29
Jul
'டபுள் ஐஸ்மார்ட்' படத்தில் இருந்து வெளியான முதல் இரண்டு சிங்கிள்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. இப்போது ராம் பொதினேனி மற்றும் காவ்யா தாப்பரின் ரொமாண்டிக் மெலடி, க்யா லஃப்டா இந்த காலநிலையை மேலும் இதமாக்க வெளியாகியுள்ளது. க்யா லஃப்டா பாடலை கேட்டவுடன் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்படியாக துள்ளல் இசை மற்றும் பாடகர்களுடன் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார் மணி ஷர்மா. கேட்கும்போதே தங்களின் உற்சாகம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்தப் பாடலில் சரியாக சேர்க்கப்பட்டுள்ள ஹூக் லைன் பாடலின் உற்சாகத்தை மேலும் கூட்டுகிறது. இது க்யா லஃப்டா பாடலைக் கேட்பவர்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாக இருப்பதை உறுதி செய்கிறது. தனுஞ்சய் சீபனா மற்றும் சிந்துஜா சீனிவாசன் ஆகியோர் தங்கள் குரல்கள் மூலம் பாடலை மேலும் உயர்த்தியுள்ளனர். இவர்களின் குரலுக்கு ஸ்ரீ ஹர்ஷ எமானியின் பாடல் வரிகள் மெருகூட்டியுள்ளது. பாடலில் ராம் மற்றும் காவ்யா தாப்பருக்கு இடையேயான அட்டகாசமான கெமிஸ்ட்ரி பார்வையாளர்களுக்கு…
