சினிமா

“கிஸ்” படத்தின் முன்னோட்ட நிகழ்வு!

“கிஸ்” படத்தின் முன்னோட்ட நிகழ்வு!

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், சதீஷ் இயக்கத்தில், நடிகர்கள் கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிஸ்'. செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் பேசியதாவது, "படம் ஜாலியாக இருக்கும். நாங்களும் ஜாலியாக வேலை பார்த்தோம். தியேட்டரில் படம் பார்க்கும்போது உங்களுக்கும் பிடிக்கும்" என்றார். எடிட்டர் ஆர்.சி. பிரணவ், "இந்த வாய்ப்புக் கொடுத்த ராகுல் சாருக்கு நன்றி. இரண்டு வருடங்கள் இந்தப் படத்தில் ரொம்பவே ஜாலியாக வேலை பார்த்தோம். சதீஷ், கவின் எல்லோரும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். ஃபேமிலி எண்டர்டெயினராக படம் உருவாகி இருக்கிறது" என்றார். கலை இயக்குநர் மோகனம் மகேந்திரன், "ஜாலியான டீமாக சேர்ந்து எல்லோரும் நல்ல படம் எடுத்திருக்கிறோம். எல்லோரும் 'தி பெஸ்ட்' கொடுத்திருக்கிறார்கள். அது டிரெய்லர் பார்க்கும்போதே உங்களுக்கு தெரிந்திருக்கும். படம் நிச்சயம் வெற்றி பெறும்". நடிகர் ஷக்தி, "கவின்…
Read More
SIIMA விருது விழாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மகுடம் சூடியுள்ளார் நடிகை சான்யா ஐயர்!

SIIMA விருது விழாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மகுடம் சூடியுள்ளார் நடிகை சான்யா ஐயர்!

இளைமை, சாதுர்யம் மற்றும் நடிப்புத் திறமை ஆகியவற்றை ஒருங்கே பெற்றவர் நடிகை சான்யா ஐயர். அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் திரை வசீகரத்துடன் தென்னிந்திய சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார். விடாமுயற்சி மற்றும் நடிப்பு மீதான ஆர்வத்துடன் கன்னட சினிமாவில் 15 வருடங்களுக்கும் மேலாக தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். 'நம் அம்மா ஷாரதே', 'அரசி', 'புட்டகௌரி மதுவே' போன்ற தொடர்களில் குழந்தை நட்சத்திரமாகவும், 'கஜா', 'முகபுதா' மற்றும் 'விமுக்தி' போன்ற படங்களிலும் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். கன்னட பிக் பாஸ் ஓடிடி சீசன் 1 வெற்றியாளராக அவர் பெற்ற வெற்றியும், 2024 ஆம் ஆண்டில் வெளியான இந்திரஜித் லங்கேஷின் கௌரி திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்ததும் இன்று இந்திய சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் சான்யா. இதுகுறித்து சான்யா பகிர்ந்து கொண்டதாவது, "கன்னட மொழியில் 2025 ஆம் வருடத்திற்கான சைமாவின் நம்பிக்கை நட்சத்திரம் விருது…
Read More
“18 மைல்ஸ்” படக்குழுவினரைப் பாராட்டிய இயக்குனர் மணிரத்னம்..!

“18 மைல்ஸ்” படக்குழுவினரைப் பாராட்டிய இயக்குனர் மணிரத்னம்..!

உணர்வுப்பூர்வமான காதல் கதையாக உருவாகியுள்ள '18 மைல்ஸ்' கடந்த சில வாரங்களாகவே பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ள '18 மைல்ஸ்'-ல் இருந்து 14 நிமிடங்கள் கொண்ட புரோலாகை சமீபத்தில் திங்க் மியூசிக் வழங்கியது. இது '18 மைல்ஸ்' மீதான எதிர்பார்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இயக்குநர் மணி ரத்னம் '18 மைல்ஸ்' பார்த்துவிட்டு ஒட்டுமொத்த குழுவினருக்கும் தன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பகிர்ந்து கொண்டதாவது, "இயக்குநர் மணி ரத்னம் சார் கொடுத்த பாராட்ட எங்கள் அணியில் உள்ள அனைவருக்குமே மறக்க முடியாதது. மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் புரோலாக் திரையிட்டு காட்டும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. மிக நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததாக மணி சார் பாராட்டினார். கதாநாயகி மிர்னாவில் இருந்து என்னுடைய உதவியாளர் அசோக், எடிட்டர் நாஷ் என அணியில்…
Read More
நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ள ‘Unaccustomed Earth’ என்ற உலகளாவிய தொடரில் நடிக்கிறார் நடிகர் சித்தார்த்!

