பா.ஜ.க தலைமையில் கூட்டணி?அதிமுக கூட்டணிக்கு வேட்டு வைத்த அண்ணாமலை !

பா.ஜ.க தலைமையில் கூட்டணி.?அதிமுக கூட்டணிக்கு வேட்டு வைத்த அண்ணாமலை !அண்ணாமலையால் விலகிச் செல்லும் அதிமுக!

அண்ணாமலையால் பாஜகவின் உள் கட்டமைப்பே தமிழகத்தில் ஆட்டம் கண்டுள்ளது. அதன் அடையாளமாகத்தான் அந்தக் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பலர் விலகிக்கிட்டு வர்றாங்க.. தன் வரம்பு மீறிய பேச்சுக்களால், அரசியலை வன்முறைக் களமாக்கும் அண்ணாமலையால் அதிமுக விலகும் வாய்ப்பு உருவாகியிருக்கிறதா சொல்றாங்க.

ஒருவரையடுத்து ஒருவராக அடுத்தடுத்து பாஜகவில் இருந்து பலரும் விலகுவது உணர்ந்து தன்னை சற்றேனும் சுய பரிசீலனைக்கு உள்ளாக்கிக் கொள்ள விரும்பாத அண்ணாமலை, தோழமைக் கட்சியான அதிமுகவின் மீது பாய்ந்து குதறி வர்றதோடு, தன்னுடைய அடிப் பொடிகளை வைத்தும் அதிமுகவிற்கு எதிராக வசைமாறிப் பொழிந்து பகை அரசியல் செய்கிறார்! இதனால் இரு கட்சி அணிகளும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வர்றாங்க.

ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு சிலர் மாறிச் செல்வதும், தன்னை பாதிப்புக்கு ஆளாக்கிய தலைமை மீது குற்றம் சாட்டுவதும் புதிதல்ல!அரசியல்ல காலங்காலமா நடக்கிறது தான்! ஆனால், அண்ணாமலை காலத்தில் தான் ஏராளமானவர்கள் பாஜகவில் இருந்து தொடர்ந்து விலகிகிட்டே வர்றாங்க.. தமிழகத்தை பொறுத்த அளவில் அப்படி பாஜகவில் இருந்து விலகியவர்கள் சேர முடிந்த ஒரே கட்சியாக அதிமுக தான் இருக்க முடியும்.ஏன்னா தங்களின் ஜென்மப் பகைவனாகக் கருதும் திமுகவிற்கோ, காங்கிரசிற்கோ அவர்கள் செல்வதற்கு அதிக வாய்ப்பில்லை. அரசியலுக்குள் அதிரடியாக நுழைந்த அண்ணாமலை இன்னும் எதையுமே கற்றுக்கொள்ளலை. ஆனால், எல்லாம் தெரிந்தவர் போலப் பேசி அனைவரையும் பகையாளியாக ஆக்கிக் கொள்கிறார்!

பாஜகவிலேயே கூட, தங்கள் கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் அனைவருமே அண்ணாமலையிடம் இருந்து சற்று விலகியே இருக்கிறாங்க.. அண்ணாமலையைச் சுற்றி சில்லறை தலைவர்களான கிரிமினல்களே வலம் வர்றாங்க.. அண்ணாமலைக்கு பாஜகவை வளர்க்கும் நோக்கம் அறவே கிடையாது! தன்னை வளர்த்துக் கொள்வதில் மட்டுமே குறியாக உள்ளார். பொதுவாக எந்த தேசியக் கட்சியும் இது போன்ற நபர்களை நீண்ட நாட்கள் அனுமதிக்காது! பாஜக தலைமை அண்ணாமலையை எப்போ வேண்ம்னாலும் தூக்கி எறிந்துவிட வாய்ப்பிருக்குது.

பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் தலைவர் சி டி ஆர் நிர்மல் குமார் உட்பட பாஜகவின் ஐடி.பிரிவினர் 13 பேர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் தொடர்ந்து இணைஞ்சுகிட்டு வர்றாங்க.

இதப்பத்தி அண்ணாமலை என்ன சொல்றாருன்னா ”பாஜகவின் இரண்டாம் மூன்றாம் கட்ட தலைவர்களை திராவிட கட்சிகள் இழுத்துக்கிட்டு வர்றாங்க. திராவிட கட்சிகளின் இந்த செயல் பாஜகவின் வளர்ச்சியை தான் காட்டுது! திராவிட கட்சிகளைச் சார்ந்து தான் பாஜக வளரும்ங்கிற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் இன்னைக்கு பாஜகவிலிருந்து ஆட்களை இழுத்துச் சென்றால்தான் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் வளரும்ங்கிற நிலைமை ஏற்பட்டிருக்குது. எனவே, பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது நல்லது தான். அப்போ தான் புதியோர்களுக்கு பதவி வழங்க முடியும். பாஜகவினரை இணைத்துக் கொண்டு தாங்கள் வளர்ந்து விட்டதாக காட்ட அதிமுக முயற்சிக்குது! பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும். அவர்களின் ஒவ்வொரு வினைக்கும் நிச்சயம் எதிர்வினை இருக்கும்னு பேசினாரு அண்ணாமலை.இந்தப் பேச்சு சாமார்த்தியமாக இருக்கலாம்! சாகஸமாகக் கூட இருக்கலாம்! ஆனால், அரசியல் கூட்டணிக்கு ஆபத்தா முடிஞ்சிடும்ங்கிறதை அண்ணாமலையால் உணர முடியலை! உண்மையில் அண்ணாமலையின் முதிர்ச்சியற்ற நடவடிக்கைக்கு ஆகச் சிறந்த உதாரணம் தான் இந்தப் பேச்சு!

