ஆன்மீகம்

ராசிபலன்கள்

ராசிபலன்கள்

மேஷம் நீங்கள் நீண்ட பயணத்துக்கு திட்டமிடுவதால், ஆரோக்கியமும், சக்தியை செலவிடாத குணமும் அதிக பயன் தரும். பிசியான பணி அட்டவணையிலும் நீங்கள் களைப்பை எளிதில் சமாளித்துவிடுவீர்கள். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். குடும்பத்தினரின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் இருக்க கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். ரொமாண்டிக் உணர்வுகளுக்கு எதிர்பலனும் இன்று கிடைக்கும். வேலையில் இன்று மிக சாதகமான நாள், எனவே அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்களுக்கு நேரம் கொடுக்க உங்களுக்குத் தெரியும், இன்று நீங்கள் நிறைய ஓய்வு நேரத்தைப் பெற வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் ஒரு விளையாட்டை விளையாடலாம் அல்லது இலவச நேரத்தில் ஜிம்மிற்கு செல்லலாம். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும். அதிர்ஷ்ட எண்: 1 ரிஷபம் சில மனமகிழ் நிகழ்ச்சிக்காக சீக்கிரம் அலுவலகத்தைவிட்டு வெளியே செல்லுங்கள். நாளின் பிற்பகுதியில் நிதி நிலைமை மேம்படும். இனிமையான மற்றும் அற்புதமான மாலை நேரத்துக்காக விருந்தினர்கள் உங்கள் வீட்டில் கூடுவார்கள். அன்புக்குரியவர் உடன்…
Read More
தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா!

தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா!

தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப் படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5 ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் இக்கோவில் அமைந்திருக்கும் தஞ்சை மண்ணில் பிறந்த பலர், தமிழகத்திற்கு மட்டும் இன்றி இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பல்வேறு துறையில் பணியாற்றி வருகிறார்கள். அரசியல், கலை, சினிமா, தொழில்த்துறை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தஞ்சை மண்ணை சேர்ந்தவர்கள் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்கள். இசைத் துறைக்கு எம்.கே. தியாகராஜ பாகவதரை கொடுத்த தஞ்சை, நடிப்புக்கு சிவாஜி கணேசனை கொடுத்தது. இவர்களை தொடர்ந்து நடிகைகள் டி.ஆர்.ராஜகுமாரி, ஹேமாமாலினி என்று தமிழ் சினிமா மட்டும் இன்றி…
Read More
இன்றைய ராசிபலன்கள் !

இன்றைய ராசிபலன்கள் !

மேஷம் எதிலும் நியாயமாக நடக்கவேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் பகை ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் மிகவும் அமைதியாகப் பேசி, பணிவாக நடத்தல் அவசியம். ரிஷபம் குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்பட்டு மகிழ்ச்சி அதிகரிக்கும்.. புத்தாடை மற்றும் புதிய நகைகள் அணிவர். தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலோடு எதிர் கொண்டு ஏற்றம் அடைவர். மிதுனம் கல்வியில் வெற்றி கிடைக்கும். கௌரவம், மதிப்பு, மரியாதை கூடும். மனைவி, மக்களின் ஆரோக்கியம் மேம்படும். தனலாபம், பெண்களால் உதவி. ஆகியவையும் ஏற்படும். கன்னி எதிர்பார்ப்புக்கு மேல் பலவகையிலும் பணவரவு கூடும். உடன் பிறப்புக்களால் உதவி உண்டு. அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். மகரம் சுகம், சந்தோஷம், உல்லாசமான சுற்றுலாப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும். செல்வம் சேரும். கடகம் பொருள்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். கௌரவக் குறைச்சல் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்வது நல்லது.…
Read More
திருச்செந்தூரில் மாமரம் வளர்வதில்லை காரணம் தெரியுமா?

திருச்செந்தூரில் மாமரம் வளர்வதில்லை காரணம் தெரியுமா?

மாமரத்தின் வடிவில் நின்ற சூரனை சம்ஹாரம் செய்தார் முருகப்பெருமான். ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி தினத்தில் இது நிகழ்ந்தது. மாமரத்தின் வடிவில் சூரன் மாறி முருகனால் சம்ஹாரம் செய்யப்பட்டதால் திருச்செந்தூர் பகுதிகளில் இன்றும் மாமரம் வளர்வதில்லை. மாமரமாக மாறிய சூரபதுமனை முருகப் பெருமான் தன் கையில் இருந்த வேல் ஆயுதத்தால் இரண்டாகப் பிளந்தார். அதன் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. மாமரத்தின் வடிவில் சூரன் நின்றதால் திருச்செந்தூர் பகுதிகளில் மாமரம் வளர்வதில்லை. சஷ்டி விரதம் ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப் படுகிறது. சஷ்டி விரத காலத்தில் திருச்செந்தூர் முருகன் சந்நிதானத்தில் அமர்ந்து விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும். தீராத வயிற்றுவலி உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கந்தசஷ்டி கவசம் பாடினால் குணமாகும் என்று பால தேவராய சுவாமிகள் கூறியிருக்கிறார். முருகப்பெருமான் தன் தாய் பார்வதியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமர வடிவில் இருந்த அசுரன் மீது விட அந்த…
Read More
கோவிலுக்கு தேவைப்படாத நிலங்களில் ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா ! அரசு பரிசீலனை !!

கோவிலுக்கு தேவைப்படாத நிலங்களில் ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா ! அரசு பரிசீலனை !!

கோவிலுக்கு தேவைப்படாத நிலங்களில் ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும் அதற்கான இழப்பீடு தொகையை கோவிலுக்கு வழங்கவும் அரசு பரிசீலிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் கன்னன்குறிச்சியைச் சேர்ந்தராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:வருவாய் துறை பிறப்பித்த உத்தரவில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் நீண்ட காலமாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கவும் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலத்தில் இருப்பவர்களை அகற்றி அவர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்குவது குறித்தும் தெரிவித்துள்ளது.இந்த உத்தரவு கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பவர்களுக்கும் பச்சைக் கொடி காட்டுகிறது.அரசு புறம்போக்கு நிலத்தில் இருப்பவர்களையும் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து இருப்பவர்களையும் சமமாக பார்க்க முடியாது.கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்குவது அறநிலையத்துறை சட்டத்துக்கு எதிரானது; ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் என்.சேஷசாயி அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து வருவாய் துறை துணைச் செயலர் ஆனந்தன் தாக்கல் செய்த பதில் மனு:கோவில் நிலத்தை…
Read More