சினிமா

காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’!

காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’!

காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா', ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில், கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில், சாய் ராஜகோபால் எழுதி இயக்குகிறார் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை உள்ளிட்ட நகைச்சுவை நட்சத்திர பட்டாளம் களம் இறங்குகிறது. சிங்கமுத்து மகன், நாகேஷ் பேரன் மற்றும் மயில்சாமி மகன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில் கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் 'காமெடி கிங்' கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படத்திற்கு 'ஒத்த ஓட்டு முத்தையா' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த குடும்பத்துடன் கண்டு ரசிக்கக் கூடிய வகையில் உருவாகவுள்ள இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, 'எதிர்நீச்சல்' ஜான்சி…
Read More
நடிகர் சூர்யா நடிப்பில்  ‘கங்குவா’ படத்தின் புரோமோ டீசர் தற்போது வெளியாகியுள்ளது!*

நடிகர் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ படத்தின் புரோமோ டீசர் தற்போது வெளியாகியுள்ளது!*

*ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா, யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து வம்சி-பிரமோத் வழங்கும், இயக்குநர் சிவா இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகர் சூர்யா நடிப்பில் 'கங்குவா' படத்தின் புரோமோ டீசர் தற்போது வெளியாகியுள்ளது!* சென்னை (ஜூலை 23, 2023): நடிகர் சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும், பிரம்மாண்டமான படமான ’கங்குவா’ படத்தின் பிரம்மாண்டமான புரோமோ டீசரை படக்குழு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா கடந்த 16 வருடங்களில் ‘சிங்கம்’ பட சீரிஸ், ‘பருத்தி வீரன்’, ‘சிறுத்தை’, ‘கொம்பன்’, ‘நான் மகான் அல்ல’, ‘மெட்ராஸ்’, ‘டெடி’ மற்றும் சமீபத்தில் ‘பத்து தல’ போன்ற பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தென்னிந்தியத் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து சூர்யா நடிக்கும் ’கங்குவா’ படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. படம் துவங்கியதில் இருந்தே இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம்…
Read More
தயாரிப்பாளர்,விநியோகஸ்தரான ஜே எஸ் கே சதீஷ்குமார் நடிகராக அவதாரம் எடுக்கிறார் !

தயாரிப்பாளர்,விநியோகஸ்தரான ஜே எஸ் கே சதீஷ்குமார் நடிகராக அவதாரம் எடுக்கிறார் !

பன்மொழி வெற்றிப் படங்களின் விநியோகஸ்தரும், தேசிய விருதுகள் வென்ற 'தங்க மீன்கள்', 'குற்றம் கடிதல்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்', 'மதயானைக் கூட்டம்', 'தரமணி', 'புரியாத புதிர்' மற்றும் விரைவில் வெளியாக உள்ள 'அண்டாவ காணோம்' உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளருமான ஜே எஸ் கே சதீஷ்குமார், நடிகராக தற்போது புதிய பரிமாணம் காட்டி வருகிறார். வசந்தபாலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அநீதி' திரைப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருந்த ஜே எஸ் கே சதீஷ்குமார், தனது சிறப்பான நடிப்பிற்காக பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகளை தொடர்ந்து பெற்று வருகிறார். 2017-ம் ஆண்டு ராம் இயக்கத்தில் உருவான 'தரமணி' படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் தொடங்கிய ஜே எஸ் கே சதீஷ்குமாரின் நடிப்பு பயணம், ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த 'பேரன்பு', சிபிராஜ் நடித்த 'கபடதாரி', பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான…
Read More
லாக் டவுன் டைரி பட இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா !

லாக் டவுன் டைரி பட இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா !

அங்கிதா புரடக்ஷன் எஸ். முரளி அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் "லாக் டவுன் டைரி".900 படங்களுக்கு ஸ்டண்ட்  மாஸ்டராக  பணியாற்றியிருக்கும் ஜாலி பாஸ்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.கே.எச் தாஸ். இசை ஜாசி கிஃப்ட் & AB முரளி. இதில் ஜாலி பாஸ்டியன் மகன் விஹான் ஜாலி (அமீத்)  கதாநாயகனாக அறிமுகமாகிறார். சஹானா கதாநாயகியாக நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர்,. மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிக்கையாளர்கள்  மீடியாவினர்  முன்னிலையில் நடந்தது.  நிகழ்ச்சியில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கே.ராஜன்,  பெப்சி விஜயன், தவசி ராஜ், நடிகர்கள் முத்துக்களை,  எம்.எஸ்.பாஸ்கர், நடிகை பிரவீனா, லியாகத் அலிகான்,  வசனகர்த்தா பிரபாகரன்,  எஸ்.முரளி மற்றும் பட குழுவினர் கலந்துகொண்டனர். இயக்குனர் ஜாலி பாஸ்டியன் வரவேற்று பேசினார். அவர் கூறியது:  900 படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்து எல்லா ஹீரோக்களுடன்.பணியாற்றி இருக்கிறேன். கன்னடத்தில் ஒரு…
Read More
வாழை படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் மிகவும் வியந்து பாராட்டியுள்ளார்.!

வாழை படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் மிகவும் வியந்து பாராட்டியுள்ளார்.!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன்.  ஜூன் மாதம் வெளியான இப்படம் விமர்சகர்களின் பாராட்டுக்களோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுது. தற்போது மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை தொடர்ந்து 'வாழை' படத்தை இயக்கியுள்ளார். வாழை படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் மிகவும் வியந்து பாராட்டியுள்ளார். 'வாழை உங்களின் சிறந்த படைப்பு, மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்" என உதயநிதி ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.
Read More
ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பத்திரிகையாளர் சந்திப்பு !!

ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பத்திரிகையாளர் சந்திப்பு !!

ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. 'இவன் வேற மாதிரி', 'வேலையில்லா பட்டதாரி' புகழ் சுரபி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், பிரதீப் ராவத், ரெடின் கிங்ஸ்லி, தீனா, தங்கதுரை, மசூம் ஷங்கர், மானசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் உடன் பணிபுரிந்தவரும், தனிப் பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்தவருமான ஆஃப்ரோ இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தீபக் குமாரும், படத்தொகுப்பை ஸ்ரீகாந்தும், கலை இயக்கத்தை மோகனும் கையாண்டுள்ளனர். நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு: எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசியதாவது... "இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக…
Read More
அநீதி– விமர்சனம் !

அநீதி– விமர்சனம் !

சென்னையில் 'மீல் மங்கி' எனும் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் ஓசிடி பிரச்சினை கொண்ட திருமேனி (அர்ஜூன் தாஸ்). மன அழுத்தம் நிறைந்த அவரது வாழ்க்கையில் பணக்கார வீட்டு பணிப்பெண் சுப்புலட்சுமியின் (துஷாரா விஜயன்) காதல் கிடைக்க, காட்சிகள் மாறுகிறது. அதுவரை இருந்த விரக்தியான மனநிலையிலிருந்து காதல் அவரை மீட்டெடுத்து சிரிக்க வைத்து அமைதிப்படுத்துகிறது. இப்படியான சூழலில் திடீரென ஒருநாள் சுப்புலட்சுமியின் முதலாளி இறந்து விட, அந்த கொலைப்பழி சுப்புலட்சுமி மற்றும் திருமேனியின் மீது விழுகிறது. இந்தக் கொலைப்பழியிலிருந்து இவரும் தப்பித்தார்களா? இல்லையா? இதைச்சுற்றி நடக்கும் அரசியல் என்ன? - இதுதான் படத்தின் திரைக்கதை. ‘அங்காடித் தெரு’ படத்தில் சுரண்டப்படும் ஏழைத் தொழிலாளர்களின் அவலநிலையையும், வலியையும் அழுத்தமாக பதிவு செய்திருந்த இயக்குநர் வசந்தபாலன் மீண்டும் அப்படியானதொரு கதையை தேர்வு செய்திருக்கிறார். இம்முறை உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் கோர முகத்தையும், அதில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களின் நிலை,…
Read More
சத்திய சோதனை -விமர்சனம்