பாஜகவினரை இணைத்துக் கொண்டு தாங்கள் வளர்ந்து விட்டதாக காட்ட அதிமுக முயற்சிக்சிக்குதுன்னு அண்ணாமலை சொல்றது வேடிக்கையா இருக்குது.! தமிழகத்தில் அதிமுகவின் செல்வாக்கு என்ன? பாஜகவின் செல்வாக்கு என்ன..? அதிமுகவின் வளர்ச்சிக்கும் வாக்கு வங்கிக்கும் முன்னால பாஜகவால நிக்கவே முடியாது. !அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் கடுமையான பேச ஆரம்பிச்சிட்டாங்க.தன் இயலாமைகளை மறைத்துக் கொண்டு, தன்னை வீரன் போலக் காட்டிக் கொள்ள முயன்றாலும், அண்ணாமலையின் எல்லை மீறிய பேச்சுக்கள் அவர் ஒரு கோழை என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுது.

அதே சமயம் அதிமுகவில் வழிகாட்டு உறுப்பினராக இருந்த சோழவந்தான் மாணிக்கம், இளம் பெண்கள் பாசறை நிர்வாகி அரவக்குறிச்சி செந்தில்நாதன், மீனவர் அணி தலைவர் நீலாங்கரை முனுசாமி போன்றவர்கள் பாஜகவில் சேர்ந்த போது எடப்பாடி பழனிசாமி இப்படி எல்லாம் புலம்பலை! இது போதாதுன்னு செங்கோட்டையன் மகன் கதிர் ஈஸ்வரனையும் அண்ணாமலை இழுத்துக் கொண்டு வந்ததும் அதிமுக தலைமைக்கு தெரியாதது அல்ல! அனைத்துக்கும் மேலாக பாஜக கொடுக்கின்ற ஆதரவினால் தான் பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு குடைச்சலுக்கு மேல் குடைச்சல் தர்றாருங்கிறது அதிமுகவில் உள்ள தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை எல்லாருக்கும் தெரியும். இவ்வளவையும் தாங்கிக் கொண்டு. தெரிந்தும் தெரியாதது போல ஒரு அரசியலை அதிமுக தலைமை செய்து கொண்டிருப்பதில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி எவ்வளவு பெரிய ஜித்தன், வில்லனுக்கு வில்லன் என்பதை உணர வேண்டாமா..? இந்த அண்ணாமலை.அரசியல்ல தவளை போல தன்னோட இருப்பை அடிக்கடி காட்டிக் கொண்டிருக்கும் நோக்கத்தில கத்திக் கொண்டிருந்தால், பாம்பின் வயிற்றுக்குத் தான் இரையாக வேண்டி இருக்கும்!

பாமகவும் பாஜகவிடம் இருந்து விலகி வருது! தேமுதிகவும் விலகிடுச்சி! திமுகவோ கூட்டணி பலத்தோடு, ராஜபலத்தையும் கொண்டுள்ளது! இந்த நிலையில் ஒன்றிரண்டு எம்.பி, எம்.எல்.ஏ சீட்டு வேணும்னா கூட, அதிமுக நிழலில் ஒதுங்குவதைத் தவிர, வேறு நாதியற்ற நிலையில் தான் தமிழக பாஜக இருக்குது. அப்படி இருக்கும் போது, அந்த அதிமுகவையும் பகைத்துக் கொண்டு ஒற்றை மரமாக பாஜகவை நிற்க வைக்க அண்ணாமலை விரும்பினால், ஒரு வகையில் அதுவும் தமிழகத்திற்கு நல்லது தான்! மேலும், எடப்பாடியை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு பன்னீர் செல்வத்தை பாஜகவில் இணைத்துக் கொண்டால், அதைவிட மகிழ்ச்சி அதிமுகவிற்கு இருக்க முடியாது! பாஜகவிடம் இருந்து விலகிக் கொள்ள அதிமுகவிற்கு வசதியாகிவிடும்!

பாஜகவின் டெல்லி தலைமை அதிமுகவுடன் கூட்டணி பேச இனி அண்ணாமலையை அனுப்ப முடியாது!அப்படி அனுப்பினால், அதற்கு நல்ல பலன் கிடைக்காது!”அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருக்கும் வரை அதிமுக-பாஜக கூட்டணி சாத்தியமில்லை” என அதிமுக தலைமை சொன்னால், அண்ணாமலையை ஓரம் கட்டுவதைத் தவிர, டெல்லித் தலைமைக்கு வேறு வழி இருக்காது. இல்லைன்னா, ஏதாவது ஒரு கட்டத்தில், ‘என்ன நடந்தாலும் பரவாயில்லை, பாஜகவிடம் இருந்து விலகி நிற்க, அண்ணாமலையின் அடாவடித்தனத்தை ஒரு வாய்ப்பாக்கிக் கொள்ளலாம்’ என அதிமுக முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம்!
இப்படி எல்லாம் நடக்கும்பட்சத்தில், ‘தங்களை பிடித்த எல்லா பீடையும் தாங்களாகவே விலகிடுச்சுன்னு’ அதிமுகவினர் சந்தோஷப்படுவாங்க.

