கல்வி

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

இலவச கல்வி அறக்கட்டளை சேவை மைய்யம் !

இலவச கல்வி அறக்கட்டளை சேவை மைய்யம் !

  +2 தேர்ச்சிக்குப் பின் SC/ST/SCA /MBC/BC (convertedchristian ) கத்தோலிக்க/CSI/ Eci/RC பெந்தகோஸ்த (மற்றும் அனைத்து மதத்தினருக்கும்)மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4ஆண்டுகள் கல்வி கட்டணம் ,தங்கும் விடுதி உணவு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். கடைசி இரண்டு நாட்கள் மட்டுமே இலவசமாக அட்மிஷன் நடைபெறுகிறது *டிப்ளமோ முடித்தவர்கள் BE படிக்கலாம் Any Degree தொலைதூரக் கல்வி வாயிலாகவும் BE, MBA, B,ed, படிக்க வாய்ப்பு. Courses Offer BE,ME,MBA,MCA B.sc Agriculture B.Sc Nursing, Pharm D, B.Pharm,D.Pharm M.Pharm, AllEngineering courses Civil,Mechanical, Eng Chemical Eng EEE,ECE,CSC, Aeronautical MBBSவரை விண்ணப்ப கட்டணம்மட்டுமே அனைத்து படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்படுகிறது B.comமுதல்MBBS வரை அனைத்து படிக்க ஒரு அறிய வாய்ப்பு இண்றுமுதல் முன்பதிவு செய்ய இந்த வாட்சப் எண்ணிற்கு 7558118495 என்ன படிக்கவேண்டும் என்பதை வாட்சப்பில் முன்பதிவு செய்யும் மாணவர்க்கு கல்வி கட்டணம் இல்லாம இலவசமாக…
Read More
மத்திய அரசுப் பணிகளுக்கு 12 மொழிகளில் தேர்வு ! அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அரசுப் பணிகளுக்கு 12 மொழிகளில் தேர்வு ! அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அரசுப் பணிகளுக்கு 12 மொழிகளில் தேர்வு எழுதலாம் என்று மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் சொல்லியிருக்கிறார். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று சிலர் கூறிவரும் தவறான தகவல்களை மறுத்துள்ள அவர், தொடக்கத்தில் 12 இந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும் பின்னர் படிப்படியாக 8-வது அட்டவணையில் உள்ள மற்ற மொழிகளும் சேர்க்கப்படும் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர்  மேலும் தெரிவிக்கையில் ,” மத்திய அரசுப் பணிகளுக்கு ஆள்தேர்வு நடைமுறைகளில் நிலை மாற்றத்துக்கான சீர்திருத்தங்களை உருவாக்கும் வகையில் தேசிய ஆள்தேர்வு முகமை ஒன்றை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.  அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சமநிலையிலான போட்டி வாய்ப்பை உருவாக்கும் வகையில், பி மற்றும் சி பிரிவில் வரும் (தொழில்நுணுக்கம் சாராத) பணிகளுக்கு மாணவர்கள் தகுதிப்பட்டியலை (screen/shortlist) தயாரித்தலுக்கு, பொது தகுதித் தேர்வை (National Recruitment Agency – NRA) தேசிய ஆள்தேர்வு முகமை…
Read More
நீட் தேர்வில் குறைந்தது 180 மதிப்பெண்ணை அடைவது எப்படி?

நீட் தேர்வில் குறைந்தது 180 மதிப்பெண்ணை அடைவது எப்படி?

வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் 2020 நடைபெற உள்ளது. தேர்வு நடைபெறுவது குறித்து பல்வேறு  குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தாலும், தேர்வர்கள் சொல்லப்பட்ட தேதியில் தேர்வு நடைபெறும் என்ற நினைப்போடு, தேர்வுக்கான வேலையில் தீவிர கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். சிறப்பாக தயாராக, முதலில் நீட் தேர்வின் முக்கிய அம்சங்களை புரிந்துகொள்வது முக்கியம். நீட் தேர்வில் 180 கேள்விகள் இருக்கும். இயற்பியல், வேதியியல், விலங்கியல்,  தாவரவியல் போன்ற ஒவ்வொரு பாடப் பிரிவுகளிலும், 45 கேள்விகள் கேட்கப்படும். இதில்  மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தாவரவியல் பாடம் மிக முக்கியமானதாக  கருதப்படுகிறது. இயற்பியல் – பயத்தை வெல்வோம்: பயன்பாட்டு அடிப்படையிலான கேள்விகள் இருப்பதால் பல நீட் தேர்வர்கள் இயற்பியல் பாடத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள்.  இத்தகைய பயம், மாணவர்களிடம் நிலவி வருவதால், பெரும்பாலான மாணவர்கள் இயற்பியல் பாடத்தை  முழுவதுமாக விட்டுவிடுகிறார்கள் (அ) மற்ற பாடங்களை புறக்கணித்து விட்டு இயற்பியல் பாடத்தில் அதிகப்படியான நேரத்தை செலவிடுகின்றனர்.…
Read More
அரசு கல்வி உதவித் தொகை 5 முக்கிய திட்டம் ! பயன் பெறுவது எப்படி?

அரசு கல்வி உதவித் தொகை 5 முக்கிய திட்டம் ! பயன் பெறுவது எப்படி?

5 முக்கிய அரசு கல்வி உதவித் தொகை திட்டம் : பயன் பெறுவது எப்படி? இந்திய அரசின் முக்கிய கல்வி உதவித் தொகை திட்டத்தின் சிலவற்றை இங்கே காணலாம். தேசிய அளவிலான தகுதி-வழியுதவி கல்வி உதவித் தொகைத் திட்டம்: தேசிய அளவிலான தகுதி-வழியுதவி கல்வி உதவித் தொகைத் திட்டம்  (National Means-cum-Merit Scholarship Scheme (NMMSS) )2008 மே மாதம் தொடங்கப்பட்டது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சார்ந்த திறமையான மாணவர்கள் எட்டாம் வகுப்புக்குப் பிறகு படிப்பை நிறுத்திவிடக் கூடாது  என்ற நோக்கில் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. இத்திட்டத்தின் கீழ்,  தேர்ந்தெடுக்கப்படுகிற மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000/- என்ற கணக்கில் ஆண்டுக்கு  பன்னிரெண்டாம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாநில அரசுப்பள்ளி அல்லது அரசின் உதவி பெறும் பள்ளி அல்லது உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க இந்த உதவித் தொகை…
Read More
மூன்றாவது மொழி கல்வி உரிமைச் சட்டப்படி வரவேற்கத்தக்கது !

மூன்றாவது மொழி கல்வி உரிமைச் சட்டப்படி வரவேற்கத்தக்கது !

மத்திய அரசு அண்மையில் புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது . இதற்கு இந்தியாவிலுள்ள 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களில் , தமிழ்நாட்டில் மட்டும் திராவிட இயக்கங்கள் , பொதுவுடைமைக் கட்சிகள் , விடுதலைச் சிறுத்தைகள் , பா.ம.க ... மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன . இந்த எதிர்ப்புக்குக் காரணம் , இப்புதிய கல்விக் கொள்கையில் இந்தியும் சமஸ்கிருதமும் கட்டாயம் என்று சொல்லப்படுகிறது . தமிழ்நாட்டில் 1967 - ஆம் ஆண்டு முதல் இருமொழிக் கொள்கை இருந்து வருவதால் , இங்கு மும்மொழிக் கொள்கை அவசியமில்லை என்கிறார்கள் . மும்மொழித் திட்டம் என்பது தமிழகத்தில் இந்தி மொழியை மறைமுகமாகத் திணிப்பதற்கான முயற்சி எனக் கூறுகிறார்கள் . இக்கல்விக் கொள்கையில் , பள்ளிப் பருவத்திலேயே அவர்கள் விரும்பும் எலக்ட்ரீஷியன் , பிளம்பர் போன்ற சுய தொழில்களைக் கற்றுக் கொடுப்பது முந்தைய குலக்கல்வி முறை என்று…
Read More
உலக அளவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தகுதியான பணியாளர்கள் கிடைக்காமல் திண்டாடுகின்றன !!

