பல நூறு கோடி ரூபாய் நில மோசடிகளுக்கு ‘தானசெட்டில்மென்ட்’ ட்டை கேடயமாக பயன்படுத்திய மாஜி கே.சி.வீரமணி

கோடிக்கணக்கான நில மோசடிகளுக்கு ‘தானசெட்டில்மென்ட்’ ட்டை கேடயமாக பயன்படுத்திய மாஜி அமைச்சர். கே.சி.வீரமணி.இதுதான் ஆதாரத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையில் மாட்டறதுக்கு காரணம்.?

பினாமி பெயர்ல வாங்குன நிலங்களுக்கு செட்டில்மென்ட் பத்திர முறையை கேடயமாக பயன்படுத்தியிருக்காரு அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணின்னு திடுக்கிடும் குற்றச்சாட்டுகள வைக்கின்றாங்க அறப்போர் இயக்கத்தினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கே.சி.வீரமணி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டால் பரபரப்பு ஏற்பட்டது எல்லாருக்கும் தெரியும்.அதிமுக ஆட்சிக் காலத்தில் பெரும் சர்ச்சைகளுக்கும் நில மோசடிப் புகார்களுக்கும் உள்ளானவர் கே.சி.வீரமணி.

இப்போ வருமானத்துக்கு அதிகமாக 654% சொத்து குவிச்சதா லஞ்ச ஒழிப்புத் துறையினர் கே.சி.வீரமணி மேல வழக்குப் பதிவு செஞ்சிருக்காங்க.. இதனடிப்படையில் தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துனாங்க.  தானசெட்டில்மென்ட் மூலம் மோசடி பண்ணியிருக்காரு. கே.சி.வீரமணி, அவரு பத்திரவுப் பதிவுத்துறை அமைச்சராக இருந்தவர். அதனால் பத்திரப் பதிவு துறையில் எத்தனை ஓட்டைகள் இருக்கிறதோ அத்தனை ஓட்டைகளையும் தமக்கு சாதகமாக்கிக் கிட்டாருன்னு அவர் மேல குற்றம்சாட்டு வைச்சிருக்கிற அறப்போர் இயக்கத்தினர். உதாரணமாக, மாமனார் பெயரில் 100 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார் கே.சி.வீரமணி. அதனை மறுநாளே தமக்கு தானசெட்டில்மென்ட் கொடுத்ததாக மாற்றியும் இருக்கிறார். அம்மா பெயரில் முதல் நாள் ஒரு நிலம் வாங்குகிறார். மறுநாள் தான செட்டில்மென்ட் முறையில் தமக்கு மாற்றி இருக்கிறார். வழிகாட்டி மதிப்பில் மோசடி பண்ணியிருக்காரு.
ஹில்ஸ் ஏலகிரிங்கிற பெயரில் ஏகப்பட்ட நிலம் வாங்கப்பட்டிருக்குது. இதில பெரும்பாலான சொத்துக்களை ரத்த சொந்தங்களின் பெயரால் வாங்கப்பட்டிருக்குது. பின்னாடி அவருக்கே தானசெட்டில்மென்ட்டாக மாத்திக்கிட்டாராம் வீரமணி. இப்படி தானசெட்டில்மென்ட் முறையை சாதகமாக்கி மோசடி செய்தல், வழிகாட்டி மதிப்பைவிட குறைவான தொகைக்கு நிலத்தை பதிவு செய்தல் என தமது மெகா மோசடிகளை அரங்கேற்றி இருக்கிறாராம் கே.சி.வீரமணி. 10 ஆண்டுகளில் ரூ76.65 கோடி சொத்து 2011-ம் ஆண்டு கே.சி.