அண்ணாமலை அரசியலில் இருந்தே அடியோடு சொந்தக் கட்சியாலேயே தூக்கி எறியப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லைன்னு அடிச்சு சொல்றாங்க அரசியல் ஆய்வாளர்கள்.. அப்படி நடந்தால் தமிழக அரசியல் களம் சற்றேனும் ஆரோக்கியமடையும் அதிமுகவை விமர்சிக்க வேண்டாம்னு தமிழக பாஜகவை கண்டித்த ‘டெல்லி’..பின்னணியில் வேற ஏதோ பிளான் இருக்காம். அதிமுக தலைமை பத்தியோ அக்கட்சி தொண்டர்களப் பத்தியோ எதுவும் குறை கூறி பேசவேண்டாம்னு பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா சொன்னதாக தகவல்கள் வெளியாகியிருக்குது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை காட்டமாக விமர்சித்ததும் பாஜகவினர் மத்தியில் புகைச்சலை உண்டாக்கியது. பாஜக நாராயணன் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு அதிருப்தியால் கட்சி தாவுவது சகஜம் என்றாலும், கூட்டணிக் கட்சியான பாஜகவில் இருந்து வந்த நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமியே நேரடியாக வரவேற்றது பாஜகவினருக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தது என்றே சொல்லப்படுது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போதே அதிமுக – பாஜக இடையே லேசான உரசல் வெளிப்பட்டதை காண முடிந்தது. பாஜக தலைவர் அண்ணாமலையும் நேரடியாக இவ்விவகாரம் தொடர்பாக பேசினார். பா.ஜ.க. நிர்வாகிகளை அழைத்து கட்சி நடத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளதுன்னும் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டுன்னும் காட்டமாக பேசினார். இதனால அதிமுக-பாஜக கூட்டணியில சலசலப்புஏற்பட்டிருக்குது. மேலும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பா.ஜ.க.வினர் எரித்து போராட்டம் நடத்தினார்கள். இதனால், அதிமுக – பாஜக நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுச்சு. இதன் காரணமா, அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் தான் கூட்டணி என்றும் அதிமுக மூத்த தலைவர்கள் வெளிப்படையாகவே பேசி கூட்டணி முறிய இருப்பதாக வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருந்தனர். ஜே பி நட்டாவின் அறிவிப்புக்கு பிறகு கூட பாஜக நிர்வாகிகள் சிலர் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததை பார்க்க முடியுது. இதனிடையே, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கடந்த 10-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தாரு. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தமிழக பாஜக நிர்வாகிகளை தனியாக சந்தித்து ஜேபி நட்டா ஆலோசனை நடத்துனாரு. அப்போ பாஜக நிர்வாகிகளுக்கு சில அறிவுறுத்தல்களையும் சொன்னதா சொல்லப்படுது. சுமூக உறவை வச்சுக்கணும் அதாவது, அதிமுகவுடன் நாம் (பாஜக) சுமூக உறவை வச்சுக்கணும். அதிமுக தலைமை பத்தியோ அக்கட்சி தொண்டர்கள் பத்தியோ எதுவும் குறை சொல்லி மேடைகள்ல பேசவேண்டாம். தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் இதனை பின்பற்ற வேண்டும். மீறி நடக்கக் கூடாது”ன்னு பல்வேறு கருத்துக்களை கண்டிப்புடன் சொல்லிட்டுப் போனாராம். ஜேபி நட்டாவின் இந்த பேச்சு மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தொடரும்ங்கிறது இப்போதைக்கு உறுதியாகி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் சொல்றாங்க. இந்த பரபரப்பான சூழ்நிலைல அண்ணாமலையை விமர்சித்த கடம்பூர் ராஜூ அதிமுக – பாஜக நிர்வாகிகள் இடையேயான கருத்துமோதல்கள் கடந்த சில நாட்களாக அடங்கியிருந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, அண்ணாமலை குறித்து விமர்சித்ததும் அவருக்கு பதிலடியாக தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பேசியதும் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொத்திகிடுச்சு. கடம்பூர் ராஜூ, அண்ணாமலையை ஒரு கத்துக்குட்டின்னும் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் டெபுடேஷனில் வந்திருக்காரு ஆட்சி மாற்றம் வந்தால் மீண்டும் காவல்துறைக்கு திரும்பிடுவாருன்னு விமர்சிச்சார். இதுக்கு உடனடியாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் காட்டமாக எதிர்வினையாற்றினார். நாராயணன் திருப்பதி என்ன சொல்லியிருந்தாருன்னா அண்ணாமலை டெபுடேஷனில் அரசியலுக்கு வந்திருப்பதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் காவல்துறைக்கு திரும்பிடுவாருன்னும் அவன், இவன்ங்கிற ஏக வசனத்தில் பேசுனதோட அரசியலில் கத்துக்குட்டின்னு விமர்சிச்சு பேசியிருப்பது அரசியல் அநாகரீகத்தின் வெளிப்பாடு. டெபுடேஷனில் அரசியலில் இருப்பது அதிமுகதான் என்பதை கடம்பூர் ராஜூ உணர வேண்டும். கடம்பூர் ராஜூ அரசியல் கத்துக்குட்டி தமிழகத்தில் லஞ்ச, ஊழலை ஒழித்து கட்டி, நாகரீக அரசியலுக்கான மாற்றத்தை உருவாக்கத்தான் அண்ணாமலை அரசியல் பிரவேசம் எடுத்திருக்காரு கடம்பூர் ராஜு போன்ற அரசியல் கத்துக்குட்டிகளுக்கு தெரியாதது வியப்பல்ல. கட்சியை அண்ணாமலை அவர்கள் காலி செய்து விடுவார் என்று சொல்லும் கடம்பூர் ராஜு அவர்களே, எங்கள் கட்சியை நாங்கள் பார்த்து கொள்கிறோம். காலியாகிக் கொண்டிருக்கும் உங்கள் கட்சியை நீங்கள் கவனமாக பார்த்து கொள்ளுங்கள்” என மிகக் கடுமையாகவே பதிலடி கொடுத்தார். ஆனா டெல்லியின் விருப்பம் வேற மாதிரியா இருக்குது.அதாவது அதிமுக – பாஜக நிர்வாகிகள் இடையே சில சில கருத்து மோதல்கள் இருந்தாலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி நீடிப்பதையே டெல்லி தலைமை விரும்புவதால், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் இந்த மோதல்கள் தேர்தல் கூட்டணியை பங்கம் செய்யாது என்றே அரசியல் வட்டாரத்தில் பேசும் கருத்தாக உள்ளது.இந்த நிலையில் சமீபத்தில நடந்த பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக பாஜக கூட்டணி முறியிற மாதிரியான பேச்சு அடிபட்டுச்சு.

