27
Mar
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து அவன் சந்தித்துவரும் முக்கியமான சவால்களில் ஒன்று வைரஸ்கள் மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்கள். தற்போது மக்களை மிரட்டும் கொரோனா வைரஸ் நம்மைத் தாக்கிவிடாமல் தடுக்க ஒரு நாளில் பலமுறை கை கழுவுவதுதான் மிகச்சிறந்த வழி என்கிறது மருத்துவ உலகம்.இருப்பினும் நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள், ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், நுரையீரல் சார்ந்த நோய்கள் கொண்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள முதியவர்கள் போன்றவர்களை இந்த வைரஸ் அதிகம் தாக்கும் ஆபத்துஉள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். இவர்களில் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்த தெளிவான புரிதல் இதுவரை இல்லாமல் இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு இறந்துபோன மற்றும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மீதான ஒரு சமீபத்திய ஒரு…
