உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுடன் கூட்டணி வைக்கிறது ஜியோ !

உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மூலமாகவே மக்கள் அதிகத் துல்லியமான சர்வதேச சேனல்கள் வரையில் உங்கள் டிவியில் பார்க்க வசதி செய்யப்படும்.அதிகத் துல்லியமான டிவி சேனல் சேவையை வழங்க உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் உடன் இணைந்து செட்-டாப் பாக்ஸ் சேவையை வழங்க ஜியோ முடிவெடுத்துள்ளது.ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 42-வது வருடாந்திர மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜியோவின் பல அதிரடி அறிவிப்புகளை நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டார். முகேஷ் அம்பானி கூறுகையில், “இந்தியாவில் இன்றும் செயல்பாட்டில் இருக்கும் லட்சக்கணக்கான கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு டிடிஹெச் சேவை என்பதை வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் ஒரு அபாயமான போட்டியாகவே உள்ளது.

இதைத்தவிர்க்கவும் உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் உள்ளூர் பணியைத் தொடரவும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஜியோ முடிவு செய்துள்ளது. இந்தாண்டின் துவக்கத்திலேயே நாட்டின் முக்கிய ஆப்ரேட்டர்களான ஹேத்வே (Hathway), டென் (Den), ஜிடிபிஎல் ஆகிய நிறுவனங்களை ஜியோ வாங்கியுள்ளது. இந்நிறுவனங்கள்நாட்டின் 30ஆயிரம் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் உடன் நேரடித் தொடர்பில் உள்ளது. தற்போது இந்நிறுவனங்களுடன் இணைந்து உலகத் தரத்திலான டிவி இணைப்பை மக்களுக்கு வழங்க உள்ளோம்.

இச்சேவையை நாங்கள் முழுவீச்சில் வெளியிட்ட பின்னர் உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மூலமாகவே மக்கள் அதிகத் துல்லியமான சர்வதேச சேனல்கள் வரையில் உங்கள் டிவியில் பார்க்க வசதி செய்யப்படும். இது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாது உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கும் வாழ்வாதாரம் வழங்கும் வாய்ப்பு ஆக இருக்கும்” என்றார்.

Related posts:

லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியத்தில் பிப்ரவரி 12, 2026 அன்று திரையிடப்படும் இந்திய திரைப்படம் 'பிரமயுகம்'!

கங்குவா --விமர்சனம்!

ஹபீபி--திரைவிமர்சனம்!

நல்ல காலம் பொறக்குது ! உடன்பிறப்புகளுக்கு நல்ல காலம் பொறக்குது !!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில், மாஸ் நடிகர் என்டிஆர், பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் அடுத்து இணையும் ஆக்‌ஷன் திர...

"என் சினிமா கேரியரில் தணல் படம் எப்போது வெளியாகும் என நான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார்..நடிகர் அஸ்வின் காகுமனு!

ஒத்த ஓட்டு முத்தையா-- விமர்சனம்.!

’கொட்டுக்காளி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!