தமிழ்நாட்டில் வேர்விட்ட தாமரை? விட்டதை பிடிக்கிறாரா எடப்பாடி பழனிசாமி.. விரைவில் அதிமுகவில் மாற்றம்?

தமிழ்நாட்டில் வேர்விட்ட தாமரை? விட்டதை பிடிக்கிறாரா எடப்பாடி பழனிசாமி.. விரைவில் அதிமுகவில் மாற்றம்? பாராளுமன்ற தேர்தல் முடிவுக்காக தமிழ்நாடே ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கிறது.. ஆனால், அதற்குள் அதிமுகவுக்குள் புதிய மாற்றம் இருக்கும் என்கிறார்கள். இந்த முறை தேமுதிகவுக்கு 5, புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கிவிட்டு, மிச்சமுள்ள 32 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக களம் கண்டுள்ளது.. லோக்சபா தேர்தல் 2024 தொகுதிகள் | வேட்பாளர்கள் | தேர்தல் தேதிகள் எரிந்து கிடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்.. சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்.. கொதித்து எழுந்த எடப்பாடி விட்டதை பிடிப்பாரா: விட்டதை இந்தமுறையாவது பிடிக்க வேண்டும் என்ற நெருக்கடி அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.. தமிழகத்தின் எதிர்க்கட்சி, தாங்கள் மட்டும்தான் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.. அதனால்தான், தமிழகமெங்கும் எடப்பாடி பழனிசாமி அனலடிக்கும் பிரச்சாரத்தை தனிநபராகவே மேற்கொண்டிருந்தார்.. அதேபோல, கோவையில் அண்ணாமலை, தேனியில் தினகரன், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ், இவர்கள் எல்லாம் 2வது இடத்துக்கு வரவே கூடாது என்று அதிமுக நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி.. இவ்வளவு முன்னெடுப்புகளை செய்தும், ஆனால், அதிமுக நிச்சயமாக 3வது இடத்தையே பிடிக்கும், பல இடங்களில் டெபாசிட் பறிபோகவும் வாய்ப்புள்ளதாகவும் பாஜக கூட்டணிகள் கூறி, அதிமுகவை சீண்டி கொண்டிருக்கின்றன. எடப்பாடி பழனிசாமி: இதனிடையே, தேர்தலின்போது நிர்வாகிகள் பலரும் சரியாக வேலை செய்யவில்லை என்ற தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு போய்க்கொண்டேயிருக்கிறதாம்.. கடமைக்காகவே நிறைய பேர் தொகுதியில் வந்துசென்றாலும். தாமரைக்கு தான் ஓட்டு..பெண்ணின் கன்னத்தில் பளார் விட்ட காங்கிரஸ் வேட்பாளர்.. பஞ்சாயத்து செய்யும் பாஜக கட்சி செலவுக்காக தலைமை கொடுத்த நிதியை, யாருக்கும் பகிர்ந்தளிக்கவில்லையாம். எல்லா பணத்தையும், மேல்மட்ட நிர்வாகிகளே பகிர்ந்து கொண்டதாகவும், பூத் செலவுக்கே கஷ்டப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவும் புகார்கள் எடப்பாடி காதுக்கு சென்றதாக தெரிகிறது. அதேபோல, தேர்தலில் திமுகவிடம் விலைபோனவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் ஒன்று எடப்பாடியிடம் தரப்பட்டிருக்கிறது. அதில் மா.செ.க்கள் முதல் ஒன்றிய செயலாளர்கள், பூத் ஏஜெண்டுகள் வரை இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது, உளவுத்துறையில் கோலோச்சி ஓய்வு பெற்று விட்ட அந்த ஐ.பி.எஸ். அதிகாரியின் உதவியுடன்தான் இந்த ரிப்போர்ட் எடுக்கப்பட்டதாம். அந்த ஐபிஎஸ். அதிகாரி கனமான நீண்ட பட்டியலை தந்திருக்கிறார். ஆயுர்வேத சிகிச்சை: ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்ற எடப்பாடி, அங்கிருந்த படியே இதுகுறித்து சீனியர்களிடம் அவர் ஆலோசித்திருக்கிறார். அப்போது, “கட்சிக்கு இப்படி துரோகம் செய்தவர்களை என்ன பண்ணலாம் ? நடவடிக்கை எடுக்கலைன்னா என் தலைமை மீதான நம்பிக்கையும் பயமும் கட்சிக்காரர்களுக்கு போய்விடுமே” என சொல்லியிருக்கிறார். “முதலில் ரேபரேலியில் ஜெயிக்கட்டும்!” வார்த்தையை விட்ட செஸ் ஜாம்பவான் கேரி! மொத்தமாக கிளம்பிய எதிர்ப்பு “ஆக்‌ஷன் எடுக்கலாம், ஆனால், எத்தனை பேர் மீது ஆக்சன் எடுக்க முடியும்? ஆக்சன் எடுத்தால் தப்பு செய்திருக்கும் அத்தனை பேர் மீதும் எடுக்க வேண்டும். அப்படி செய்யாமல் பாரபட்சம் காட்டினால், ஆக்ஷன் எடுக்கப்பட்டவர்கள், இவரெல்லாம் சோரம் போனார் , அவரெல்லாம் சோரம் போனார், இவர் சொல்லி கட்சி வேலை பார்க்காமல் இருந்தேன் என்றெல்லாம் பொதுவெளியில் அவர்கள் குற்றம் சாட்டினால் அதுவும் சர்ச்சையாகும். வலியுறுத்தல் : அதனால் இந்த சர்ச்சை வரக்கூடாது எனில் தவறு செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியில் பாதி பேர் மீது ஆக்சன் எடுக்க வேண்டி வருமே? ஒருவகையில், அது கட்சியையே காலி செய்வது போல ஆகிடாதா? அதனால், பிரச்சனையை தள்ளிப்போடுங்கள். ரிசல்ட் வரட்டும். பிறகு ஆலோசிக்கலாம்” என சீனியர்கள் சிலர் எடப்பாடியிடம் வலியுறுத்தியிருக்கிறாராம். ஆனால், எடப்பாடியோ, “இரண்டாம் நிலை ஆட்களை மன்னித்துவிட்டு மாவட்ட செயலாளர்கள் சிலர் மீது ஆக்ஷன் எடுத்தால் தான் கட்சியை காப்பாற்ற முடியும், நம் மீது பயம் இருக்கும்” என்கிற முடிவில் இருக்கிறாராம். ஆக்‌ஷன்: இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுப்பார் என விசாரித்து வருகிறார்கள் அதிமுக மா.செ.க்கள். தங்களிடமிருந்து மா.செ. பதவி பறிப்பது என எடப்பாடி உறுதியாக இருப்பது தெரியவந்தால், அவர் ஆக்ஷன் எடுப்பதற்கு முன், பதவியை நாமளே ராஜினாமா செய்து எடப்பாடிக்கு அதிர்ச்சியை கொடுக்கலாம் என்று மாவட்ட செயலாளர்கள் சிலர் ஆலோசிக்கிறார்களாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!