வோல்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அபராதம் !

வோல்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மாசுக்களை பாதுகாப்பற்ற முறையில் வெளிப்படுத்தியதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோல்ஸ்வேகன் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் நாளை (ஜன.,18) மாலை 5 மணிக்கும் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், அப்படி அபராதம் செலுத்த தவறினால் வோல்ஸ்வேன் நிறுவனத்தின் இந்திய மேலாண் இயக்குனர் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். அத்துடன் வோல்ஸ்வேகன் நிறுவனத்திற்கு இந்தியாவில் உள்ள அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

'டிராய்' உத்தரவை மீறும் தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் !

சோலார் மின்உற்பத்தி ! சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இலக்கு !!

நிறைவேறியது அணைகள் பாதுகாப்புச் சட்டம் பறிபோகுமா பெரியாறு 999 ஆண்டு உரிமை?

சீன ரஷ்ய எல்லையிலுள்ள சூஃபென்ஹேயில் கொரோனா தொற்று அதிகரிப்பு ?

ரகுபதி ராகவ ராஜாராம் # வயலின் வித்துவான் # டி.எஸ்.கிருஷ்ணா # இன்னிசை

தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பங்களுக்கு ரோட்டரி கிளப் நிதியுதவி!

எம்.ஆர்.ராதாவை திராவிட இயக்கங்கள் மறந்துவிட்டது? நடிகர் ராதாரவி குற்றச்சாட்டு !

இந்திய திரைப்பட கூட்டமைப்பின் துணைத் தலைவராக திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் ஒருமனதாக தேர்வு.!