இதைத் தொடர்ந்து நடந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு, `பா.ஜ.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்குமிடையே எந்தவித மோதலும் இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்குள் சிறுசிறு சலசலப்பு இருக்கத்தான் செய்யும். பா.ஜ.க-வுடனான கூட்டணி தொடரும்ன்னு அ.தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அ.தி.மு.க தலைவர்கள், நிர்வாகிகள் யாரும் பா.ஜ.க-வையோ அண்ணாமலையையோ விமர்சிக்கக் கூடாதுன்னு எடப்பாடி ஸ்டிரிக்டா சொல்லியிருப்பதாகச் சொல்லப்படுது.

இதற்கிடையே தமிழகத்துக்கு வந்த பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா,என்னதான் சொன்னாலும், தொடர்ந்து அ.தி.மு.க., பா.ஜ.க இடையேயான வார்த்தைப்போர் முத்திகிட்டே வருது.இந்த நிலையில்தான், பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அமைந்தகரையிலுள்ள ஐயாவு மஹாலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாம்.

இதப்பத்தி பா.ஜ.க மூத்த தலைவர் என்ன சொல்றாருன்னா “ `அ.தி.மு.க-வினர் நம்மைவிட்டு விலகுவதற்கான எல்லா வேலைகளையும் செஞ்சுகிட்டு தான் வர்றாங்க.. அதனால இனிமேல அவங்களோட கூட்டணிய தொடர்றதா… இல்லை தனித்து நிக்கிறதாங்கிறதை நம் கட்டமைப்பை வைச்சுத்தான் முடிவுசெய்ய வேண்டியிருக்குது. அதற்காக பூத் அளவில் நாம் உழைக்கணும். அதனால, அ.தி.மு.க உடனான கூட்டணிக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கும் நேரத்தில் இருக்கிறோம்ன்னு கூட்டணி குறிச்சு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டதுன்னாரு.

அந்த கூட்டத்தில் பேசப்பட்ட கூட்டணி விவகாரத்தின் பின்னணி குறித்துப் பேசினார், தமிழக பா.ஜ.க தலைமைக்கு நெருக்கமான இரண்டாம் கட்ட தலைவர் ஒருவர் என்ன சொல்றாருன்னா மூணு மாதங்களுக்குள்ள தமிழகத்தில் பா.ஜ.க-வோட உண்மையான நிலை என்னங்கிறதப் பத்தி அறிக்கை கேட்கப்பட்டிருக்குது. அதில் பா.ஜ.க குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

அதனடிப்படையில் பா.ஜ.க தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கணும். அப்படிக் கட்சியின் வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டிருந்தா உடைந்த அ.தி.மு.க-வில் யாரெல்லாம் பா.ஜ.க-வோடு கூட்டணி அமைக்கத் தயாராக இருக்காங்களோ அவங்களைப் பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க தேசியத் தலைமை ஆலோசனை மேற்கொண்டிருக்குது. அதனால, இப்போது எங்களுக்கு இருக்கும் ஒரே வேலை தி.மு.க Vs பா.ஜ.கங்கிகிற போட்டியை உருவாக்க, கட்சியின் கட்டமைப்பை உறுதிப்படுத்தணும். அதை டெல்லி தலைமை தெளிவாகவும், கண்டிப்போடவும் உத்தரவிட்டிருக்குதுன்னு சொல்றாரு.

