நுரையீரலைக் காக்கும் கரிசலாங்கண்ணி !

நுரையீரல் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி உடலும் உள்ளமும் வலிமை அடைய இதை செய்யுங்கள்!காடுகளிலும் குறிப்பாக தண்ணீர் பாயும் இடங்களிலும் செழிப்பாக வளர்ந்து கிடக்கும் ஒரு மூலிகைதான் கரிசாலை. கரிசாலை என்பது தற்போது மக்களால் கரிசலாங்கண்ணி என்று அழைக்கப்படுகிறது.

இதில் வெள்ளை கரிசலாங்கண்ணி மஞ்சள் கரிசலாங்கண்ணி என இரண்டு வகைகள் உள்ளன.வெள்ளை கரிசலாங்கண்ணி வெளி உபயோக மருந்துகளுக்காகவும், மஞ்சள் கரிசலாங்கண்ணி உடலின் உள் பகுதிக்கு சாப்பிடும் மருந்துகளாகவும் பயன் படுத்தப்படுகிறது.இதில் மஞ்சள் கரிசலாங்கண்ணியை பயன்படுத்தி நுரையீரல் சம்பந்தமான நோய்களை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்!

உலர்ந்த மஞ்சள் கரிசலாங்கண்ணி 100 கிராம், உலர்ந்த தூதுவளை இலை 25 கிராம், உலர்ந்த முசுமுசுக்கை இலை 25 கிராம், சீரகம் 25 கிராம் ஆகிய நான்கையும் நன்றாக அரைத்து ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி காற்றுப்புகாத ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். காலையில் இந்தக் கலவையில் ஒரு தேக்கரண்டி எடுத்து 100 மில்லி பசும்பாலில் கலந்து அதனுடன் 100 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாக சுண்டக் காய்ச்சி நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் ஆஸ்துமா, மூக்கடைப்பு முதலிய நுரையீரல் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும்.

இதுமட்டுமல்லாமல் ரத்தசோகை, இரும்பு சத்து குறைபாடு, நரம்பு தளர்ச்சி ஆகியவை முற்றிலும் நீங்கி உடலும் உள்ளமும் பலம் பெறும்.