உலக அளவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தகுதியான பணியாளர்கள் கிடைக்காமல் திண்டாடுகின்றன !!

பள்ளிப் படிப்பு வரை எப்படியோ முடித்தாகிவிட்டது என்று, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மாணவிகள் பலரும் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். குறிப்பாக பிளஸ் 2 படிப்பானது, ஒருவரின் உயர்கல்வி வாய்ப்பை நிர்ணயிக்கும் அளவுகோல் மட்டுமே.+2 ல எடுக்கும் மார்க்கின் அடிப்படையில் தான் நீங்கள் நல்ல கல்லூரிகளில் சேர முடியும். ஆனாலும், தனித்திறமையும், சாதனை வேட்கையும் கொண்ட மாணவர்கள், பிளஸ் 2 படிப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும்கூட, வாழ்க்கையில் முன்னேறி, புகழ் பெற்று விடுகிறார்கள்.இதற்கு உதாரணமாக நிறைய பேர் இருக்கிறார்கள். இங்கே, கல்லூரிப் படிப்பு என்று எடுத்துக்கொண்டால், அது கலை - அறிவியல் படிப்போ, மருத்துவப் படிப்போ, பொறியியல் படிப்போ, மேலாண்மை படிப்போ மற்றும் இன்ன பிற படிப்புகளோ, அவை எதுவானாலும், அந்த படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள், தங்களின் பள்ளிப் படிப்பு மனோ நிலையை கட்டாயம் தாண்டி வரவேண்டியுள்ளது. இல்லையெனில், அவர்கள் பல விஷயங்களிலும் பின்தங்கும் அவலநிலை ஏற்படுகிறது. பள்ளிப் படிப்பை பொறுத்தவரை,…
Read More
பள்ளிக் கல்வியில் மாற்றம் வருமா? மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு தருமா?

பள்ளிக் கல்வியில் மாற்றம் வருமா? மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு தருமா?

இந்தியாவில் உள்ள 14 லட்சம் பள்ளிகளில் , அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 20 லட்சம் குழந்தைகளும் , மற்ற அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 38 லட்சம் குழந்தைகளும் கல்வி கற்பதாக , பள்ளிக் கல்விக்கான ' ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு அறிக்கை - 2016-2017ம் ஆண்டில் தெரிவித்திருக்கிறது. இந்த கல்வி ஆண்டில் இன்னும் அதிகமாக இருக்கும். இந்திய மக்கள்தொகையில் சுமார் 29 சதவீதம் பேர் குழந்தைகள் . 6 முதல் 14 வயதுக்குட்பட்டோர் 20 சதவீதம் பேர் . இவர்கள் ' கல்வி உரிமை சட்டம் - 2009 ' - ன்படி கல்வி கற்க உரிமை பெற்றவர்கள் . கல்வி உரிமை சட்டம் 2009 , கல்விக்கான விழிப்புணர்வையும் குழந்தைகளைப் பயிற்றுவிப்பதற்கான விருப்பத்தையும் உருவாக்கியது . இருந்தாலும் 2014 - ஆம் ஆண்டின் '…
Read More
குறைந்த கட்டணத்தில்  வெளிநாட்டில் மருத்துவம் படிக்கமுடியும்!

குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கமுடியும்!