வீரமணி குடும்பத்தின் சொத்து மதிப்பு வெறும் ரூ7.48 கோடி; இது கடந்த 10 ஆண்டுகளில் ரூ76.65 கோடியாக விஸ்வரூபமெடுத்திருக்குது. இதெல்லாம் வெளியே தெரிந்த சொத்துகள்.. இன்னமும் எத்தனை எத்தனை பினாமிகள் பெயரில் எத்தனை நூறு கோடி ரூபாய் சொத்துகளை வாங்கிக் குவிச்சிருக்காரோ கே.சி.வீரமணின்னு சொல்றாங்க லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள். ஹோம் டிசைனர் அண்ட் ஃபேப்ரிகேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.15 கோடிக்கு அசையா சொத்து வாங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம்தான் ஓசூர் சிப்காட்டில் ஆகப் பெரும் மோசடி செய்து 99 ஆண்டு குத்தகைக்கு அரசு நிலத்தை வாங்கியிருக்கிறது.அதாவது வருஷத்துக்கு 1 ரூ லீஸ் தொகை.99 வருஷம் லீஸ் வெறும் 99 ரூபாய்க்கு. நமக்கு இந்த மாதிரி சிப்காட்ல இடம் கிடைக்குமா ? வி.பி.ஆர்.ஹில் ப்ராப்பர்ட்டீஸ் பெயரில் ரூ.7 கோடி; ஹோட்டல் ஹில்ஸ் திருப்பத்தூர் நிறுவனம் பெயரில் ரூ.6 கோடி; அகல்யா, பத்மாசினி பெயரில் ரூ.3.2 கோடி வாங்கப்பட்டிருக்குங்கிற பட்டியலும் நீளுதாம்..முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் பெயரில் உள்ள அசையும் சொத்து மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் 43 கோடி ரூபாய் அதிகமாகியிருக்குது. அவர் பெயரிலும் குடும்பத்தார் பெயரிலும் பல அசையா சொத்துக்கள் வாங்கப்பட்டிருக்கு. பெங்களூர், சென்னை, திருப்பத்தூர்ன்னு பல இடங்களில் கடந்த 10 ஆண்டுகளில் அசையா சொத்துக்களை வாங்கியிருக்காருன்னு மனுவில் குறிப்பிட்டிருக்காங்க அறப்போர் இயக்கத்தினர். ஒசூர் சிப்காட்டில் 0.1 ஏக்கர் நிலம் வருடத்துக்கு வெறும் 1 ரூபாய் குத்தகை என்ற அடிப்படையில் வீரமணி நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது வெறும் 100 ரூபாய்க்கு 0.1 ஏக்கர் நிலம் வீரமணியின் நிறுவனமான ஹோம் டிசைனர்ஸ் அண்ட் ஃபேப்ரிகேட்டர் கம்பெனிக்கு 2017 ஆம் ஆண்டு சிப்காட்டால் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் 15 கோடி ரூபாய் செலவில் `ஹோட்டல் ஹோசூர் ஹில்ஸ்’ கட்டப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் அவர் 64 சதவீத பங்குதாரராகவும் உள்ளார். இவரது மாமனார் பெயரில் 100 ஏக்கர் நிலத்தின் மதிப்பை 80 லட்சம் என கணக்கு காட்டியுள்ளார். இதன் மதிப்பு 2 கோடியாகும். ஆனால் இதே நிலத்தின் ஆவணத்தை வங்கியில் வைத்து ரூ 15 கோடி கடன் வாங்கியுள்ளார். எப்படி இது சாத்தியம் ? அது போல் தனது தாய் மணியம்மாள், சகோதரி சுதா சுசீலா ஆகியோர பெயரில் நிலங்களை வாங்கி அதை அதே நாளிலோ அல்லது ஒரு சில மாதங்களிலோ தன் பெயருக்கு முறைகேடாக தான் செட்டில்மென்ட் மூலமா பதிவு செஞ்சிருக்காருன்னு
அறப்போர் இயக்கம் புகார்ல தெரிவிச்சிருக்குது.