சத்திய சோதனை -விமர்சனம்

2017ம் ஆண்டு வெளியான ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இப்படத்தில் இயக்குநராக அறிமுகமான சுரேஷ் சங்கையா, தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். பிரேம்ஜி நடிப்பில் அவர் இயக்கியுள்ள சத்திய சோதனை திரைப்படம் வரும் 21ம் தேதி வெளியாகிவுள்ளது. சங்குப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு கொலை நடக்கிறது. கொலை செய்த நபரை அவர் கை, கழுத்தில் பல சவரன் நகைகளோடு அவரை ஒரு காட்டில் வீசிவிட்டுச் சென்று விடுகின்றனர் கொலைகாரர்கள். அப்போது அந்த வழியே வந்த பிரேம்ஜி, அந்தப் பிணத்தின் மீது இருந்த அவரது வாட்ச், செல்போன் மற்றும் அரை பவுன் நகையை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்த டூ வீலரில்கிளம்புகிறார். வரும் வழியில் ஒரு வயதான பாட்டியை டூவீலரில் ஏற்றிக் கொணைடு சங்குப்பட்டி காவல் நிலையத்தில் வந்து எடுத்த பொருட்களை ஒப்படைக்கிறார்.ஆனால் பிரதீப் சொல்வதை நம்பாத போலீசார் அவரை கஸ்டடியில் எடுக்கிறார்கள்.அவரை போலீஸ்காரர்கள் பிடித்து…
Read More
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ பட அப்டேட் !

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ பட அப்டேட் !

லைக்காவின் 'சந்திரமுகி 2' அப்டேட் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' பட அப்டேட் லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' படத்தை பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நட்சத்திர இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், 'வைகைப்புயல்' வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனித்திருக்கிறார். ஹாரர் வித்…
Read More
போர்ட்டர் இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை பெறுவதற்கும் தடையற்ற போக்குவரத்துக்கும் இன்டர்சிட்டி கூரியர் சேவையை தொடங்குகிறது!

போர்ட்டர் இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை பெறுவதற்கும் தடையற்ற போக்குவரத்துக்கும் இன்டர்சிட்டி கூரியர் சேவையை தொடங்குகிறது!

போர்ட்டர் இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை பெறுவதற்கும் தடையற்ற போக்குவரத்துக்கும் இன்டர்சிட்டி கூரியர் சேவையை தொடங்குகிறது ~இந்தியா முழுவதும் 19000+ இடங்களுக்கு கூரியர் டெலிவரிகளை வெறும் ரூ.40 ல்! இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப அடிப்படையிலான,லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களில் ஒன்றான போர்ட்டர், நாடு முழுவதும் சரக்குகள் கொண்டு செல்லப்படும் முறையை மாற்றும் நோக்கில், அதன் இன்டர்-சிட்டி கூரியர் சேவைகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. SMEகள், சில்லறை வணிகங்கள் மற்றும் வழக்கமான நுகர்வோர் உட்பட பரந்த அளவிலான வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான, குறைந்த கட்டணத்தில் நேரடியாக வீட்டு வாசலில் பிக்அப் மற்றும் டெலிவரி சேவைகளை வழங்குவதன்மூலம், இந்த தொழில்நுட்பம்-இன்டர்-சிட்டி டெலிவரி வழங்கல் தளவாட நிலப்பரப்பை எளிதாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இன்டர்சிட்டி லாஜிஸ்டிக்ஸிற்கான தடையற்ற மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தீர்வின் அவசியத்தை உணர்ந்து, போர்ட்டரின் புதிய சேவையானது, கூடுதல் கட்டணங்கள் அல்லது குறைந்தபட்ச ஆர்டர் தேவைகள் இல்லாமல் வீட்டு வாசலில் பிக்அப் செய்வதன் மூலம் இணையற்ற வசதியை உறுதி செய்கிறது.…
Read More