வூஹான் முடக்கப்படாமல் இருந்திருந்தால் உலகின் நிலை ?

கொரோனா வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரை பாதுகாப்பு நடவடிக்கையாக சீன அரசு முதலில் முடக்கியது. அந்த நடவடிக்கையால் மிகப் பெரிய பாதிப்பு நேராமல் தடுக்கப்பட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.உலகளவில் 203 நாடுகளுக்கு பரவியுள்ள உயிர்கொல்லி கொரோனா, இதுவரை 47,194 பேரை பலி கொண்டுள்ளது. உலகளவில், 9,35,346 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,94,000 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

ஆராய்ச்சியளர் கிரிஸ்டோபர் டை கூறுகையில் “வைரஸ் பாதிப்பு அதிகமானதும் வூஹான் நகரம் முழுவதுமாக முடக்கப்பட்டது. அங்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அந்த நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்திருந்தால் ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் கூடுதலாக பாதிக்கப்பட்டிருப்பர். இந்நேரம் நிலைமை மிக மோசமாகி இருக்கும்” என்றார்.

Related posts: