சினிமா

PK7 Studios தயாரித்து வழங்கும் “ஜாக்கி”

PK7 Studios தயாரித்து வழங்கும் “ஜாக்கி”

நான் இயக்குனர் Dr.பிரகபல். மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான Mud ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக மட்டி என்ற திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்ததற்கு அடுத்ததாக, அதைவிட சுவாரஸ்யமான ஒரு கதையை தேடி இந்தியா முழுவதும் நிறைய பயணப்பட்டேன். அப்படி மதுரைக்கு செல்லும்போது நான் கிடா சண்டை பந்தையத்தை நேரில் பார்த்தேன். அந்த பந்தையத்தை பார்க்கும் போதே, அது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அந்த கிடா சண்டைக்குள் ஒரு வாழ்வியலும், அது மட்டுமின்றி உணர்வு நிலையில் கிடாவிற்கும் அதன் கட்டாரிக்கும் ஒரு பிணைப்பு இருப்பதை கவனித்தேன். அந்த பிணைப்பு தான் அந்த கிடா நன்றாக சண்டையிட ஊக்கமளிப்பதையும் கவனித்தேன். தமிழ் மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றி போன ஒரு விளையாட்டு என்று கண்டறிந்தேன். இதுதான் நான் தேடி வந்த விஷயம் என உணர்ந்ததற்கு பிறகு அது சம்பந்தமான நிறைய தரவுகளை சேகரிக்க தொடங்கினேன். அந்த தேடலில் தான் எனக்கு புரிய…
Read More
‘டிரான்: ஏரஸ்’ படத்தில் நடித்துள்ள ஜாரெட் லெட்டோ தனது ஹீரோ ஜெஃப் பிரிட்ஜஸ் பற்றி சிலாகிக்கிறார்!

‘டிரான்: ஏரஸ்’ படத்தில் நடித்துள்ள ஜாரெட் லெட்டோ தனது ஹீரோ ஜெஃப் பிரிட்ஜஸ் பற்றி சிலாகிக்கிறார்!

'டிரான்: ஏரஸ்' படத்தில் ஜாரெட் லெட்டோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது மறக்க முடியாத பயணமாக ஜெஃப் பிரிட்ஜஸ் உடன் இணைந்து பணியாற்றியதை சொல்கிறார். ஆஸ்கார் விருது வென்ற ஜெஃப் பிரிட்ஜஸ் உடன் படப்பிடிப்பு தளத்தில் ஒன்றாக நேரம் செலவழித்ததையும், 1982 ஆம் ஆண்டு கல்ட் கிளாசிக் படத்தில் கெவின் ஃபிளினை திரையில் கொண்டு வந்தது பற்றியும் சிலாகித்து பேசினார். பட புரோமோஷனில் பேசிய ஜாரெட், “அவர் என்னுடைய சிறந்த நண்பர். ஜெஃப் அன்பானவர், நகைச்சுவை உணர்வு கொண்டவர், பண்பானவர் என அவரைப்பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும் அதற்கு சரியாகப் பொருந்திப் போவார். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் செலவழித்த நேரம் என்றும் மறக்க முடியாது. எனக்கு அவருடன் நேரம் செலவிட இன்னும் சில நாட்கள் இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அவர் தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதோடு, சிறந்த வாழ்க்கைக்கு…
Read More
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது!

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது!

அக்டோபர் 2, 2025 அன்று இந்தியத் திரையரங்குகளில் 3டியில் (ஒரு வாரத்திற்கு மட்டும்) மீண்டும் வெளியாக இருக்கும் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்துடன் தற்போது வெளியாகியுள்ள புதிய டிரெய்லரையும் கண்டு மகிழுங்கள்! இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் வரவேற்பு பெற்ற சினிமாட்டிக் உலகின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த பாகமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் இந்தியா முழுவதும் டிசம்பர் 19, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தின் புதிய டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பண்டோரா உலகின் காட்சிகள் பார்வையாளர்களுக்கு அட்டகாசமான சினிமா அனுபவத்தை தர இருக்கிறது என்பதை டிரெய்லரின் கிளிம்ப்ஸ் உறுதிப்படுத்துகிறது. இந்தப் படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு இருக்கும் அதே வேளையில், 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் திரையரங்குகளில் 3டியில் (ஒரு வாரத்திற்கு மட்டும்) வெளியாகிறது. ரசிகர்கள் பண்டோரா உலகிற்கு மீண்டும் செல்வதுடன் 'அவதார்:…
Read More
பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய அச்சு ஊடக, காட்சி ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.!

பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய அச்சு ஊடக, காட்சி ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.!

திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா என்கிற அளவுக்கு மாபெரும் வெற்றி படைப்பாக, மக்களையும் திரைப்பட ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருக்கிற படையாண்ட மாவீரா திரைப்படத்தின் விமர்சனங்கள் திறனாய்வுகள் அனைத்திலும் எனது வசனத்தை குறிப்பிட்டு பாராட்டுகிற உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி திரையரங்குகளில் எல்லாம் மக்கள் பேராதரவை தந்து கொண்டிருக்கிறார்கள்..பல இடங்களில் உற்சாகமாக கைத்தட்டி ஆரவாரம் செய்து வரவேற்று வாழ்த்துகிறார்கள். தமிழர்கள்,மற்றும்திரைக்கலை ரசிகர்கள் அனைவருக்குமான இந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த மகத்தான பணியை செய்யும் உங்கள் அனைவருக்கும் படையாண்ட மாவீரா வசனகர்த்தா ஆகிய எனது சார்பிலும் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரின் சார்பிலும் மனம் நிறைந்த நன்றி.
Read More
அதிரடி ஆக்‌ஷன், நகைச்சுவை, பரபரப்பு என இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது ‘அனகோண்டா’!

அதிரடி ஆக்‌ஷன், நகைச்சுவை, பரபரப்பு என இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது ‘அனகோண்டா’!

பால் ரூட் மற்றும் ஜாக் பிளாக் நடித்த இந்தப் படம் டிசம்பர் 25, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 'அனகோண்டா'வின் முதல் டிரெய்லரை சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிட்டுள்ளது. ஆக்‌ஷன் அட்வென்ச்சர் மற்றும் நகைச்சுவையுடனும் பல திருப்பங்களுடனும் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் அனகோண்டாவை மீண்டும் ரசிகர்களுக்கு காட்டுகிறது. ஜாக் பிளாக் மற்றும் பால் ரூட் நடித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 25, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும். டாம் கோர்மிகன் இயக்கி இருக்கும் இந்தப் படம், டக் (ஜாக் பிளாக்) மற்றும் கிரிஃப் (பால் ரூட்) ஆகிய இருவரையும் மையமாகக் கொண்டு நகர்கிறது. நீண்ட கால நண்பர்களான இருவரும் நடுத்தர வயதின் நெருக்கடியில் இருக்கிறார்கள். தங்களுக்குப் பிடித்த ஜங்கிள் மூவியை மீண்டும் உருவாக்கத் திட்டமிடுகிறார்கள். ஆனால் ஒரு ராட்சத அனகோண்டா அவர்களின்…
Read More
’படையாண்ட மாவீரா’– விமர்சனம் !

’படையாண்ட மாவீரா’– விமர்சனம் !

"படையாண்ட மாவீரா" வ.கெளதமன் இயக்கத்தில் V. K. புரொடக்ஷன்ஸ் - நிர்மல் சரவணராஜ், S.க்ரிஷ்ணமுர்த்தி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார், சாம்.சி.எஸ். இந்த படத்தில் இயக்குநர் வ.கெளதமன், பூஜிதா பொன்னாடா, சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன், மன்சூர் அலிகான், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் மதுரா கிராமப் பகுதிகளில் உள்ள நில வளத்தைச் சுரண்டும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்று அப்பகுதி மக்களின் நம்பிக்கைக்குரியவராக மதிக்கப்படுகிறார் குரு. அவரது தாத்தா காலத்தில் இருந்து சமூகத்துக்காக உழைக்கும் குடும்பமாக இருக்கிறார்கள். அவரது தந்தையும் அப்படியே இருக்கிறார். குருவின் தந்தை கொலை செய்யப்படுகிறார்.தனது தந்தையைக் கொன்றவரை மகன் குரு பழி தீர்க்கிறார்.அதற்குப் பிறகு அந்தப் பகுதியில் பெண்களுக்கு எதிரான குற்றம், நில மோசடிகள், பண முதலைகளின் ஆக்கிரமிப்பு போன்ற எல்லாவற்றிற்கும் முன்னால் வந்து நின்று தட்டிக் கேட்கிறார்.குற்றவாளிகளைத்…
Read More
*நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம் ‘கண்மணி அன்னதான விருந்து’!*

*நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம் ‘கண்மணி அன்னதான விருந்து’!*

