07
Mar
எதிர்பார்க்கவில்லை.. உச்சகட்ட திருப்பம்.. தமிழக அரசியலில் ஒரே வாரத்தில் 3 டிவிஸ்ட்.. பரபரக்கும் களம் தமிழக அரசியலில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று திருப்பங்கள் ஏற்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் தமிழக அரசியல் களம் சூடாக சென்று கொண்டு இருக்கிறது. அதிலும் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் கிட்டத்தட்ட கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்ட நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்த்து எழுந்துள்ளது. இன்று திமுகவின் திருச்சி கூட்டம், அமித் ஷாவின் தமிழ்நாடு வருகை என்று தமிழக அரசியல் பரபரப்பாக காணப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த 3 சம்பவங்கள் தேர்தல் நேரத்தில் முடிவையே மாற்றும் காரணிகளாகி உருவெடுத்துள்ளது. தமிழக அரசியலில் ஏற்பட்ட மிகப்பெரிய முதல் டிவிஸ்ட் என்றால் அது சசிகலாவின் அரசியல் விலகல்தான்.…
