மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி ? தேர்தல் நடக்குமா ?

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி ? தேர்தல் நடக்குமா ? மேற்கு வங்க தேர்தல் முடியட்டும்.. அடுத்து டெல்லி சர்க்கார்தான்.. மோடி இடத்துக்கு குறி வைக்கும் மம்தா…மோடியா லேடியா ?

மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெற்று திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியமைத்த பிறகு எங்களுடைய அடுத்த குறி,..மத்தியில் ஆட்சி அமைப்பதுதான் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  … கொல்கத்தாவில் நடந்த பிரசார கூட்டத்தில் ம பேசுகையில் , மேற்கு வங்கத்தை அம்பான் புயல் தாக்கிய பிறகு நிவாரணப் பணிகளுக்காக கோடிக்கணக்கில் எனது அரசு செலவிட்டது புயல் பாதிப்பு ஏற்பட்டபோது நாங்கள் மக்களுடனேயே இருந்தோம் .  அவர்களுக்காகப் பணியாற்றினோம் . அப்போது பாஜக தலைவர்கள் எங்கே சென்றார்கள் ? மக்கள் பிரச்னைக்காக அவர்கள் எப்போதும் முன் நின்றதேயில்லை.அப்படீன்னு மம்தா பானர்ஜி பேசியிருக்காங்க..இப்போது தேர்தல் வருகிறது என்றவுடன் ஹெலிகாப்டர்களில் பண மூட்டைகளுடன் வருகிறார்கள் மக்களைக் கவர்ந்து ஓட்டுக்களை திருடிச் செல்ல முயற்சிக்கிறார்கள் . அவர்கள் என்ன செய்தாலும் மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெற்று திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் . அதன் பிறகு எங்களுடைய அடுத்த குறி மத்தியில் ஆட்சி அமைப்பதுதான் என்று மம்தா பானர்ஜி பேசினார்.

.அகில இந்திய அளவுல பிரதமர் மோடியை துணிச்சலா எதிர்க்கிற முதுகெலும்புள்ள ஒரே அரசியல்வாதி மம்தா பானர்ஜி தான்.