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ள ‘Unaccustomed Earth’ என்ற உலகளாவிய தொடரில் நடிக்கிறார் நடிகர் சித்தார்த்!

இந்திய சினிமாவின் பல்வேறு துறைகளிலும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தனது திறமையை நிரூபித்து ஜொலித்து வருகிறார் நடிகர் சித்தார்த். தமிழ், தெலுங்கு சினிமா மட்டுமல்லாது பாலிவுட் ரசிகர்களின் மனதிலும் இட்ம பிடித்துள்ளார் சித்தார்த். பெரிய திரையிலும் டிஜிட்டல் தளத்திலும் தொடர்ந்து வலுவான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சித்தார்த் தற்போது, ஜும்பா லஹிரியின் விருது பெற்ற சிறுகதை தொகுப்பை அடிப்படையாகக் கொண்ட நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கவுள்ளார். நடிகர் சித்தார்த் சமீபத்தில் நடித்த 'சித்தா' மற்றும் '3BHK' ஆகிய படங்கள் உணர்வுப்பூர்வமான கதை சொல்லலுக்காக உலகளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அமெரிக்க கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட லஹரியின் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்றான 'Unaccustomed Earth' தொடரில் நடிப்பதன் மூலம் சர்வதேச பார்வையாளர்கள் மத்தியிலும் சித்தார்த் இன்னும் நெருக்கமாகவுள்ளார். எட்டு எபிசோடுகளைக் கொண்ட இந்த ரொமாண்டிக் கதை கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாச்சார…
Read More
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்தி திருமகன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் திருப்தி ரவிந்தரா!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்தி திருமகன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் திருப்தி ரவிந்தரா!

'அருவி' மற்றும் 'வாழ்' படங்கள் புகழ் இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'சக்தி திருமகன்' படம் மூலம் திறமையான இளம் கதாநாயகியாக கோலிவுட்டில் அறிமுகமாகிறார் மகாராஷ்டிரா துலேவைச் சேர்ந்த நடிகை திருப்தி ரவிந்தரா. இந்தப் படம் செப்டம்பர் 19, 2025 அன்று வெளியாகிறது. திரை வசீகரமும் திறமையும் கொண்ட கதாநாயகிகளை தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும். அந்த வகையில், கணினி அறிவியலில் பட்டம் பெற்ற முன்னாள் மென்பொருள் பொறியாளரான திருப்தி, ஐந்து வருடங்கள் மேடை நாடக அனுபவம் பெற்ற பிறகு நடிப்புத் துறைக்குள் நுழைந்திருக்கிறார்.  மேடை நடிப்பில் வலுவான அடித்தளம் பெற்றது மட்டுமல்லாது ஈஸ்டர்ன் மசாலா, லிசோல், ஜெப்டோ, ஐஇடிஎல் மற்றும் சைடஸ் உள்ளிட்ட பல தேசிய விளம்பரங்களில் பணிபுரிந்த அனுபவமும் பெற்றிருக்கிறார். 'சக்தி திருமகன்' படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “நான் நன்கு நடிப்பு பயிற்சி எடுத்த…
Read More
கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தொழில் அதிபர் ஏ.எம். கோபாலன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது வேல்ஸ் பல்கலைக்கழகம்!

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தொழில் அதிபர் ஏ.எம். கோபாலன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது வேல்ஸ் பல்கலைக்கழகம்!

பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டம் மற்றும் நீதித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய அமைச்சர் திரு.அர்ஜுன் ராம் மேக்வால் கலந்துக்கொண்டு உரையாற்றினார் .அதில் அவர் ”இந்தியா 2047க் கனவை அடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொழில் புரட்சி 4.0 யுகத்தில் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லெர்னிங் போன்ற துறைகள் முன்னிலை வகிக்கின்றன எனக் குறிப்பிட்ட அவர், பட்டதாரிகள் சமூகப் பொறுப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றை வழிகாட்டுதலாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார். இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும் என்றும், 5,000-க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை வாழ்த்தியும் அவர் உரையை நிறைவு செய்தார்”. இவ்விழாவில் மொத்தம் 4,992 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் 3,631 இளநிலை பட்டதாரிகள், 1,155 முதுகலை, 2 எம்.பில் மற்றும் 204 முனைவர் பட்டதாரிகள்…
Read More
‘தணல்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!

‘தணல்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!

தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட 'தணல்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது! 'தணல்' படத்தின் ஆழமான உணர்வுகள், நடிகர்களின் திறமையான நடிப்பு மற்றும் வலுவான கதைசொல்லல் ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நேர்மறையான பாராட்டுகள் கிடைத்து வருகிறது. இந்தப் பாராட்டுகள் மூலம் திரையரங்குகளில் 'தணல்' படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் திரையரங்குகளில் அதிகரித்துள்ளது. 'தணல்' குறித்து முன்னணி எக்ஸ்பிட்டர் பகிர்ந்து கொண்டதாவது, "'தணல்' படம் திரையிடப்பட்ட நாள் முதலே பார்வையாளர்கள் எண்ணிக்கை திரையரங்குகளில் அதிகமாகத் தொடங்கியது. விறுவிறுப்பாகவும் அதேசமயம் மனதைத் தொடும் கதையாகவும் இருப்பதாக படம் பார்த்த பார்வையாளர்கள் சொல்கின்றனர். கூட்டம் அதிகரித்து வருவதால் அதற்கேற்றார் போல கூடுதல் காட்சிகள் திரையிட திட்டமிட்டுள்ளோம்" என்றார். ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் படத்தின் தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தயாரிப்பு அணியில் இருந்து செய்தி தொடர்பாளர் பேசியதாவது, "'தணல்' படத்திற்கு நிறைய அன்பு கிடைத்து வருவது…
Read More
குமார சம்பவம் — திரைப்பட விமர்சனம்!

குமார சம்பவம் — திரைப்பட விமர்சனம்!

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் தியாகராஜன் நாயகனாக அறிமுகமாகி இருக்கும்  படம் 'குமார சம்பவம்' . குமரன் தங்கராஜன், துணை வேடங்களில் பாயல் ராதாகிருஷ்ண ஷெனாய், ஜி.எம். குமார், பால சரவணன், இளங்கோ குமரவேல், மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ராஜாமணி படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் இப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம் . இயக்குநராகும் லட்சியத்தில் பல தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்லி வருகிறார் நாயகன் குமரன். சின்ன வயதில் தனது தந்தையை இழக்கும் குமரன், தாத்தா , அம்மா , தங்கையுடன் வசித்து வருகிறார். அவரது வீட்டின் மேல்மாடியில் குடியிருந்து வருகிறார் சமூக செயற்பாட்டாளரான வரதராஜன் (இளங்கோ குமரவேல்). பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தொடர்ந்து போராடி வருகிறார் வரதா. அதற்கான பின்விளைவுகளை நாயகன் குமரன் எதிர்கொள்கிறார். இதனால் போராட்டக்காரர்கள் மேல் குமரனுக்கு ஒரு…
Read More
“‘தணல்’ படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி “- நடிகை லாவண்யா திரிபாதி!

“‘தணல்’ படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி “- நடிகை லாவண்யா திரிபாதி!

தனது வசீகரத்தாலும் திறமையான நடிப்பாலும் தென்னிந்திய பார்வையாளர்களை வசீகரித்துள்ளார் நடிகை லாவண்யா திரிபாதி. பத்து வருடங்களுக்கும் மேலாக தனித்துவமான கதைகள் மற்றும் கதாநாயகி அல்லது முக்கிய கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறார் லாவண்யா. செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் நடிகர் அதர்வாவின் 'தணல்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக திரையிடப்பட்டு பாரட்டுக்கள் பெற்ற 'தணல்' படக்காட்சியில் இவரது நடிப்பு பலரையும் ஈர்த்துள்ளது. படம் குறித்து லாவண்யா திரிபாதி பேசியதாவது, " ரசிகர்களும் பத்திரிக்கையாளர்களும் எனது நடிப்பைப் பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் முதல் பாதியில் ரொமாண்டிக் தருணங்களுடன் இயல்பாகவும் இரண்டாம் பாதியில் தீவிரமான எமோஷனல் தருணங்களுடனும் என் கதாபாத்திரம் அமைந்திருக்கும். வழக்கமான கதாநாயகி அல்லாது படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரவீந்திர மாதவா சாருக்கு நன்றி. மிகவும் அர்ப்பணிப்பு கொண்ட நடிகர் அதர்வா…
Read More
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தை பிவிஆர் சினிமாஸ் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது!

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தை பிவிஆர் சினிமாஸ் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது!

ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் 2022ம் ஆண்டு வெளியாகி பாராட்டுகளை குவித்த 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தை பிவிஆர் சினிமாஸ் செப்டம்பர் 19ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை குவித்த திரைப்படம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், ரியா, மணிகண்டன், அபிஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே எஸ் ரவிக்குமார், இளவரசு, பானுப்பிரியா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இப்படம் தற்போது திரையரங்க மறு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. முன்னணி திரைக் குழுமமான பிவிஆர் சினிமாஸ் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'…
Read More