கொங்கு மண்டலம் யாருக்கு ? மல்லுக்கட்டும் கனிமொழியும் உதயநிதி ஸ்டாலினும் … !

கொங்கு மண்டலம் யாருக்கு ? மல்லுக்கட்டும் கனிமொழியும் உதயநிதி ஸ்டாலினும் … !

திமுகவின் செல்வாக்கை உயர்த்திப் பிடிக்க கொங்கு மண்டலத்தில் சிறப்பு கவனம் செலுத்த மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ள நிலையில் கனிமொழிக்கு கிடைத்த வாய்ப்பு கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது .

முக்கியமாக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்த சில தொகுதிகளில் தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்தும் ஆய்வு நடத்த உள்ளனர். கட்சியில் சரியாக வேலை செய்யாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டங்களும் இருக்குது.. அதிலும் ஊராட்சி மன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மனதில் வைத்து அதற்கு ஏற்றபடி சில முக்கியமான முடிவுகளை எடுக்கும் திட்டத்தில் திமுக இருக்கிறதாம்.தென்மாவட்டங்களில் திமுக இந்த தேர்தலில் வெல்ல கனிமொழியின் பங்கு மிக முக்கியம். அதேபோல் கரூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் செந்தில்பாலாஜி மூலம் திமுக எளிதாக வெல்ல முடிந்தது. நல்ல நிர்வாகி இருந்தால் எந்த மண்டலத்திலும் வெல்ல முடியும் என்பதை செந்தில்பாலாஜி, கனிமொழி நிரூபித்தனர்.. இதைத்தான் திமுக இந்த தேர்தல் மூலம் உணர்ந்து கொண்டு விட்டது.

ஆனால் என்ன தான் திமுக ஜெயிச்சு ஆட்சியமைச்சாலும் வழக்கம் போல கொங்கு மண்டலம் நம்மள கைவிட்டுடுச்சேன்னுரொம்ப கவலைல இருக்காரு முதல்வர் ஸ்டாலின்.கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகள்ல 9 தொகுதிகள்ல அதிமுகவும் ஒரு தொகுதியில பிஜேபியும் ஜெயிச்சிருக்கு. கொங்கு மண்டலத்தில திமுகவின் தொடர் தோல்விகளுக்கு என்ன காரணம் ? 1996 சட்டமன்றத் தேர்தலில், கோவையை முழுவதுமாகக் கைப்பற்றிய தி.மு.க-வால் அதன் பிறகு நடந்த ஐந்து தேர்தல்களில் பாதித் தொகுதிகளைக்கூட கைப்பற்ற முடியலை. 

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக ஆட்சியும் அமைச்சாச்சு.. தமிழகத்தில் பெரும்பாலும் தி.மு.க வெற்றி பெற்றிருந்தாலும், கொங்கு மண்டலத்தை மட்டும் மீண்டும் கைப்பற்றி அ.தி.மு.க வலுவான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அ.தி.மு.க இங்கு வலிமையுடன் இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்திருக்குது.

முக்கியமா கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி ஜெயிச்சிருக்கு. கோவையை முழுவதுமாக இழப்பது இது தி.மு.க-வுக்கு முதல்முறை இல்லை. கடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல்களாகவே தி.மு.க கோவை மாவட்டத்தை இழந்துதான் வருது.

1996 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தி.மு.க பிரமாண்ட வெற்றிபெற்றது. அப்போ, கோவை மாவட்டம் முழுவதையும் கைப்பற்றுச்சு . ஆனா, அதற்குப் பிறகு நடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் அதில் ஒரு தொகுதியைக் கூட தி.மு.க தக்க வைச்சுக்க முடியலை. 2001-ல் கோவை மாவட்டத்திலுள்ள அத்தனைத் தொகுதியையும் அப்படியே அடிச்சி தூக்குச்சி அ.தி.மு.க.

