டெல்லி மத்திய விசாரணை அமைப்புகள் திமுகவை சேர்ந்த 4 முக்கிய தலைகளை குறி வைத்துள்ளது. மத்திய விசாரணை அமைப்புகளின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் திமுக இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக மத்திய அரசின் விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும், வலிமையான எதிர்க்கட்சிகள் இருக்கும் பகுதிகளிலும் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றன. பல்வேறு அமைச்சர்கள், மாநில துணை முதல்வர்கள் கூட மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் கைது செய்யப்பட்டு உள்ளனர். வட மாநிலங்களில் இந்த விசாரணைகள் அதிகம் நடந்து வந்த நிலையில் தற்போது தென் மாநிலங்கள் பக்கம் விசாரணை அமைப்புகள் திரும்பி உள்ளன. செந்தில் பாலாஜிக்கு எல்லாம் பக்கமும் எதிர்ப்பு இருக்கு அந்த வகையில் தமிழ்நாடு பக்கமும் தற்போது மத்திய விசாரணை அமைப்புகள் திரும்பி உள்ளன. அதன்படி திமுகவை சேர்ந்த 4 டாப் புள்ளிகள் மத்திய விசாரணை அமைப்புகளால் குறி வைக்கப்பட்டு உள்ளனர். திமுக எம்பி, துணை பொதுச்செயலாளர் ஆ ராசாவின் பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை சமீபத்தில் முடக்கி உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கோவையில் ராசாவின் பினாமிக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை முடக்குவதாக குறிப்பிட்டுள்ளனர். இதன் மதிப்பு 55 கோடி ரூபாய் ஆகும். 2004 – 2007 காலகட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தபோது ஆ ராசா இருந்த போது இந்த முறைகேட்டை செய்ததாக கூறப்படுகிறது. அதாவது ஹரியானவை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்றிற்கு ரியல் எஸ்டேட் அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் வாங்கியதில் இந்த நிலம் வாங்கப்பட்டதும் புகார் வைத்துள்ளது. தனது நண்பர்கள், உறவினர்கள் நிறுவனங்கள் மூலம் பினாமி நிறுவனங்களை உருவாக்கி இந்த நிலத்தை ஆ. ராசா வாங்கியதாக இந்த அறிக்கையில் கூறப்படுகிறது. இதனால் அந்த நிலங்களை முடக்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அமலாக்கத்துறை தமிழ்நாடு பக்கம் தலையை திருப்பி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே போக்குவரத்து துறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக காலத்தில் அமைச்சராக இருந்த போது முறைகேடு செய்ததாக புகார்கள் வைக்கப்பட்டன. இது தொடர்பான அமலாக்கத்துறை வழக்கு விசாரணையும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் திமுக எம்பி கனிமொழி மற்றும் ஆ.ராசாவிற்கு எதிராக சிபிஐ அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிபிஐ அமைப்பின் இரண்டு பெரிய வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதில் வருமானத்துக்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவிற்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அப்பட்டமான சட்ட விதிமீறல் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ வாதத்தை முன்வைத்துள்ளது. மேலும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அப்பட்டமான சட்ட விதிமீறல் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ வாதத்தை முன்வைத்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த தொடர் வழக்குகள் நடவடிக்கைகள் காரணமாக மத்திய அரசின் விசாரணை ஆணையங்கள் தமிழ்நாடு பக்கம் தனது கவனத்தை திருப்பி உள்ளதோ என்று எண்ண தோன்றுகிறது,. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. பல்வேறு டெண்டர் முறைகேடுகளை செய்ததாக செந்தில் பாலாஜி மீது பாஜக, அதிமுக சார்பாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலின்: இந்த நிலையில் தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் டெல்லி விசாரணையை வளையத்திற்குள் வந்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சம் தொகையை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. சென்னை தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உட்பட லைகா நிறுவனத்துக்குச் சொந்தமான எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை கடந்த 16ம் தேதி திடீரென சோதனை நடத்தியது. இவர்கள் செய்த முதலீடுகள் தொடர்பாக தற்போது உதயநிதி அறக்கட்டளையின் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.