டெல்லி சிக்னல் ! ஓபிஎஸ் குஷி !! எடப்பாடி அப்செட் ?

டெல்லி சிக்னல் ! ஓபிஎஸ் குஷி !! எடப்பாடி அப்செட் ?

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து நீடிச்சுக்கிட்டே இருக்கிறதால, அதிமுகவின் எதிர்காலம் என்னாகும்ங்கிறதே அதிமுக தொண்டர்களின் கேள்வியாக இருக்குது.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடங்கியதில் இருந்தே எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் மேல் சிக்கல் வந்துகிட்டே தான் இருக்குது. ஆனாலும் 4 வருஷம் ஆட்சியை சிரமமில்லாம நடத்துனதைப் போல, இப்போ அதனை ஓரளவு சமாளிச்சுக்கிட்டு வர்றாரு.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் நாடாளுமன்ற தேர்தல் வரை தொடரும்னு சொல்றாங்க அரசியல் நிபுணர்கள். உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது.இப்போ அதிமுகவின் பொதுக்குழு செல்லுமா செல்லாதாங்கிறதுதான் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு.

ஆனால் தேர்தல் ஆணையத் தரவுகளின் படி இன்னும் மூன்று ஆண்டுகள் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகத்தான் தொடருவார். இதன் காரணமாக அவர் ஒப்புதல் இல்லாம நடந்த பொதுக்குழு செல்லுமாங்கிறது கேள்விய இருக்குது. இப்போ அதிமுக வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் விரைவில் தீர்ப்பு வெளியாகும்னு எதிர்பார்க்கப்படுது.

இது தொடர்பாக இறுதி வாதத்தை முன்வைக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர்கள் தீவிரமாக களப்பணியாத்திகிட்டு வர்றாங்க. அந்த வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு தான் சாதகமாக வரும்னு இரண்டு தரப்புமே நம்பிக்கையோடு இருக்கிறாங்க. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஓபிஎஸ் தரப்பு சில முயற்சிகளை எடுத்துக்கிட்டு வருதாம்.

இந்தநிலையில், டெல்லியில் பிரதமர் மோடி,  உள்துறை அமைச்சர் அமித்ஷா , பாஜக தேசியத் தலைவர் நட்டா இவங்களையெல்லாம் சந்திச்சு ஆலோசனை நடத்த நேரம் கேட்டிருக்கிறாருங்கிற தகவல் வெளியாகி இருக்குது. ஜனவரி மாத கடைசியில் இந்த பயணம் இருக்கும்ணும், அப்போ பாஜக மேல்மட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை பெற உள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.ஓபி எஸ்ஸை ஆதரிக்கிற பாஜக எடப்பாடியை ஏன் கண்டுக்கவே மாட்டேங்குதுண்ணு பாஜக காரங்க கிட்ட கேட்டா கடந்த சட்டமன்றத் தேர்தல்ல இபிஎஸ் செஞ்ச உள்ளடி வேலையைப் பக்திச் சொல்றாங்க.

கடந்த சட்டமன்றத் தேர்தல்ல அண்ணாமலையை தோற்கடிச்சது பள்ளப்பட்டியா பழனிச்சாமியாங்கிற விவாதம் ஒண்ணு நடந்துச்சு .அது சம்பந்தமான உண்மையானத் தகவல்களை டெல்லியில் அதிரடி ரிப்போர்ட்டா கொடுத்ததாம் மத்திய உளவுத்துறை.

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக அரசும் அமைஞ்சாச்சி, தமிழகத்தில் பாஜகவுகு புதிசா நாலு MLA களை தமிழக மக்கள் கொடுத்துள்ள நிலையில், பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவுனாங்க..

இதில் முக்கியமானவர் மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவரான பாஜகவின் இளம் முகம் அண்ணாமலை, ஏராளமான இளைஞர்கள் ஆதரவுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை வெற்றி பெறுவாருன்னே டெல்லி தலைமை நம்பிக்கிட்டு இருந்துச்சாம், அந்த நம்பிக்கை இருந்த காரணத்தினால் தான்வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா அண்ணாமலையை ஆதரித்து பிரச்சாரம் செஞ்சாரு.

இந்தநிலையில் அண்ணாமலை வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தலைமைக்கு 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வியை தழுவியது ஏமாற்றத்தை கொடுத்துடுச்சி மேற்கு வங்க தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற வன்முறை சம்பவங்களை முடிவிற்கு கொண்டுவரவும், அசாம் மாநிலத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணியில் பாஜக தலைமை ஈடுபட்ட காரணத்தால் தமிழக தேர்தல் முடிவுகள் பத்தி பெருசா கவனத்தில் கவனத்தில் எடுத்துக்கலை.

