அரசு ஊழியர்களின் ஓட்டுக்கு வேட்டு வைத்த பி டி ஆர் ? தர்ம சங்கடத்தில் ஸ்டாலின் ?

அரசு ஊழியர்களின் ஓட்டுக்கு வேட்டு வைத்த பி டி ஆர் ? தர்ம சங்கடத்தில் ஸ்டாலின் ?
அரசு ஊழியர்களின் ஆதரவைப் பெற்ற கட்சி என்ற பெயர் தி.மு.கவுக்கு இருந்து வரும் நிலையில், அக்கட்சியும் தற்போது அரசு ஊழியர்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருது. தேர்தலுக்கு முன்னால பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும்ன்னு தி.மு.க உறுதியளித்த நிலையில, இப்போ பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட வாய்ப்பில்லைன்னு சொல்லியிருப்பது அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் பொதுவா தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தி.மு.கவுக்கு ஆதரவாக இருப்பார்கள்ன்னு சொல்லப்படுவதுண்டு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2003ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களை ஒரே நேரத்தில் வீட்டுக்கு அனுப்பியது உள்ளிட்ட காரணங்களால் அக்கட்சியின் மீது அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருந்தார்கள். இதனாலேயே 2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்கள் தி.மு.கவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இத்தனைக்கும் அப்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்தது அ.தி.மு.கதான். தி.மு.க ஆட்சியில், அரசு ஊழியர்களுக்கு அடிக்கடி சம்பள உயர்வும், சலுகைகளும் கிடைக்கும்ங்கிற கருத்து இருக்குது. கருணாநிதி முதல்வராக இருந்த காலம் முதல் அரசு ஊழியர்களுக்காக பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து செயல்படுத்தியது தி.மு.க. ஒவ்வொரு தேர்தலிலும் அரசு ஊழியர்கள் வாக்களிக்கும் தபால் வாக்கு எண்ணிக்கையின்போது தி.மு.கவே பெரும்பாலும் முன்னிலை வகிப்பது இதனால்தான். பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்ன்னு 2011 மற்றும் 2016 தேர்தல் சமயம் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கலை. அடுத்து வந்த எடப்பாடி பழனிசாமியும் கண்டு கொள்ளலைங்கிறது பொதுவான புகாராக இருக்குது. இதனால், கடந்த தேர்தலிலும் அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் தி.மு.கவுக்கே ஆதரவளித்தனர். அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் வாக்குகளும் திமுகவுக்குத்தான் ச
கெடைச்சது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தைக் கொண்டு வர வேணும்ங்கிறது அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருது. தேர்தலுக்கு முன்பு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும்னு தி.மு.க உறுதியளித்த நிலையில், ஆட்சிக்கு வந்தபிறகு தி.மு.கவும் இந்த விஷயத்தில் அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளது. சமீபத்தில் கூட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்திய மாநாட்டில் கலந்துக் கொண்டு பேசும்போதும், நிதிநிலை சீரமைக்கப்பட்ட பிறகு அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும்னு முதல்வர் ஸ்டாலின் உறுதி அளிச்சாரு. ஆனால், கடந்த 7ஆம் தேதி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லைன்னு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையிலேயே அறிவிச்சிட்டாரு. இதனால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைஞ்சிருக்காங்க.

திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டுகள் ஆன நிலையிலும் கூட நிதி ஆதாரத்தை திரட்டுவதற்கான நடவடிக்கைகளில் அரசு எடுத்துள்ள முயற்சிகளில் பலன்கள் இன்னும் கை மேல் பலனாக வந்து சேரவில்லை.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரிய தொழில் நிறுவனங்கள் மீதும் வரிச்சலுகை கொடுக்கும் அரசு, பன்னாட்டு நிறுவனங்கள், உயர் தொழில் அதிபர்கள் ஆகியோரிடம் இருந்து வணிக வரி உள்ளிட்டவற்றை வசூலிப்பதில் எந்த அரசுகள் வந்தாலும் தயங்குவதாக விமர்சிக்கப்படுகிறது.

பழைய பென்சன் திட்டத்தை அமலாக்குவதால் கூடுதல் நிதிச் செலவு ஏற்படும் என்றாலும் அரசின் திட்டங்களை அமல்படுத்தும் பணியில் பல்லாண்டு காலம் உழைத்த தனது ஊழியர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை மக்களுக்கான அரசு சுமை என கருதக் கூடாது, அதை தன் கடமையாக உணர்ந்து நிறைவேற்ற வேண்டும் 

நிதி ஆதாரத்தைக் காரணம் காட்டித் தான் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தினார்கள். 6 லட்சம் காலி பணியிடங்கள் இன்னும் தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ளது. இதற்கான காரணங்களை வினவினால் முந்தைய அதிமுக அரசு மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதில், சில உண்மைகள் இருந்தாலும் கூட தமிழ்நாட்டின் நிதி ஆதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசுகள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பழைய ஓய்வூதியத்தில் ஒரு வருடத்தில் ஒருவருக்கு 2 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. புதிய திட்டத்தில் 50 ஆயிரம் தான் செலவாகுவதாக கூறுகிறார்கள். ஓய்வூதியத்தை தமிழ்நாடு அரசு வெறும் செலவுக்கணக்காக மட்டுமே பார்க்கிறதா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. அது, அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமை ஜிஎஸ்டி, நீட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு எடுக்கிற நிலைபாடுகளிலிருந்து வேறுபடுகிற நிலையை தமிழ்நாடு அரசு சரியாகவே எடுத்திருக்கிறது. ஆனால் இந்தப் பிரச்னையில் மட்டும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய விஷயங்களைக் காரணம் காட்டுவது பொருத்தமல்ல என்ற பாலகிருஷ்ணன் வாதத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 1873ல் இங்கிலாந்தில் போடப்பட்ட சட்டம் இதைத் தான் உறுதி செய்கிறது.

நிதி ஆதாரமாக மாறும் ஓய்வூதியம்:
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தைக் கொடுத்தால் அதை அவர்கள் செலவு செய்யத்தான் போகிறார்கள். அதன் மூலம், சந்தை உருவாகும். சேர்த்து வைத்தால் நிதி ஆதாரமாக இருக்கும். மொத்தத்தில், தமிழ்நாட்டின் நிதி ஆதாரத்திற்கு பழைய ஓய்வூதிய நடைமுறை உதவிகரமாகத்தான் இருக்கும் என்ற நிலை உள்ளது. இருந்தாலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தாததற்கு தற்போது மறைமுகமாக இருக்கும் காரணம் WTO-வில் இணைந்ததும். பன்னாட்டு நிதியத்திடம் கடன் வாங்கியதால் போடப்பட்ட நிபந்தனைகளையே பார்க்க வேண்டியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் அரசுகளுக்கு கடிவாளம் போடக்கூடியதாக இருக்க கூடாது. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அரசு ஊழியர்களின் பங்கைக் கருதி அவர்களுக்காக பழைய ஓய்வூதியத்தை கொடுக்க அரசு தயங்கக்கூடாது.

  கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய போதெல்லாம் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக இருந்து வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தபிறகு வஞ்சிக்கிறதுன்னு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் படிப்படியாக போராட்டத்தை முன்னெடுக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் திடமிட்டுள்ளனர். சென்னை ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.