தமிழகத்தில பாஜக வளரணும்னு நினைக்கிறவங்க யாரு? தமிழக பாஜக பத்தோடு பதினொன்னாக இருக்கணும்னு நினைக்கிறது யாருன்னு தெரிஞ்சுக்கிறதுக்கு அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச் வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சுன்னு சொல்றாங்க.. தமிழக அரசியல் களம் இப்போ பாஜகவை சுத்தியே நகருதுன்னு சொல்லலாம், குறிப்பா தமிழக பாஜகவில் என்ன நடக்குது? யார் என்ன பேசுறாங்க? யார் வெளியில் போறாங்க? யார் என்ன கருத்தை சொல்றாங்கன்னு மத்த கட்சிகள் அதனை விமர்சிச்சோ, ஆதரிச்சோ பேசி அரசியல் செய்யும் நிலையில் தான் தற்போதைய தமிழக அரசியல் களம் இருக்குது. தமிழக பாஜக தான் இப்போ பேசுபொருளா ஆகிடுச்சி, இவ்வளவுக்கும் தமிழக பாஜக ஆளுங்கட்சியும் கிடையாது, எதிர்க்கட்சியும் கிடையாது தமிழகத்தில். இப்படி பாஜக தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறி வரக் காரணம் அண்ணாமலை என்கிற இளைஞரின் தமிழக பாஜக தலைமை, ஜே.பி.நட்டாவும், அமிஷாவும், பி.எல்.சந்தோஷும் எதை முன்னிறுத்தி அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நியமிச்சாங்களோ அதுக்கு உண்டான காலம் இப்போ நெருங்கிடுச்சி.. தமிழக பாஜக இத்தனை ஆண்டுகளாக ஏதாவது ஒரு கட்சிகளுடன் கூட்டணி வைக்கும், இல்லைன்னா தனித்து நிக்கும் ஆனால் பெருமளவில் மக்கள் பிரதிநிதிகளை பெற முடியாத நிலையில தான் இதுவரைக்கும் இருந்து வந்துச்சுன்னே சொல்லலாம். தமிழக பாஜக அதிமுக கூட்டணியில் இருக்கும் போது அதன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் வேற மாதிரி இருக்கும், திமுக கூட்டணியில் இருக்கும் போது பாஜக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் வேற மாதிரி இருக்கும். ஆனா இப்போ தமிழக பாஜக அதனை எல்லாம் தகர்த்துவிட்டு கூட்டணி அமைந்தால் அது பாஜக தலைமையில் தான், இப்படி தமிழக பாஜக தலைமையில் கூட்டணி அமைந்தால்தான் பாஜக அடுத்த கட்டத்துக்கு நகரும்ங்கிற நிலையை எட்டி இருக்குது. இதுக்கு அண்ணாமலை போட்ட திட்டமும் ஒரு முக்கிய காரணமாகும், குறிப்பாக தற்பொழுது உள்ள சூழலில் திமுக தலைமையிலான கூட்டணி எப்படியும் காங்கிரஸ் அல்லது பாஜக அல்லாத எதிர் கூட்டணியில் தான் 2024 தேர்தலை சந்திக்கும். அதிமுக கூட்டணி தற்பொழுது இருக்கும் இரட்டை தலைமை முடிவிற்கு வந்த உடன் திமுகவை எதிர்ப்பதை பிரதானமாக வைக்குமே தவிர தேசிய அரசியலில் என்னைக்குமே அதிமுக பெரிய அளவில் ஆர்வம் காட்டியதில்லை. அதிமுகவை பொறுத்த வரையில் மக்கள் மத்தியில் நாங்க எம்ஜிஆர் துவங்கிய கட்சி, ஜெயலலிதா வழி நடத்திய கட்சி திமுகவின் எதிர்ப்பே எங்கள் நிலைப்பாடுங்கிற ரீதியில் அரசியல் செய்து தான் வருமே தவிர தேசிய அரசியலில் பெரிய அளவில் அதிமுக என்னைக்குமே ஈடுபட நினைச்சதில்லை, ஈடுபடவும் ஈடுபடாது. இந்த நிலையில் இப்போ தமிழகத்தில் தேசிய அரசியலில் பங்கு பெற விரும்பும் கட்சிகளான புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க, அமமுக புதிய தமிழகம் இது போன்ற கட்சிகள் தங்களுடைய பிரதிநிதிகள் நாடாளுமன்றம் வரை போகணும்னு நினைக்கும் கட்சிகளாகும். இந்த கட்சிகளை எல்லாம் ஒன்றிணைச்சு ஒரு புதிய கூட்டணியை பாஜக தலைமையில் அமைக்கும் பட்சத்தில் பாஜக பிரதான கட்சியாகவும் இருக்கும், பிரதமர் மோடி தான் 3 வது முறையாக வரணும்னு மக்கள் நினைக்கும் சமயத்தில் பாஜக கூட்டணியை ஆதரிக்க செய்வார்கள் அதனாலதான் அண்ணாமலை இப்போ காய்களை நகர்த்தி வர்றார். கூட்டணி வைத்து மூன்றாவது அணியை உருவாக்கி தேர்தலை எதிர்கொள்ள பாஜக முயன்று வருவதாக சொல்லப்படுது. மட்டுமல்லாது ஏற்கெனவே தென்சென்னை, வேலூர், ஈரோடு என தங்களுக்கு சாதகமாக உள்ள 10 இடங்களை பாஜக பட்டியலிட்டு வைத்திருக்கிறது. இதன்படி நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று அண்ணாமலை, அமித்ஷாவுடன் கலந்துரையாடியிருக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த சூழலில் அண்ணாமலை நகர்த்தும் காய்களை ஒரு சிலர் பாஜக ஆதரவாளர்களாக காண்பித்துக் கொண்டு அண்ணாமலை செய்வது சரியில்லை, பாஜக அதிமுக கூட்டணியுடன் தான் இருக்கணும், அண்ணாமலை ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? அண்ணாமலை ஏன் கூட்டணியை விட்டு விலக நினைக்கிறாருங்கிகிற ரீதியில் பல விமர்சனங்கள் எழுந்து வருது. இது அண்ணாமலைக்கு கட்சியில் யார் யாரெல்லாம் முன்னேறணும்னு நினைக்கிறாங்க. யாரெல்லாம் இப்படியே இருந்தால் போதும்ன்னு நினைக்கிறாங்கன்னு கண்டு புடிக்கிறதுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைஞ்சிடுச்சி. காரணம் பாஜகவில் தலைவர் பொறுப்பை அண்ணாமலை கையில் எடுத்த சமயம், ‘எனக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டிருக்குது, நான் எனக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் தமிழகத்தில் பாஜகவை பிரதான கட்சியாக கொண்டு வருவேன்னு சபதம் எடுத்து அந்த சமயத்தில் தலைவர் பொறுப்பிற்கு வந்தார். இதனால்தான் பாஜக அடுத்த கட்டத்திற்கு நகரணும், நாம் அடுத்த கட்டத்திற்கு நகரணும்ன்னா முதலில் கூட்டணியில் இருந்து வெளியே வரணும், முதலில் கூட்டணியிலேருந்து வெளியே வரணும்ன்னா பாஜக தலைமையில் கூட்டணி அமையணும், பாஜக தலைமையில் கூட்டணி அமைஞ்சா மட்டுமே பாஜக தலைமையை ஏற்றுக் கொண்டு கூட்டணிக்கு வரும் கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் தாமரை மலர வைக்க முடியும் அதனை விடுத்து நம் மற்ற கட்சி கூட்டணியில் ஒட்டிக் கொண்டு இருந்தால் தமிழகத்தில் பாஜக என்னைக்குமே தனியா வளரவே வளராது, நமது சித்தாந்தம் இங்கே தமிழ்நாட்டில் இருக்கணும்ன்னா அதுக்கு பாஜக தலைமையிலான கூட்டணி வேணும்ன்னு நினைச்சு