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி மீது டெல்லியில் அடுக்கடுக்காக குற்றசாட்டை கொடுத்துள்ளது உளவு அமைப்பு, தமிழக பாஜகவை சேர்ந்த தலைவர்கள் சிலரே பாஜகவினர் என்பதை மறந்து, எடப்பாடி ஆதரவாளர் என்ற முடிவை நோக்கி சென்றுவிட்டதாகவும் இதற்கு முக்கிய காரணம் கொங்கு மண்டல ஆதரவு மற்றும் பணம் என அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலம் உட்பட பல பகுதிகளில் அதிமுக கூட்டணி படு தோல்வி அடைந்தது, ஆனால் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 100% வெற்றியை கொங்கு மண்டலத்தில் பதிவு செய்துள்ளது, இதற்கு எடப்பாடி பழனிசாமி வேலுமணி ஆகியோரின் சதித் திட்டமே காரணம்ணும் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றால் அது பாஜகவிற்கே பலன் அளிக்கும் மேலும் பாஜக கூட்டணிவலுவாகும்ங்கிற காரணத்தால் திட்டமிட்டு நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றலை எனவும் அதே நேரத்தில், இந்த முறை பாஜக, பாமக கூட்டணி கட்சிகள், தென் மண்டலங்களை தவிர்த்து அதிமுக எடப்பாடி அணி தீவிரமாக பணியாற்றியதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் அண்ணாமலை வெற்றி பெற்று சட்டமன்றத்து போனால் பாஜக மிக பெரிய வளர்ச்சி அடையுறதோட, அண்ணாமலை கொங்கு மண்டலத்தின் முகமாக மாறுவாருங்கிறதால் வெற்றி வாய்ப்பே இல்லாத தொகுதியை அதிமுக தலைமை ஒதுக்கியுள்ளது.. கிணத்து கடவு சட்டமன்ற தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டு இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருப்பாருண்ணும் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

இதை காட்டிலும் எடப்பாடி பழனிசாமி முக ஸ்டாலின் இடையே ஒப்பந்தம் ஒண்ணு இருந்ததாகவும், எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து வலுவான வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் வாபஸ் பெறப்பட்டு, சாதாரணமான வேட்பாளர் அறிவிக்கப்பட காரணம் உதயநிதிக்கு எதிராக டம்மி வேட்பாளரை நிறுத்த மேற்கொண்ட ஒப்பந்தம் தான் காரணம் எனவும் பாமகவிற்கு வாக்கு வங்கி உள்ள இடங்களை தவிர்த்து சேப்பாக்கத்தை ஒதுக்க காரணமே இருவரும் ஒருவருக்கு ஒருவர் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் எனவும் இந்த ஒப்பந்தத்தை முன்னின்று நடத்தியவர் துரை முருகன் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

துரை முருகன் 700 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக வெளியான அறிவிப்பும் அழுத்தம் காரணமா கொடுக்கப்பட்டது எனவும் உண்மையில் துரை முருகன் தோல்வியை தழுவினார் எனவும் குறிப்பிட்டுள்ளனர், இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் டெல்லி. தலைமை இருக்கிறதாம் மேலும் சொந்த கட்சி தோல்வியை தழுவ காரணமாக இருந்த நிர்வாகிகள் பட்டியலையும் தயார் செய்யவும் டெல்லி தலைமை தமிழக பாஜகவை சேர்ந்த மூன்று முக்கிய நபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

விரைவில் பாஜக அதிமுக உறவில் மாற்றம் உண்டாவதுடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க டெல்லி பாஜக தலைமை தயாராகிறது என்கின்றன டெல்லி வட்டாரங்கள், அண்ணாமலை தோல்வி அடைய அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள பள்ளப்பட்டி மட்டுமே காரணமல்ல வெற்றி வாய்ப்பற்ற தொகுதியை ஒதுக்கி அதில் உள்ளடி வேலையில் ஈடுபட்ட பழனிசாமியும் ஒரு காரணம் என்பது தெளிவாகியுள்ளது. இதனாலத்தான் எடப்பாடி பழனிச்சாமியை பாஜக கண்டுக்கிறதேயில்லை.அடுத்து பாஜக என்ன பண்ணப் போகுதுங்கிறதைப் பொறுத்திருந்துதான் பாக்கணும்.

Related posts:

*'யாத்திசை' பட இயக்குநரின் அடுத்தப் படத்தில் இணைந்துள்ளார் நடிகர் சசிகுமார்!* *அவரது பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அட்டகாசமான போஸ்டரை படக்குழு வெளிய...

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் புதிய திரைப்படம் !

Amazon collaborates with IIT Roorkee to develop innovative packaging solutions from agricultural waste!

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி வெளியிட்டார்: பிரபல பாடகி சாருலதா மணி இசை அமைத்து எழுதிய புதிய பாடல் "தென்றலில்"

டிசம்பர் 5 ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ஸ்டீபன்’ பிரத்யேகமாக ப்ரீமியர் ஆகிறது.!

18 ஆவது ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு!

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது!

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ!