29
Nov
டாக்ஸி ஓட்டுநரான குணசேகரன் (கிஷோர்) வேலையை இழந்ததால், சொந்தமாக கார் வாங்கி டாக்ஸியாக ஓட்டுகிறார். ஒருநாள் டெலிவரி பாயான அன்பு (வாசன்) பைக்கில் செல்லும்போது குணசேகரன் குறுக்கே வர, அவரை திட்டிவிட்டு சென்றுவிடுகிறார். ஆனால் வேறொரு நபர் அவரது கால்மேல் பைக்கை ஏற்றிவிட, குணசேகரனுக்கு கால் முறிவு ஏற்பட்டு விடுகிறது. இதனால் அன்பு மீது அவர் கடும் கோபத்தில் உள்ளார். இதற்கிடையில், த.கு.க என்ற கட்சியின் தலைவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதே கட்சியின் முதல்வரின் பண்ணை வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை திருட ஆட்களை அனுப்புகிறார். அதன் விளைவாக சில கொலைகளும் நடக்கின்றன. இந்த சூழலில் மதுரையில் ராஜேஷ் என்ற இளைஞர் லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்ததாக நினைத்து, போலீஸ் அதிகாரி முத்துக்கருப்பன் (போஸ் வெங்கட்) லாக்கப்பில் வைத்து தாக்க அந்த இளைஞர் இறந்து விடுகிறார்.ஆனால், அவரது செல்போனில் உள்ள ஒரு அதிர வைக்கும் வீடியோவை வைத்து முத்துக்கருப்பன்…
