06
Apr
தயாரிப்பாளராக இருந்த சசிகாந்த் இயக்குநராக மாறி இயக்கியுள்ள டெஸ்ட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது.தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட டெஸ்ட் திரைப்படம் கடைசியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி உள்ள நிலையில், இந்த படம் ரசிகர்களை கவருமா? ஓடிடியில் நேரத்தை செலவு செய்து ரசிகர்கள் பார்ப்பார்களா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.. அர்ஜுன் (சித்தார்த்) இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம். ஆனால், கடந்த இரண்டு சீசன்களாக ஃபார்ம் இல்லாமல் தடுமாறுகிறார். இதனால், வரவிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இறுதி டெஸ்ட் போட்டியுடன் அவரை ஓய்வு பெற வற்புறுத்துகிறது நிர்வாகம். அவரது பள்ளித் தோழியும் ஆசிரியையுமான குமுதா (நயன்தாரா), குழந்தையின்மையால் மனம் உடைந்து, தன் கணவன் சரவணனோடு (மாதவன்) கருத்தரித்தல் சிகிச்சை பெற்று வருகிறார். அதற்கான IVF சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுகிறது. அதே நேரத்தில், மனைவியிடம் கேன்டீன் நடத்துவதாகப் பொய் சொல்லி, தனது புதிய கண்டுபிடிப்பு கனவுக்காகப்…
