பல்கலைக்கழகங்கள் இறுதி ஆண்டு பருவத் தேர்வை ஆன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளன!

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் இறுதி ஆண்டு பருவத் தேர்வை ஆன்லைனில் நடத்த வியாழக்கிழமை முடிவு செய்துள்ளன. இந்த ஆன்லைன் தேர்வுகள் செப்டம்பர் 30ம் தேதி முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளின் இறுதி ஆண்டு பருவத் தேர்வுகள், ஆன்லைனில் நடைபெறுமா அல்லது வழக்கம் போல, நேரடி எழுத்து தேர்வாக நடைபெறுமா என்று தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் இருந்தனர். மாணவர்களின் இந்த குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், கோரோனாவைக் கருத்தில் கொண்டு இறுதி ஆண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தமிழக பல்கலைக்கழகங்கள் வியாழக்கிழமை முடிவு செய்தன. ஆன்லைன் தேர்வுகள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட உள்ளன.

மாநில உயர்கல்வித் துறை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தைக் கூட்டியது. இந்த கூட்டம் ஆன்லைனில் தேர்வுகளை நடத்த ஒருமனதாக ஒப்புக் கொண்டது. ஆனால், முறைகள் – கேள்விகள் மற்றும் அதற்கான இணையதளங்களை உருவாக்கும் பணியை பல்கலைக்கழகங்களின் பொறுப்பில் விட்டுள்ளன.

ஆன்லைன் தேர்வு காலத்தை 3 மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் குறைக்க வேண்டும் என பல்கலைக்கழகங்கள் கேட்டுக்கொண்டன. இதையடுத்து, “இறுதி செமஸ்டர் தேர்வுகளை 2 மணி நேரத்திற்கு மேல் நடத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது” என்று ஒரு அதிகாரி கூறுகிறார்.

அண்ணா பல்கலைக்கழகம் சரியான விடையை தேர்வு செய்தல் என்ற அடிப்படையில் கேள்விகளை அமைக்க திட்டமிடுவதாகவும், ​​பிற பல்கலைக்கழகங்கள் விளக்க வகை கேள்விகளைப் அமைக்க விரும்புகின்றன.

இது குறித்து துணைவேந்தர் ஒருவர் ஊடகங்களிடம் கூறுகையில், “நாங்கள் மாணவர்களுக்கு கேள்விகளை அனுப்புவோம். பேனா மற்றும் காகிதத்தைப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படும். பின்னர் மதிப்பீடு செய்வதற்காக விடைத்தாள்களைப் பதிவேற்ற வேண்டும். விடைத்தாள்களை பதிவேற்ற முடியாத மாணவர்களுக்கு கல்லூரிகள் அதற்கான வசதிகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படும். இவ்வளவு குறுகிய கால அறிவிப்பில் சரியான விடையைத் தேர்வு செய்தல் அடிப்படையிலான வினாத்தாள்களை உருவாக்க முடியாது” என்று கூறினார்.

சென்னை பல்கலைக்கழகம் தேர்வு நடைபெறும் கால அளவு, மற்றும் எந்த முறையில் தேர்வு நடைபெறும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. தேர்வு நடத்துவது குறித்த விவாதங்களுக்குப் பிறகு அடுத்த சில நாட்களில் விவரங்கள் இறுதி செய்யப்படும் என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழகம் செப்டம்பர் 22 முதல் 29 வரை ஆன்லைனில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதாக அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் “மடிக்கணினிகள், டெஸ்க் டாப் கணினிகள், ஸ்மார்ட்போன்கள், இணையம், கேமரா மற்றும் மைக்ரோஃபோன் வசதிகள் கொண்ட டேப்லெட்டுகள் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் வீட்டிலிருந்து தேர்வு எழுதலாம். வினாத்தாள் சரியான விடையைத் தேர்வு செய்தல் என்ற அடிப்படையில் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு முறையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக மாதிரி தேர்வுகளை ஏற்பாடு செய்யவும் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
ஆனால் அதற்கெல்லாம் கால அவகாசம் இல்லை.எனவே மாணவர்களே ஆன்லைன்
தேர்வுக்கு உங்களைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
வெற்றி பெறுங்கள்.

Related posts:

சிமென்ட் கான்கிரீட்டுக்கு மாற்றாக,புதிய கான்கிரீட் கலவை ! சென்னை ஐ.ஐ.டி., கண்டுபிடிப்பு !!
ஷாஸன் ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட சாரா ரோபோ !
தமிழகத்தைச் சேர்ந்த 34 பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்களுக்கான ‘’ இந்தியா தரவரிசை 2020’’ பட்டியல் ?   
அரசு கல்வி உதவித் தொகை 5 முக்கிய திட்டம் ! பயன் பெறுவது எப்படி?
நீட் தேர்வு # பாடத் திட்டம் # மாற்றமா? # தேசிய தேர்வு முகமை NTA # விளக்கம் #
இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம் !
ஐ.ஐ.டி, என்.ஐ.டி ஆகியவை தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்க உள்ளது !
10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கப்பட்டுள்ளது.!