அண்ணாமலை முழுவதும் செயல்பட்டுட்டு வர்றாரு.. இதன் காரணமாத்தான் இப்போ கூட்டணியில் நான் இருக்கப் போவதில்லைன்னு அண்ணாமலை கூட்டத்தில பேசுனது சலசலப்பை ஏற்படுத்திடுச்சி. இதன் பின்னணியில் அண்ணாமலை கூட்டணியில் இருந்து பிரிந்தால் யாரெல்லாம் ஒப்புக்கொள்கிறார்கள் எனவும், கூட்டணியில் இருந்து பிரிந்தால் யாரெல்லாம் அதற்கு மறுக்கிறார்கள் எனவும் அண்ணாமலை அனைவரையும் கவனித்து வருகிறார் கூட்டணியில் பிரிந்தால் வாருங்கள் நாம் தனியாக களம் காணலாம்னு நெனைக்கிறவங்க கட்சிக்காக வேலை செய்றவங்க, கட்சி வளரவேணும்ன்னு நினைப்பவர்கள்ன்னும்! கூட்டணியில் இருந்து பிரிந்தால் ஏன் நாம் தனியாக பிரிய வேண்டும் நாம் அப்படியெல்லாம் பிரியக்கூடாது நாம் கூட்டணி கட்சியில் மட்டுமே இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் எல்லாம் கட்சி வளருவதை விரும்பாதவர்கள்ன்னு அண்ணாமலை கணக்கு போட்டு விட்டார். இதன் காரணமாகத்தான் அண்ணாமலை இந்த முடிவை அறிவித்ததாக வெளியில் செய்தி பரவ விட்டது தெரியவந்துள்ளது, விரைவில் இது குறித்த பல செய்திகள் வெளிவரும் எனவும் தெரியுது 4 மாநில தலைவர்களை மாற்றி அறிவித்த தேசிய தலைவர்
ஜே.பி.நட்டா தமிழக பாஜக தலைமையை மட்டும் எந்த விதத்திலும் மாற்றம் ஏற்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார். இதற்குப் பின்னணியில் அண்ணாமலை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார், அவரை அப்படியே செல்ல விட்டால் பாஜகவின் வளர்ச்சிக்கு தான் சரியாக இருக்குமே தவிர அவரை மாற்றுவது என்பதெல்லாம் சரியான முடிவல்ல என ஜே.பி.நட்டா தெளிவாக உணர்ந்துள்ளார்.இப்படி 4 மாநில தலைவர்களை மாற்றி அறிவித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தமிழக பாஜக தலைமையை மட்டும் எந்த விதத்திலும் மாற்றம் ஏற்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார். அதன் காரணத்தினால் தமிழக பாஜக தலைமையைப் பற்றி அவர் யோசிக்கவே இல்லை, மேலும் கிடைத்த தகவலின் படி எப்படியும் அண்ணாமலை 2026 வரை தமிழக பாஜகவின் தலைவர் என்ற பதவியில் இருந்து அகற்றப்பட மாட்டார் எனவும் தெளிவாகத் தெரியுது. இதோ அண்ணாமலையை மாற்றி விடுவார்கள்! இதோ அண்ணாமலையை டெல்லி பாஜக தலைமை ஓரங்கட்டி விடும்! இதோ அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைந்துவிடும், இதோ அண்ணாமலையை தேசிய அரசியலுக்கு எடுத்து விடுவார்கள், இதோ அண்ணாமலையை ஏதாவது ஒரு வாரியத்தில் தலைவர் பதவியில் அமர்த்தி தமிழக பாஜகவின் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவித்து விடுவார்கள், இதோ அண்ணாமலை தமிழகத்தை விட்டே சென்று விடுவார் என்றெல்லாம் கடந்த சில நாட்களாக பேசி வந்தவர்களை ஒரே ஒரு அறிவிப்பின் மூலம் ஒரே அடியாக அடித்து உட்கார வைத்து விட்டார் ஜே.பி.நட்டா. ஆனா தமிழகத்துல நெலமை வேற மாதிரியா இருக்குது.இரண்டு கட்சிகளின் கூட்டணியும் மொத்தமாக முடிவிற்கு வருவதற்கான அறிகுறியும் தெரிய தொடங்கி உள்ளது.இப்படி பாஜகவை சுற்றி தமிழக அரசியல் சுழன்று வரும் நிலையில் அண்ணாமலை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க சென்றிருந்தார். கடந்த 26 ஆம் தேதி அண்ணாமலை டெல்லி சென்றார் டெல்லி செல்லும் அவர் ஒரு குறிப்பிட்ட திட்டத்துடன் பிரதமர், உள்துறை அமைச்சர், பாஜக தேசிய தலைவர் ஆகியோரை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல், எதிர்க்கட்சிகள் எந்த விதமான அஸ்திரத்தை பயன்படுத்துகின்றன, எது நமக்கு தேவை, எந்த திட்டம் நமக்கு தொலைநோக்கு பார்வையுடன் இருக்கும், எந்த திட்டம் நமக்கு கட்சியை வளர்ப்பதற்கு உதவும், எந்த திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்தில் தனித்து பாஜக வளரும், எந்த திட்டத்தை நாம் செயல்படுத்தக்கூடாது, கட்சியில் உள்ள நிலைப்பாடு என்ன, கட்சி நிர்வாகிகளின் மனநிலை என்ன, மேலும் தமிழக அரசியல் கள நிலவரம் என்ன, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் பாஜக என்ன செய்ய வேண்டும், பாஜகவை, வரவேற்கும் கூட்டணி கட்சிகள் என்ன என்ன, மேலும் பாஜகவிற்கு ஆதரவு தரும் கட்சிகள் என்ன, பாஜகவை எதிர்த்து அரசியல் செய்யும் கட்சிகளின் திட்டம் என்ன இப்படி தமிழக அரசியலின் அனைத்து விதமான டேட்டாக்களை அண்ணாமலை அந்த சமயம் மூவரிடமும் விவரித்து உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கட்சியில் செய்ய வேண்டிய மாறுதல்கள், சில ரகசிய நடவடிக்கை பற்றிய தகவல்கள் அனைத்தையும் அண்ணாமலை பேசினார்.அமித்ஷாவிடம் அதிமுக கூட்டணி குறித்து பேசிய அண்ணாமலை.. தமிழ்நாட்டில் பாஜக எம்பிகள் பெறுவதை விட ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே முக்கியம். 2024 முக்கியம் இல்லை. 2026தான் முக்கியம். 2024ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நாம் எப்போதும் 3வது இடத்திலேயே இருப்போம். நாம் இரண்டாம் இடத்திற்கு வர வேண்டும் என்பதே முக்கியம், அதை செய்ய நாம் தனித்து களமிறங்க தயாராக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக சொல்லப்படுது. அதோடு தமிழ்நாட்டில் 2024 தேர்தலில் திமுகவிற்கு சாதகமான சூழ்நிலை நிலவுவது பற்றியும் ரிப்போர்ட் சென்றுள்ளதாம். அமித்ஷாவிடம் இந்த ரிப்போர்ட்டை பாஜக நிர்வாகிகள் சார்பாக கொடுக்கப்பட்டு உள்ளதாம். இதை எல்லாம் மனதில் வைத்து டெல்லி ஆலோசனைகளை மேற்கொண்டு வருது.அண்மையில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்த அண்ணாமலை முக்கிய ஃபைல் ஒன்றையும் கொடுத்துவிட்டு வந்துள்ளார். தனித்து நின்று வெற்றி பெறலாம் என அண்ணாமலை உறுதியாக நம்புவதற்கு 2014 தேர்தல் முடிவுகளையே உதாரணமாக சொன்னாராம்.

