‘தணல்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!

தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட ‘தணல்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!

‘தணல்’ படத்தின் ஆழமான உணர்வுகள், நடிகர்களின் திறமையான நடிப்பு மற்றும் வலுவான கதைசொல்லல் ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நேர்மறையான பாராட்டுகள் கிடைத்து வருகிறது.

இந்தப் பாராட்டுகள் மூலம் திரையரங்குகளில் ‘தணல்’ படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் திரையரங்குகளில் அதிகரித்துள்ளது.

‘தணல்’ குறித்து முன்னணி எக்ஸ்பிட்டர் பகிர்ந்து கொண்டதாவது, “‘தணல்’ படம் திரையிடப்பட்ட நாள் முதலே பார்வையாளர்கள் எண்ணிக்கை திரையரங்குகளில் அதிகமாகத் தொடங்கியது. விறுவிறுப்பாகவும் அதேசமயம் மனதைத் தொடும் கதையாகவும் இருப்பதாக படம் பார்த்த பார்வையாளர்கள் சொல்கின்றனர். கூட்டம் அதிகரித்து வருவதால் அதற்கேற்றார் போல கூடுதல் காட்சிகள் திரையிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் படத்தின் தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தயாரிப்பு அணியில் இருந்து செய்தி தொடர்பாளர் பேசியதாவது, “‘தணல்’ படத்திற்கு நிறைய அன்பு கிடைத்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் வெளியீடு தாமதமாகி இருந்தாலும் இப்போது அதுவே அதிர்ஷ்டமாகி உள்ளது. படத்திற்கு கிடைத்து வரும் பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் அரங்கம் நிறந்த காட்சி மனநிறைவாக உள்ளது” என்றார்.’தணல்’ தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Related posts:

'அசம்பாவிதம் நடந்தால் தான் அரசு விழிக்குமா ? சென்னை உயர் நீதிமன்றம் சாட்டையடி கேள்வி ?

இந்த காதலர் தினத்தன்று, *ஆஹா தமிழ்* அதன் புதிய வெப் சீரிஸ்  *"மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்"* மூலம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காதலைக் கொண்டுவருகிற...

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் 'டார்க்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

விக்னேஷ் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் 'ரெட் ஃப்ளவர்' செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது !

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சஞ்சய் தத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் மாஸ் டிரெய்லர் ஆகஸ்ட் 4 அன்று வெளியாகிறது...

தங்கை மகன் ஹமரேஷ் நாயகனாக அறிமுகமாகும் 'ரங்கோலி'!நடிகர் உதயா வாழ்த்துகள்!

India’s First Arthroscopic Rotator Cuff Repair with Patch Augmentation using ArthroFlex® at Chennai Upper Limb Unit !