01
Aug
சிம்புதேவன் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இந்த நிலையில், அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம் போட். புலி படத்திற்கு பிறகு பெரியளவில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைக்க இயலாமல் இருந்த சிம்புதேவனை போட் கரை சேர்த்ததா? இல்லை மீண்டும் கடலில் தத்தளிகக விட்டதா? என்பதை போட் படம் தீர்மானிக்கிறதா ? பார்க்கலாம்.? ஒருபுறம் இரண்டாம் உலகப்போர், மறுபுறம் சுதந்திர போராட்டம் நடக்கும் 1943ம் ஆண்டிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. ஹிட்லரின் ஆதரவு நாடாக இருந்த ஜப்பான் குண்டு மழை பொழிந்து மற்றவர்களை அச்சுறுத்தி வந்த சூழலில், சென்னையில் கடற்கரையோரம் உள்ள வெள்ளையர்களின் முகாமில் தீடீரென குண்டு வீசப்போகிறார்கள் என்ற தகவல் காட்டுத்தீயாகப் பரவுகிறது. இதையடுத்து, மக்கள் பதற்றத்தில் தப்பியோடுகின்றனர். அந்த முகாமில் கைதியாக உள்ள தனது தம்பியை விடுவித்து அழைத்துச் செல்லும் மீனவர் குமரனும், அவனது பாட்டியும் உயிரை காப்பாற்றிக் கொள்ள…