என் அம்மாவின் பெயரில் என் மனதுக்கு நெருக்கமான 'கண்மணி அன்னதான விருந்து' இன்று தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வசதி படைத்தவர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய உணவுகள் எளியவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. அந்த பிம்பத்தை உடைத்து அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே கண்மணி அன்னதான விருந்தின் நோக்கம். உணவு என்றும் எட்டாக்கனியாக இருக்கக்கூடாது. அது ஒவ்வொருவரின் முகத்திலும் புன்னகையை தர வேண்டும். இந்தப் பயணத்தை நரிக்குறவர்கள் இன பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி. பல வகையான உணவுகளை அவர்கள் விரும்பி சுவைத்தது எனக்கு மனநிறைவாக இருந்தது. உங்கள் அனைவரின் அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் அனைவரின் பசியையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் இந்தப் பயணத்தை மனநிறவுடன் தொடர்வேன் என நம்புகிறேன்.
Read More
ஹைரபாத்தை சேர்ந்த முன்னணி இயக்குநர்கள் மற்றும் கதை சொல்லிகளை நேரில் சந்தித்த நெட்ஃபிலிக்ஸ் சீஃப் கண்டெண்ட் ஆபிசர் பெலா பஜாரியா! தென்னிந்தியாவின் கலாச்சாரம், அதன் கதைகள், மொழி இவை அனைத்தும் நெட்ஃபிலிக்ஸ் வளர்ச்சிக்கான முக்கிய ஆதாரம். நெட்ஃபிலிக்ஸ் வழங்கும் அசல் கதைகள் முதல் திரையங்கிற்கு பிறகான ஓடிடி வெளியீடு வரை அதன் தரம் மற்றும் கதை சொல்லல் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது. பஜாரியாவின் ஹைதராபாத் வருகை இதுபோன்ற அசல் கதைகளைப் பெறுவதில் நெட்ஃபிலிக்ஸின் அர்பணிப்பைக் காட்டுவது மட்டுமல்லாது, திறமை வாய்ந்த கதை சொல்லிகளை கொண்டாடுவதாகவும் அமைந்துள்ளது.
Read More
*மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ‘Dude’ படத்தின் ‘நல்லாரு போ’ பாடல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது!*

*மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ‘Dude’ படத்தின் ‘நல்லாரு போ’ பாடல் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது!*

திரைப்படங்களின் இசையும் பாடல்களும் பலருக்கும் உணர்வுப்பூர்வமாக இரண்டற கலந்திருப்பது. இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளிவர இருக்கும் 'Dude' படம் மீண்டும் நிரூபித்துள்ளது. ஹை எனர்ஜி பாடலாக வெளியான 'ஊரும் பிளட்டும்' பாடல் ஹிட்டுக்கு பிறகு தற்போது இரண்டாவது பாடலான 'நல்லாரு போ' ஆன்மாவை தொடும் உணர்வுப்பூர்வமான பாடலாக வெளியாகியுள்ளது. குறிப்பாக பெண் இசை ரசிகர்கள் இந்தப் பாடலை கொண்டாடி வருகின்றனர். சாய் அபயங்கர் இசையமைப்பில், ஏக்கம், காதல், பிரிவு ஆகியவற்றின் கலவையாக விவேக் பாடல் வரிகள் எழுதியிருக்க, திப்பு மற்றும் மோஹித் செளஹான் இந்த அர்த்தமுள்ள மெலோடி பாடலை பாடியுள்ளனர். நமக்கு பிடித்தவர்கள் எந்தக் காரணத்திற்காக நம்மை விட்டு பிரிந்தாலும் 'எங்கிருந்தாலும் வாழ்க...' என வாழ்த்துவதை கருவாகக் கொண்டு இந்தப் பாடல் உருவாகியுள்ளது. பொதுவாக மற்ற பிரேக்கப் பாடல்களில் கசப்பும் வேதனையும் இருக்கும். ஆனால், இந்த பிரிவுணர்ச்சியை முதிர்ச்சியாக கையாண்டிருப்பதன் மூலம் மற்ற பிரேக்கப் பாடல்களில் இருந்து 'நல்லாரு…
Read More
வேல்ஸ் பல்கலைக்கழகம் தனது சட்டபள்ளியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை வெகு விமரிசையாக கொண்டாடியது.*1

வேல்ஸ் பல்கலைக்கழகம் தனது சட்டபள்ளியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவை வெகு விமரிசையாக கொண்டாடியது.*1

பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று 20/09/2025 நடைபெற்றது. தலைமை விருந்தினராக மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி.  என். கோட்டீஷ்வர்சிங் , கெளரவ விருந்தினராக மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி. .ஆர்.மகாதேவன் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி. எம். நிர்மல் குமார், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி . ஜி.கே. இளந்திரையன், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. டி.பரத சக்கரவர்த்தி, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி .ஆர்.கலைமதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.  இவ்விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் தலைவர் . எம் .எஸ். அமல்ராஜ் அவர்களும் முன்னாள் இந்திய சட்ட ஆணைய உறுப்பினரும் பேராசிரியருமான முனைவர் எஸ். சிவக்குமார் அவர்களும் சிறப்பு…
Read More