அல்லு அர்ஜூன் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியான ‘புஷ்பா2:

 தி ரூல்’ டீசர், இணையம் முழுவதும் ஆகிரமித்து இருக்கிறது!

ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் படமான ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் டீசரை ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் வெளியான உடனேயே இணையத்தை ஆக்கிரமித்ததோடு, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் டீசரை சிலாகித்து அல்லு அர்ஜூனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

பிரம்மாண்டம், வண்ணங்கள் மற்றும் மிகப்பெரிய பொருட்ச் செலவில் உருவாகியுள்ள காட்சிகள் அனைத்தும் டீசரில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருக் காட்சியிலும் புஷ்பா ராஜ் நம்பமுடியாத, அதே சமயம் சக்தி வாய்ந்த அவதாரத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் தீவிரத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார். இதற்கு இன்னும் வலுசேர்க்கும் விதமாக தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை நம் இதயத்துடிப்பை இன்னும் அதிகப்படுத்துகிறது.

படத்தின் டீசரில் ஜாதரா காட்சி இடம்பெற்றுள்ளது. சம்மக்கா சாரலம்மா ஜாதரா என்றும் அழைக்கப்படும் ஜாதரா, இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் கொண்டாடப்படும் இந்து பழங்குடியின தெய்வங்களை கௌரவிக்கும் ஒரு திருவிழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் இந்த 4 நாட்கள் திருவிழாவிற்கு வருகை தருகின்றனர்.

மேஸ்ட்ரோ இயக்குநர் சுகுமார் இந்த ஜாதராவை படத்தில் மீண்டும் உருவாக்கியுள்ளார். இதன் பிரம்மாண்டம் மற்றும் நுணுக்கமான காட்சியின் ஒரு கிளிம்ப்ஸ் மட்டுமே டீசரில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் அழகு, அதன் வண்ணங்கள், பாரம்பரியம் என அனைத்தையும் இயக்குநர் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

2021 பிளாக்பஸ்டர் ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் தொடர்ச்சி இன்னும் பெரிதாகவும், இதுவரை பார்த்திராத அனுபவமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக கடின உழைப்பைப் படக்குழு கொடுத்துள்ளது என்பதற்கான உதாரணம்தான் இந்த டீசர்.

‘புஷ்பா2: தி ரூல்’ ஆகஸ்ட் 15, 2024 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாக்கியுள்ளது.

Related posts:

எளிதில் தீப்பற்றாத லித்தியம் பேட்டரி ! அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!
நடிகர் மோகன் பிறந்த நாள் மற்றும் 'ஹரா' திரைப்பட இசை வெளியீட்டு விழா !
திமுக அரசின் முதல் பட்ஜெட்.. இடம் பெற வாய்ப்புள்ள 5 சூப்பர் விஷயங்கள்
20 ஆண்டுகளில் இல்லாத அளவு பயணிகள் வாகனங்கள் விற்பனை 12.75 சதவீதம் சரிவு !
ஐ.எம்.டி.பியில் அதிக-தரமதிப்பீடு பெற்ற நடிகர் தனுஷ்11 திரைப்படங்களின் பட்டியல் !
வீடுகளை வாடகைக்கு விடுவோர்,2 மாத வாடகையைத்தான் முன்பணமாக வாங்கணும்!
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் அர்ஜுன் வழங்கும், பிரபல எழுத்தாளர்-நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் திரைப்படம் தொடக்கம் !
அவனே ஸ்ரீமன் நாராயணா...அதிக திருப்பங்கள் நிறைந்த திரைப்படம். !