05
Jan
பொறியியல் கல்லூரிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி உள்ளது. அதாவது 103 பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீதம் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. தமிழகத்தில், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 836 இடங்களுக்கான பொதுப்பிரிவுக்கான பொறியியல் கலந்தாய்வு கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதியோடு நிறைவடைந்தது. இதில், 56. 1 சதவீத இடங்கள் நிரப்பப்பட வில்லை என்ற தகவல் கல்வியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழக அரசு பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொண்ட 461 பொறியியல் கல்லூரிகளில், 33 சதவீத கல்லுரிகள் 20 சதவீதத்திற்கும் குறைவான இடங்களை மட்டுமே நிரப்பியுள்ளன. 103 கல்லூரிகள் வெறும் 10 சதவீதத்திற்கும் குறைவான இடங்களை மட்டுமே நிரப்பியுள்ளன. 20 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை பூஜ்யமாக உள்ளது.என்னதான் பொறியியல் படிப்பை படித்தாலும் வேலை கிடைப்பதில்லை.தகுதியும் திறமையும் உள்ள ஆசிரியர்களைக் கொண்டு பாடம் கற்பிப்பதில்லை.இது போன்ற காரணங்களினால் மாணவர்களின் பொறியியல் படிப்புக்கான ஆர்வம் குறைந்து வருகிறது. இதனால், அநேக பொறியியல் கல்லூரிகள்…