நீங்கள் 2019 அல்லது அதற்குப்பிறகு நீட்தேர்வில் தகுதி பெற்றிருந்தால் மிகவும் குறைந்த கட்டணத்தில் அதுவும் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கமுடியும்! என்ன ஆச்சரியமா இருக்கா! மாணவர்கள் பெரும்பாலும் குறைந்த பட்சம் ஒரு நல்ல வருமானம் தரகூடிய பணியில் இருக்க வேண்டும் என்று தான் கனவு காண்கிறார்கள், அதுஒரு பொறியாளர், மருத்துவர், வழக்கறிஞர், பட்டய கணக்காளர் அல்லது இது போன்ற பல தொழில்களாக இருக்கலாம். இருப்பினும், +2இல் அறிவியலைத் தேர்ந்தெடுப்பவர்கள், அவர்களின் முதல் விருப்பமாக மருத்துவப் படிப்பை (எம்பிபிஎஸ்) கனவு காண்கின்றனர். மருத்துவப்படிப்பில் சேரவிரும்பும் மாணவர்களுக்கான பொதுவான நுழைவுத் தேர்வாக நீட் (NEET) நடத்தப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையிலான இடங்களுக்கு பல லட்சம் மாணவர்களுக்கு இடையே போட்டி நடக்கிறது. நாட்டின் புகழ் பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் சிலவற்றில் இடம் பிடிக்க மாணவர்கள் இடையே போட்டி நிலவுகிறது. இதில் இடம் பிடிக்க நீட் (NEET) தேர்வில் முதல் 4000-5000 தரவரிசையில் இருந்தால் மட்டுமே முடியும். இந்தியாவில் தெற்குப்…
Read More
உதவித்தொகையுடன் கணிதம், புள்ளியியல் படிக்கலாம் !

உதவித்தொகையுடன் கணிதம், புள்ளியியல் படிக்கலாம் !

மத்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனம் (Indian Statistical Institute) கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. புள்ளியியல் பயன்பாடு தொடர்பான ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுவரும் இந்த பிரத்யேகக் கல்வி நிறுவனத்துக்கு சென்னை, பெங்களூரு, டெல்லி உள்பட 4 இடங்களில் கல்வி வளாகங்கள் உள்ளன. சென்னை வளாகம் அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் செயல்படுகிறது. கோவையில் இதன் தகவல் மையம் உள்ளது. இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் கணிதம், புள்ளியியல் பாடங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி என பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இங்கு படிக்கும் இளங்கலை மாணவர்கள் கல்வி உதவித்தொகையாக மாதம்தோறும் ரூ. 3 ஆயிரமும், முதுகலை மாணவர்கள் ரூ. 5 ஆயிரமும் பெறலாம் என்பது சிறப்பு அம்சம். அனைத்துப் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இந்திய தேசிய கணித ஒலிம்பியாட் (Indian National Mathematical Olympiad-INMO)…
Read More
இந்தியக் கல்வியின் பலம், பலவீனம், வாய்ப்பு, அச்சுறுத்தல்!

இந்தியக் கல்வியின் பலம், பலவீனம், வாய்ப்பு, அச்சுறுத்தல்!

உலக நாடுகள் முழுவதும் உள்ள கல்வி நிலையங்களுக்கு கரோனா வைரஸ் பூட்டுப் போட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அன்றாட வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சகமே தொடர்பு கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதால் பள்ளி நிர்வாகத்தினர், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட கல்வி புலம் சார்ந்த அனைவரும் எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ளும் சூழலில் சிக்கியுள்ளனர். இந்தக் காலகட்டம் புதிய இயல்புநிலையை உருவாக்கி இருக்கிறது. இத்தகைய புதிய இயல்பு நிலைக்கு நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்வது எப்படி என்ற கேள்வியைத்தான் எல்லோரும் தற்போது எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கரோனா காலகட்டத்தையும் அது கல்வி மீது ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தையும் அலசி ஆராய்வோம். இதற்கு ஸ்வாட் (SWOT)அலசல் எனப்படும் பிரபல ஆய்வு முறையைப் பொருத்திப் பார்க்கலாம். இதன் மூலம் இந்தியக் கல்வியின் பலம், பலவீனம், வாய்ப்பு, அச்சுறுத்தல் ஆகியவற்றைக் கண்டறியலாம். அந்தப் பயிற்சியானது புதிய குறிக்கோள்களையும் இலக்குகளையும் நோக்கி…
Read More