ஜமா– விமர்சனம்.!

கூத்துக்கலை என்பது மனிதர்கள் பல ஒப்பனை உபகரணங்களுடன் நடத்தும் நிகழ்த்துக்கலை. மஹாபாரதக் கூத்து, வள்ளித்திருமண கூத்து, அரிச்சந்திர கூத்து என நமது புராண இதிகாசங்களை ஒட்டி இக்கலைகள் நடத்தப்படுவதுண்டு. திருவண்ணாமலை மாவட்டத்தில் இப்படியான கூத்துக்களுக்கு மவுசு அதிகம். தற்போதைய சூழலில் கூத்துக்கலை வழக்கொழிந்து வந்தாலும், இன்னும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கூத்துக்கலை பெரும் சிரமத்துடன் இயங்கி தான் வருகிறது.

ஜமா படம் அப்படியான கூத்துக்கலையில் ஊடோடியுள்ள அக்கலைஞர்களின் வாழ்வையும், அதில் ஒருவனின் லட்சியத்தையும் காதலையும் பேசுகிறது. நாயகன் பாரி இளவழகன் சேத்தன் நடத்தும் கூத்து ஜமாவில் குந்தி அல்லது திரளெபதி வேடமிட்டு ஆடும் கலைஞன். அவருக்கு ஒரு தீராத ஆசை உள்ளது. அது என்னவென்றால் ஒருநாளாவது அர்ஜுனன் வேசம் போடவேண்டும் என்பதே. ஆனால் அதற்கு ஜமாவின் தலைவனான சேத்தன் ஒத்துழைக்க மறுக்கிறார். பாரி இளவழகனின் அப்பாவும் சேத்தனும் ஒருகாலத்தில் ஒன்றாக இருந்தவர்கள் தான் என்றாலும் சேத்தன் பாரி விசயத்தில் கறார்த்தன்மையுடன் நடந்துகொள்கிறார். அதற்குப் பின்னால் பொறாமையும் அதிகாரமும் இருக்கிறது. எப்படியேனும் அர்ஜுனன் பாத்திரமேற்கத் துடிக்கும் பெண் தன்மை கொண்ட நாயகனுக்கும், சேத்தனின் மகள் அம்மு அபிராமிக்கும் காதல் மலர்கிறது. காதலும் லட்சியமுமாய் பயணிக்கும் நாயகன் பாரி இளவழகனுக்கு நேரும் சம்பவங்கள் தான் மொத்தப் படமும்.

ஒரு கூத்துக்கலைஞனுக்கு மூலதனமே அவனது உடல்மொழி தான். சற்றே பிசிறு தட்டினாலும் முற்றிலும் செயற்கையாகத் தெரிந்து விடும். அந்த அபாயம் உணர்ந்து தன் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளார் நாயகன் பாரி இளவழகன். படத்தின் இயக்குநரும் இவரே. காதலியிடம் உள்ளுக்குள் காதலை வைத்துக்கொண்டு வெளியில் அதை மறுத்துப் பேசும் இடங்களிலும், குந்தி தேவி வேடமிட்டு அவர் பாடி நடிக்கும் இடத்திலும் க்ளாஸிக் நடிப்பை கொடுத்துள்ளார். சேத்தன் கரியரில் இந்தப்படம் ஒன்று போதும் எனுமளவில் தன் நடிப்பில் நின்று பேசியுள்ளார். பிறருக்குத் துன்பம் தருவதையே தன் கொள்கையாகக் கொண்ட வன்மம் நிறைந்த சேத்தனின் கதாபாத்திரம் படத்தின் பெரும்பலம். அம்மு அபிராமி நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் படத்தில் தோன்றும் எல்லாக் கதாபாத்திரங்களும் சிறப்புற நடித்துள்ளார்கள்.!

இளையராஜா இசை இதமாக ஒலிக்க வேண்டிய இடத்தில் சற்று கூடுதலாகவே ஒலிக்கிறது. கோபி கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்தை நம்மோடு நெருக்கமாக்கிக் கொள்கிறது. ஒப்பனை கலைஞர்களும், ஆர்ட் & செட் கலைஞர்களும் நல்ல உழைப்பைக் கொடுத்துள்ளனர்.

ஒரு ஜமாவைத் துவங்கி அதில் தான் வாத்தியாராக இருந்து, அர்ஜுனன் வேசம் போட வேண்டும் என்ற ஒரு கூத்துக்கலைஞனின் ஆசை தான் கதையின் மையக்கரு. ஆனால் அந்தக் கலைஞனுக்கு அதை அடைவதால் என்ன கிடைக்கப் போகிறது என்பதைப் பற்றி தெளிவாகச் சொல்லவில்லை. மேலும் மெயின் சம்பவம் நடந்த பின்னும் கதையை இழுத்துச் செல்லும் போக்கு படத்தின் மிகச்சிறு குறைகளில் ஒன்று. கூத்துக்கலையின் உயிரோட்டமே அம்மக்களின் உரையாடல் உள்பட படத்தில் உண்மைக்கு நெருக்கமான விசயங்கள் நிறைய இருக்கிறது.. நல்ல நடிகர்களின் தேர்வு, அவர்களின் கதாபாத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் என திரைக்கதையில் படம் இயல்பாக இருக்கிறது.சில குறைகள் இருந்தாலும் நாம் வாழும் காலத்தில் வீழ்ந்து கொண்டிருந்தாலும், ஏதோ நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கூத்துக்கலையைக் கண்முன் நிறுத்தியுள்ள இந்த ஜமாவிற்கு ஒரு வாழ்த்து சொல்லலாம்.இந்தக்கால இளைஞர்களுக்கு பிடிக்குமா என்பது சந்தேகமே?

Related posts:

'தணல்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது!

*மைத்ரி மூவி மேக்கர்ஸ், மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ விஷுவல் கிளிம்ப்ஸ் ரசிகர்களின் இதயங்களை வென்றது!*

’பராரி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

செல்வராகவன், யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம்,ஜி ஏ ஹரிகிருஷ்ணன் தயாரிக்க ரெங்கநாதன் இயக்குகிறார் !

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்...

'எழுச்சித் தமிழர்' தொல்.திருமாவளவன் வெளியிட்ட 'குயிலி' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்!

இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் 'மாயவலை' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !

இயக்குநர் ராம்கோபால் வர்மா தயாரிப்பில் உருவாகியுள்ள 'சாரி' திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!