எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’, காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த ஆங்கிலப் படத்தின் டீசர் வெளியீடு, திரைப்படம் 2026 காதலர் தினத்தன்று வெளியாகிறது!

5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் (லண்டன், யுகே) நிறுவனம் தயாரித்து அஜித்வாசன் உக்கினா இயக்கியுள்ள அமானுஷ்ய காதல் கதையான ‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ திரைப்படத்திற்கு சிம்பொனி இசையை வழங்கியுள்ளார் இசைஞானி இளையராஜா.

தக்ஷ் மற்றும் மாடில்டா பாஜர் முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ திரைப்படம் 2026 காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டு, பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்று இது வரை 1.7 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான இசைஞானி இளையராஜா, ‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்திற்கு தனது காலத்தால் அழியாத திறமையின் மூலம் சிம்பொனி இசையை வழங்கியுள்ளார். மாஸ்கோ போ டை ஆர்கெஸ்ட்ராவுடன் பதிவு செய்யப்பட்ட இந்த இசை, படத்திற்கு ஆழத்தையும் வலுவையும் சேர்த்துள்ளது.

இப்படத்தின் மூலம் லண்டனைச் சேர்ந்த திறமை வாய்ந்த கலைஞரான தக்ஷ் திரைத்துறையில் அறிமுகமாகிறார். போலந்து நாட்டின் வார்சாவைச் சேர்ந்த மாடில்டா பாஜர் நாயகியாக நடிக்கிறார். அர்ஜுன் மற்றும் ஜீவாவுடன் இணைந்து ‘அகத்தியா’ திரைப்படத்தில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் டீசர், உணர்ச்சிபூர்வமான சினிமா அனுபவத்தின் முதல் பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. பார்வையாளர்களுக்கு சிலிர்ப்பூட்டும் வகையில் டீசர் அமைந்துள்ளது.

Related posts:

ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!

*ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த நடிகர் அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ பட தோற்றம்!*

ZEE5 app-ல் போலீஸ் டைரி 2.0 வெற்றி பெறும் ! தயாரிப்பாளர் குட்டிபத்மினி நம்பிக்கை !

நடிகர் துல்கர் சல்மானின் 'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!

எனிடெஸ்க் (AnyDesk) என்ற ரிமோட் கன்ட்ரோல் செயலி ரிசர்வ் வங்கி எச்சரிக்கை ?

ஜி.வி. பிரகாஷ் குமாரின் பரபர சஸ்பென்ஸ் த்ரில்லர், 'பிளாக்மெயில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!*

தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படத்திற்காக மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள கிருஷ்ண சேத்தனின் 'டைம்லெஸ...