2006 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைத்தாலும், கோவை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளை மட்டுமே தி.மு.கவால கைப்பற்ற முடிஞ்சது.கோவை கிழக்கில் பொங்கலூர் பழனிச்சாமியும், பொங்கலூர் தொகுதியில் மணியும் வெற்றி பெற்றாங்க. பொங்கலூர் பழனிச்சாமி ஊரகத் தொழில்துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சராக ஆக்கப்பட்டாரு.ஆனாலும் அவரால திமுகவை வளர்க்க முடியல.

ஆனா 2011 சட்டமன்றத் தேர்தலில் கோவையை மீண்டும் மொத்தமா அள்ளுச்சி அ.தி.மு.க. அடுத்து நடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியை மட்டும் தி.மு.க கைப்பற்றுச்சி. சிங்காநல்லூர் தொகுதியில திமுக வேட்பாளர் கார்த்திக் மட்டுமே வெற்றி பெற்றாரு.

2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கோவை மாவட்டத்தை மீண்டும் மொத்தமாக வாரிச் சுருட்டி விட்டது.  ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில்ல கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம் முழுவதும் தி.மு.க மொத்தமா ஜெயிச்சது. அ.தி.மு.க அமைச்சர்களின் தொகுதிகளிலேயே தி.மு.க-தான் முன்னிலை வகித்தது. நாட்டிலேயே பி.ஜே.பி-யை வீழ்த்திய ஒரே கம்யூனிஸ்ட் என்ற பெருமையுடன் கோவை எம்.பி-யாக இருக்கிறார் பி.ஆர்.நடராஜன்.

கோவையில் இருபது வருஷமா மாவட்டச் செயலாளர், அமைச்சர் என பவர்ஃபுல்லாக இருந்த பொங்கலூர் பழனிசாமி செய்த சாதிய அரசியலை தி.மு.க-வினரே விரும்பலைன்னு கோவை உடன்பிறப்புகள் சொல்றாங்க. அவரது சாதிய பாசம் அ.தி.மு.க வரை நீண்டுச்சாம். அந்தப் பாசத்தில் வளர்க்கப்பட்டவர்தான் இப்போதைய அ,தி.மு.க-வின் முக்கிய அடையாளமாக இருக்கும் எஸ்.பி.வேலுமணி.இந்த வேலுமணியாலத்தான் திமுக ஜெயிக்க முடியலை. இதையெல்லாம் தெரிஞ்சதாலத்தான் மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்களால் பொங்கலூர் பழனிச்சாமி ஓரங்கட்டப்பட்டார்

