*இயக்குநர்  Ar. காந்தி கிருஷ்ணாவின் ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!*

கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றலை போல காதல், நெகிழ்ச்சி மற்றும் மனதை வருடும் உணர்வுகளோடு ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆத்மார்த்தமான ரொமாண்டிக் அனுபவத்தை இந்தப் படத்தில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா தர இருக்கிறார் என்பது டீசரில் தெளிவாகியுள்ளது.

சினிமா ரசிகர்களிடையே இன்றும் தனி இடம் பிடித்துள்ள ‘செல்லமே’ மற்றும் ‘ஆனந்த தாண்டவம்’ போன்ற படங்களில் தனது தனித்துவமான கதை சொல்லலுக்காகப் புகழ்பெற்ற இயக்குநர் காந்தி கிருஷ்ணா, ’பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படம் மூலம் கம்பேக் கொடுக்கிறார். இந்த ரொமாண்டிக் கதையில் பிக்பாஸ் புகழ் ராணவ் மற்றும் ரோஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில்,  இந்தப் படத்தின் டீசரை நடிகை ரீமா சென் வெளியிட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, வெளியான இந்த டீசரில் உரையாடல்களை விட காட்சிகளை முன்னிலைப்படுத்தி அதில் உணர்வுகள் முழுமையாக வெளிப்படும் விதமாக அமைந்துள்ளது. இதனை விமர்சகர்களும் ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீடு குறித்த விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*நடிகர்கள்:* ராணா, ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, அர்ச்சனா, கிருத்திக் மோகன் மற்றும் அமிதா ரங்கநாத்.

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

எழுத்து, இயக்கம்: Ar. காந்தி கிருஷ்ணா,
தயாரிப்பு: கிரிஜா வரதராஜ்,
தயாரிப்பு பேனர்: பிரேம் கிளாசிக் பிக்சர்ஸ்,
இசை: ஜிவி பிரகாஷ்,
ஒளிப்பதிவு: எம்.வி. பன்னீர் செல்வம்

Related posts:

இயக்குநர் விக்ரமன் பெருமிதம்: மகன் விஜய் கனிஷ்காவின் 'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் மூன்று விருதுகள் வென்று சாதனை!

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!

பிரபாஸ் நடிக்கும் 'சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில், மாஸ் நடிகர் என்டிஆர், பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் அடுத்து இணையும் ஆக்‌ஷன் திர...

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வேம் இந்தியா இணைந்து தயாரித்திருக்கும் 'அகத்தியா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !

கூடுதல் கட்டணம் வசூலித்த 7 தனியாா் பேருந்துகள் பறிமுதல்! அமைச்சா் விஜயபாஸ்கா் தகவல் !!

மீண்டும் வரும் அர்னால்டின் Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) !

அறிமுக இயக்குநர் மேகராஜ் தாஸ் இயக்கத்தில் ராஜ் அய்யப்பா-டெல்னா டேவிஸ் நடிக்கும் ரோம்- காம் திரைப்படம் ‘லவ் இங்க்’!