அந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக, ஐஜேகே, கொமதேக, புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 37 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. திமுக கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொறுத்தவரை தர்மபுரியில் பாமக அன்புமணி ராமதாஸும், கன்னியாகுமரியில் பாஜக பொன்.ராதாகிருஷ்ணனும் வெற்றி பெற்றனர்.தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் 2019 தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த போது 39 இடங்களில் அதிமுகவுக்கு மட்டும் 1 இடம் கிடைத்தது. பிற இடங்களை முழுவதுமாக திமுக கூட்டணி கைப்பற்றியது.

எனவே 2014 போல பாஜக தலைமையில் ஒரு அணி அமைத்து அதில் தேமுதிக, பாமக, அமமுக, ஓபிஎஸ், சசிகலா, புதிய நீதி கட்சி, ஐஜேகே, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்கலாம் என்பது தான் அண்ணாமலையின் திட்டமாக உள்ளது.

ஆனால் 2014 போல நிலைமை 2024இல் இல்லை என்பது தான் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. “2014இல் காங்கிரஸ் எதிர்ப்பு அலை நாடு முழுவதும் அதிகமாக இருந்தது. திமுக எதிர்ப்பு அலை தமிழ்நாட்டில் வலுவாக இருந்தது. ஆனால் தற்போது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு இருக்கிறது.

பாஜக கூட்டணியில் அப்போது இடம்பெற்ற தேமுதிகவின் வாக்கு வங்கி அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. 2011இல் அக்கட்சியின் வாக்கு வங்கி 7.9%ஆக இருந்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிகவின் வாக்கு வங்கி 0.84 % ஆக குறைந்து போனது.

அதேபோல் 2014இல் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் பாஜகவுக்கு வாய்ப்பு அளித்து பார்க்கலாம் என்ற மனநிலை இருந்தது. ஆனால் இந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு அலை வலுவாக வீசுது. அதனால தனித்து நின்றால் கரை ஏறுவது கடினம். கூட்டணி வைத்தாலும் தோல்வி அடைவோம் என்றால்.. கூட்டணி வைக்காமல் குறைந்தது துணிச்சலாக போட்டியிட்டு கட்சியையாவது வளர்க்கலாமே என்று திட்டத்தில் பாஜக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விரைவில் டெல்லி பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அவரின் இந்த பயணத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுது. சமீப காலமாக அதிமுக – பாஜக இடையே குடுமிப்பிடி சண்டை நிலவி வருது. முக்கியமாக பாஜகவினர் அதிமுகவினரை விமர்சனம் செய்வது தீவிரம் அடைந்து வருது.தடைகள் பல தாண்டி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.எஎன்ன தான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைச்சாலும் பாஜகவை மீறி எடப்பாடியால் செயல்படவே முடியாது.பாஜகவை அனுசரிச்சுத் தான் போகணும் அதனாலத்தான் அமித்ஷாவைச்சந்திக்க டெல்லி போறாரு.

அமித் ஷாவை சந்திக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டு இருக்கிறாராம். அவர் இப்படி நேரம் கேட்க 3 காரணங்கள் இருக்குதாம். முதல் காரணம் – டெல்லி பாஜகவுடன் எங்களுக்கு நல்ல உறவு இருக்குது. அந்த உறவு தொடரும். வெறுமனே தமிழ்நாடு பாஜகவுடன்தான் மோதல் இருக்குது.. தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் எங்களை பெரிய கட்சியாக உரிய மரியாதையோடு நடத்தணும்னு பேசப் போறாராம். தமிழ்நாடு பாஜகவை கட்டுப்படுத்தணும்ன்னு டெல்லியிடம் எடப்பாடி எடுத்துசொல்ல போறாராம். இரண்டாவது காரணம் காங்கிரஸ் கட்சியோட அதிமுக எந்த சூழ்நிலையிலும்கூட்டணி வைக்காது. காங்கிரஸ் – திமுக மிகவும் நெருக்கமாக சேர்ந்துள்ளது. இந்த கூட்டணி உடைய வாய்ப்பே இல்லை. அப்படி இருக்கும் போது பாஜகவை விடக் கூடாது, மாநிலத்தில் ஆட்சியில் இல்லை, அதனால் தேசிய கட்சியின் சப்போர்ட் தேவைங்கிற நிலைப்பாட்டை எடப்பாடி எடுத்துள்ளதாகவும் கூறப்படுது. மூணாவது காரணம் – அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பா தேர்தல் ஆணையம் இன்னும் முடிவு எடுக்கலை.தேர்தல் ஆணையத்தில் இப்போது வரை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றுதான் இருக்குது. இப்போது தீர்ப்பு ஈபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்திருந்தாலும், தொடர்ந்து கோர்ட்டில் வழக்குகள் தொடருது. இன்னும் பிரதான வழக்கு நிலுவையில் தான் இருக்குது. தொடர்ந்து ஓபிஎஸ் வழக்கை நடத்துவார். எனவே, சின்னம் மேட்டரில் எடப்பாடி பழனிசாமியால் ஜெயிக்கவே முடியாது. இதுல சாதகமான முடிவு வர்றதுக்கு எடப்பாடி அமித்ஷாவிடம் ஆலோசனை கேட்பாருன்னும் சொல்லப்படுது.

பாஜக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும் அமைந்தால் அதன் மூலம் பயன்பெறுவது திமுக தான். நாற்பதுக்கு நாற்பதையும் அள்ளிச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே ஒரே கூட்டணியில் போட்டியிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சொல்ல வாய்ப்புள்ளது என்கின்றனர்.ஆனால் கூட்டணியில் அமமுகவை இணைக்கணும், கட்சிக்குள் சசிகலா, ஓபிஎஸ்ஸை இணைக்கணும்ம்ன்னு டெல்லி தலைவர்கள் சொன்னால் அதற்கு ‘நோ’ சொல்வதிலும் உறுதியாக இருக்கிறாராம். மக்களவைத் தேர்தலின் வெற்றி அதிமுகவை விட பாஜகவுக்கு தான் அதிகம் தேவை. அதனால் அவர்கள் எடப்பாடி பழனிசாமியை பகைக்க மாட்டார்கள் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கலாம்னு அண்ணாமலை இங்க பேசிகிட்டிருக்கிற நிலைமைல டெல்லியில அமித்ஷா என்ன சொல்லியிருக்கிறாருன்னா…தமிழ்நாட்டில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவும். நாங்கள் வலிமை இன்றி இருக்கும் இடங்களில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார்.தேர்தல் நெருங்கும் நேரத்தில் தெரியும் அண்ணாமலை சொன்ன மாதிரி பாஜக தலைமையில் தனிக் கூட்டணியா ? இல்ல அமித்ஷா சொன்ன மாதிரி அதிமுகவுடன் கூட்டணியான்னு தெரிய வரும்.அதுவரைப் பொறுத்திருப்போம்.