29
Sep
தனிநபர் கடனுக்கான வட்டி உங்கள் பர்ஸை பதம் பார்க்கிறதா? உங்களுக்கு வாடகை வருமானம் வரக்கூடிய சொத்து இருந்தால், உங்களுடைய வட்டி சுமையைக் குறைத்துக்கொள்ள வழி இருக்கிறது. உங்களுக்கு வரும் வாடகை வருமானத்தின் மீது கடன் வாங்க முடியும். பாதுகாப்பான இந்தக் கடனில், தனிநபர் கடன் உள்ளிட்ட பிற கடன்களைக் காட்டிலும் குறைவான வட்டி வசூலிக்கப்படுகிறது.அதாவது, வீடு அல்லது வணிக வளாகம் உள்ளிட்டவற்றிலிருந்து கிடைக்கும் வாடகை வருமானத்தின் மீது வங்கிகள் கடன் வழங்குகின்றன. அதிகபட்ச கடன் தொகை வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. ஆனால், கடன் தொகையானது, கடன் முதிர்ச்சியடையும் காலம் வரையிலான வட்டி வருமானம் மற்றும் சொத்தின் மறு விற்பனை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.பெரும்பாலான வங்கிகள் சொத்து மதிப்பில் அல்லது கடன் காலத்தில் ஈட்டப் படும் வாடகை வருமானத்தில் 80 சதவீதம் கடனாக வழங்குகின்றன. சில வங்கிகள் இதற்கு மேலும் வழங்குகின்றன. உதார ணத்துக்கு பெடரல் வங்கி, கடன் காலத்தில்…