திமுகவின் செல்வாக்கை உயர்த்திப்பிடிக்க கொங்கு மண்டலத்தில் சிறப்பு கவனம் செலுத்த மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ள நிலையில் கனிமொழிக்கு கிடைத்த வாய்ப்பு கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் திமுகவின் ஆசையை நிராசையாக்கியதில் கொங்கு மண்டலத்திற்கு முக்கிய பங்கு உண்டு . சொல்லப் போனா கொங்கு மண்டத்தில் வெற்றி பெற்றது அதிமுக என்றே கூட கூறலாம் . கோவை , சேலம் , நாமக்கல் , திருப்பூர் , ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக் கொடி நாட்டினர் இதனால் கொங்கு மண்டத்தில் திமுகவிற்கு படு தோல்வியே கிடைத்தது . சென்னை வட மாவட்டங்கள் , காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் திமுக வெற்றியை குவித்தாலும் கொங்கு மண்டல் காலை வாரியது .
கடந்த 2006 ம் ஆண்டு முதலே திமுகவிற்கு கொங்கு மண்டலம் தலைவலியாத் தான் இருக்குது இதுக்கு காரணம் அங்கு திமுகவிற்கு செல்வாக்கு மிக்க மாவட்ட நிர்வாகிகள் இல்லை என்பது தான் என்கிறார்கள் . பொங்கலூர் பழனிச்சாமிக்கு பிறகு கொங்கு மண்டலத்தில் இருந்து திமுக நிர்வாகிகள் யாரும் பெரிய அளவில் அங்கு களப்பணியாற்றவில்லை என்று சொல்கிறார்கள். மேலும் திமுக கொள்கைகளை இயற்கையாக கொங்கு மண்டலம் ஏற்க மறுப்பது தான் அங்கே அந்த கட்சி வெற்றி பெற முடியாதற்கு காரணம் என்றும் சொல்கிறார்கள் மேலும் திமுக என்றாலே தொழில் நிறுவனங்களுக்கு ஆபத்து , கட்டப்பஞ்சாயத்து , காதல் கலப்புத் திருமணங்களுக்கு ஆதரவு போன்ற ஒரு மனநிலை கொங்கு மண்டல மக்கள் மத்தியில் நிலவுவதும் அந்த கட்சிக்கு பாதகமான விளைவுகளை தேர்தலில் ஏற்படுத்துகிறது .
இதனை எல்லாம் கருத்தில் கொண்டு கொங்கு மண்டலத்தில் திமுகவை சீர்படுத்தி அங்கு கட்சிக்கு என்று செல்வாக்கை உருவாக்க கடந்த இரண்டு வருடங்களாகவே மு.க.ஸ்டாலின் முயன்று வருகிறார் . ஆனால் கொங்கு மண்டலத்தில் களப்பணியாளர்களுக்கு திமுகவில் பற்றாக்குறையாத்தான் இருக்குது . இதனால் கொங்கு மண்டலத்தில் கட்சியை தூக்கி நிறுத்த முதலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்க ஸ்டாலின் திட்டமிட்டதாக சொல்கிறார்கள் . மேலும் கொங்கு மண்டலத்திற்கு என்று தனியாக ஒரு பொறுப்பாளரை நியமிக்கவும் அவர் முடிவெடுத்ததாக சொல்கிறார்கள் .அந்தவகையில் திமுகவின் மகளிர் அணிச் செயலாளராக இருக்கும் கனிமொழியை மண்டலதிமுக பொறுப்பாளராக அறிவிக்க ஸ்டாலின் முடிவெடுத்து கட்சியின் மூத்த நிர்வாகிகளும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாக சொல்கிறார்கள் ஆனால் அறிவிப்பு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அது நிறுத்தப்பட்டதாக கூறுகிறார்கள் – பின்னணியில் உதயநிதி ஸ்டாலினின் எதிர்ப்பு இருந்ததாக சொல்கிறார்கள் . அதாவது கொங்கு மண்டலத்தை சரி செய்ய உதயநிதி ஸ்டாலின் விரும்புவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள் . அத்தோடு கடந்த சில நாட்களாகவே உதயநிதி கொங்கு மண்டலத்தில் முகாமிட்டு கட்சியை சரி செய்யும் பணியில் இறங்கியுள்ளதாக கூறுகிறார்கள்.
மேலும் கொங்கு மண்டலத்தில் தற்போதுள்ள நிர்வாகிகள் பலரும் உதயநிதி ஆதரவாளர்கள் என்றும் சொல்கிறார்கள் . எனவே கொங்கு மண்டலத்தை சரி செய்யும் படலத்தில் தன ஆதரவாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருப்பதாக கூறுகிறார்கள் . எனவே தான் கடைசி நேரத்தில் எதிர்ப்பு தெரிவித்து கொங்கு மண்டல பொறுப்பாளராக கனிமொழி அறிவிக்கப்படுவதை உதயநிதி தரப்பு கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தியதாக பேச்சு அடிபடுகிறது . அதே சமயம் மு.க.ஸ்டாலினை பொறுத்த வரை கொங்கு மண்டலத்திற்கு கனிமொழி தான் சரியான நபர் என்கிற முடிவிற்கு வந்ததால்தான் அவரை கொங்கு மண்டல பொறுப்பாளராக அறிவித்தார். ஆனா இப்போ கனிமொழிக்கு எதிரா உதயநிதி ஸ்டாலின் மல்லுக்கட்டிகிட்டு இருக்காரு. அதனால கனத்த இதயத்தோட உதயநிதி ஸ்டாலினை கொங்கு மண்டல பொறுப்பாளரா ஸ்டாலின் அறிவிப்பாராங்கிற எதிர் பார்ப்பு எகிறியிருக்குது.அப்படியே அறிவிச்சாலும் கனிமொழி பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்திருவாருன்னு தான் சொல்றாங்க.

.