன பெருமாள், ஆதிவராக பெருமாளுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி, ராஜ வீதிகள் வழியாக கடற்கரைக்கு வந்தனர். பின்னர், கடலில் புனித நீராட்டினர். இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் இறங்கி புனித நீராடினார்கள்.. இதேபோல் இருளர் இனமக்கள், தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை வழிபடுவதற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் 2 நாட்களுக்கு முன்பே மாமல்லபுரம் வந்து கடற்கரையில் தற்காலிக குடில்கள் அமைத்து தங்கினர். இதையடுத்து, இருளர்கள் நேற்று அதிகாலை எழுந்து கடலில் புனித நீராடிவிட்டு மணலில் செய்த கன்னியம்மன், கடல் கன்னி, சப்த கன்னிகளை வழிபட்டனர்.…