இன்னும் தோண்ட தோண்ட எத்தனை பூதங்கள் வெளிவரப் போகிறதோ?எப்படி கே.சி.வீரமணி சிக்கினார் என காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். “குடியாத்தம் அருகே மேல்பட்டி என்ற ஊரில் விவசாயக் கல்லூரியை வீரமணி கட்டுகிறாரு. அதற்காக அந்த இடத்தில் சிறிது சிறிதாக நிலங்கள் வாங்கப்பட்டிருக்கிறது. அந்த நிலங்கள் அனைத்தும் ஒரே மாதத்தில் அவரது மாமனார் பெயருக்கு மாறுகிறது. பின்னர் அவரது மாமனாரிடமிருந்து, வீரமணி, அவரது மனைவி மற்றும் சொந்த பந்தங்கள் இருக்கும் அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதைத் தான் லஞ்ச ஒழிப்புத்துறை ஸ்ட்ராங்காக பிடித்துக் கொண்டது. மொத்தமாக மாற்றினால் சிக்கல் வரும் என சிலர் கூறியபோதும் வீரமணி கேட்கவில்லையாம். இப்போது விழி பிதுங்கி நிற்கிறாருன்னு சொல்றாங்க.. சமீபத்தில் நடந்த சோதனையில் தோராய மதிப்பாக சுமார் 34 லட்சம் ரொக்க பணம், ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 623 சவரன் தங்க நகைகள், 7.6 கிலோ வெள்ளி பொருட்கள், 1.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்கன் டாலர் ஐந்து கணினிகள் ஹார்ட் டிஸ்க்குகள், 275 யூனிட் மணல், வங்கி கணக்கு புத்தகம் அப்புறம் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் குறிப்பிட்டிருக்காங்க..ஆனால் என்னோட வீட்டில் 300 சவரன் மதிப்பிலான தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்கன் டாலர் மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் அடங்கிய ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் மின்சார கட்டண ரசீது, மூக்கு கண்ணாடி ரசீது மற்றும் மணல் ரசீது என சொற்ப அளவிலேயே எடுத்துச் சென்றனர். ஆனால் அந்த தங்க நகைகள் கூட தேர்தல் பிரமாண பத்திரத்தில் அதைவிட அதிகமாக கொடுத்திருந்ததால் நகைகளை என்னிடமே திருப்பிக் கொடுத்து விட்டனர். வீட்டில் இருக்கும் மணலுக்கு கூட முறையாக இரசீது பெற்றுள்ளேன். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சோதனை நடத்தி உள்ளனர் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த பத்திரிக்கை குறிப்பு முற்றிலும் பொய்யானது. 40 ஆண்டுகள் பழமையான கார் என்னிடம் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் 40 ஆண்டுகள் பழமையானது. அதன் விலை ரூ 5 லட்சம் மட்டுமே. நான் 7ஆவது படிக்கும் போதே எனது தந்தை எனக்கு பென்ஸ் காரை வாங்கி தந்துள்ளார். நான் ஆடம்பரத்தை எப்போதும் விரும்பாதவன். அப்படியிருக்கும் நிலையில் கட்டி கட்டியாக தங்கம், வைரம் எனக்கு எதற்குவீடு கட்டுவதற்காக மணல் வாங்கி வைச்சிருந்தேன். அதற்கு அரசின் ரசீது இருக்குது’’ என கேசி வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இவர், இவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

 

Related posts:

திமுக புள்ளிகளுக்கு நெருக்கடி தர பாஜக திட்டம்..!
கவலைப்படாதீங்க".. தைரியப்படுத்திய முதல்வர் !. பிடிஆரின் அதிரடி முடிவு !
6 மாவட்டங்களில் அதிமுகவை வாஷ் அவுட் செய்த திமுக
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் யார்?.. அதிமுகவில் நடக்கும் குழப்பங்களுக்கு பின்னணியில் சசிகலா?
அதிமுகவின் ஆதரவுத் தளம் திமுகவினுடையதைவிட குறைந்திருப்பதாகத் தோன்றுகிறது !
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குருக்கள்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை வழங்கினார்..
"அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் !
டிடிவியை கழற்றி விட சசிகலா முடிவு?