அரசு பயிற்சி நிலையங்களில் சேருவோருக்கு தொழில் நிறுவனங்களில் இலவச பயிற்சி!

இந்திய அளவிலான தொழிற்பயிற்சி நிலையங்களின் தரத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. அகில இந்திய அளவில் தொழிற்பயிற்சி நிலையங்களில் நடத்தப்பட்ட தர நிர்ணயத்திட்டத்தில் சிறந்த தரமுடைய தொழிற்பயிற்சி நிலையங்களாக தெரிவு செய்யப்பட்ட 120 தொழிற்பயிற்சி நிலையங்களில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 40 தொழிற்பயிற்சி நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் ஐந்து இடங்களை தமிழ்நாட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் பெற்றுள்ளன.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த தொழில் நிறுவனங்களில் ரூ. 15 ஆயிரத்துக்கும் அதிகமாக ஊதியம் பெற்று வருகின்றனர்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி முடிவடையும் தருவாயில் தொழில் நிறுவனங்களில் இலவச பயிற்சி அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்குப்பின் அதே தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்று வழங்கப்படுகிறது.

2019-ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள இடங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களான மொத்தம் 37097 இடங்களை நிரப்பிட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு மூலம் முதற்கட்ட பயிற்சியாளர்கள் சேர்க்கை நிறைவு பெற்றது.

இதன் முடிவில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 7840 இடங்களும் தனியார் தொழிற்பயற்சி நிலையங்களில் 5888 இடங்களும் காலியாக உள்ளன.

இந்த காலியிடங்களை நிரப்பிட 02.08.2019 முதல் 20.08.2019 வரை விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை எனில் அந்த இடங்களை மாற்று இனத்தவரைக்கொண்ட நிரப்பிட ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இடம் கிடைத்திட வாய்ப்புள்ளது.

எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களில் சேர்ந்திட www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்திட இணையதளம் மூலம் விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.08.2019

Related posts:

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' பட அப்டேட் !
இயக்குநர் ராம்கோபால் வர்மா தயாரிப்பில் உருவாகியுள்ள 'சாரி' திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!
விமலின் 35வது திரைப்படம் 'பெல்லடோனா' சூப்பர் நேச்சர் ஹாரர் படமாக 16 மொழிகளில் உருவாகிறது!
40 ஆண்டுகளுக்கு பின் நடிகைக்கு சம்பள பாக்கியை திருப்பி கொடுத்த தயாரிப்பாளர்!
”எமோஷன், ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் அதிக எண்டர்டெயின்மெண்ட்டோடு ‘வெப்பன்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது” - நடிகர் வசந்த் ரவி!