“சென்னை பைல்ஸ் முதல் பக்கம்” — விமர்சனம் !

சின்னத்தம்பி புரொடக்ஷன், மகேஸ்வரன் தேவதாஸ் தயாரிப்பில், சாண்டி ரவிச்சந்திரன் இணை தயாரிப்பில் உருவாகி உள்ள படம் தான் சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்.! அனிஷ் அஷ்ரஃப் இயக்கி உள்ள இப்படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, மேஜஸ் டாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஜே.ஆர் இப்படத்திற்கு இசையமைக்க, அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

மதுரையில் குற்றப் புலனாய்வு தொடர்பான நாவலை எழுதி பிரபலமான எழுத்தாளராக இருந்தவர் ஜீவன் குமார். இவருடைய வாரிசு தான் ஹீரோ வெற்றி. இவருடைய தந்தையை பற்றி ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத் ‘மனிதம்’ என்ற பெயரில் அச்சு ஊடகத்திற்கு ஒரு வாரத்திற்கு தொடர் எழுதிக் கொடுக்க முடிவு செய்கிறார். இதற்காக ஹீரோ வெற்றியும், ஷில்பாவும் சென்னையில் சந்தித்துக் கொள்கிறார்கள்.

அங்கே, சில வினோதமான சூழ்நிலைகளால், அவர் மூத்த காவல் ஆய்வாளரான ராமையாவை (தம்பி ராமையா) சந்திக்கிறார். இந்த காலகட்டத்தில் நடக்கும் ஒரு குற்ற சம்பவத்தில் இருவரும் இணைந்து பயணிக்க வேண்டிய சூழல் உருவாகிறது. தனது தந்தை ஒரு க்ரைம் எழுத்தாளர் என்பதால் தனக்கு இயல்பாகவே இருக்கும் புலனாய்வுத் திறனை பயன்படுத்தி, பிரபு இந்த வழக்கின் மர்மங்களை எப்படி அவிழ்க்கிறார் என்பதே படத்தின் கதை.

இந்த தொடர் கொலைகளின் குற்றவாளியை கண்டுபிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா களம் இறங்குகிறார். தனக்கு உதவியாக பிராபாகரனை வைத்துக் கொண்டு விசாரணையை தொடங்குகிறார். தனது தந்தை ஒரு க்ரைம் எழுத்தாளர் என்பதால் தனக்கு இயல்பாகவே இருக்கும் புலனாய்வுத் திறனை பயன்படுத்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையாவுக்கு உதவிகள் செய்கிறார். இதற்கிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையாவின் மகள் எதிர்பாராவிதமாக தற்கொலை செய்து கொள்கிறார். அவள் ஏன் தற்கொலை செய்கிறாள்? பிராபாகரன் இந்த வழக்கின் மர்மங்களை எப்படி அவிழ்க்கிறார்? கொலைகாரன் யார்? அவன் ஏன் இந்த கொலைகளை செய்கிறான்? என்பதை விளக்குவதே படத்தின் மீதிக்கதை.

நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் வெற்றி இம்முறை சற்று தடுமாறியுள்ளார். அதே போல அவரது நடிப்பிலும் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போல ஒரே மாதிரியான முகவெளிப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். இம்முறை கண்ணை உருட்டும் துப்பறியும் முறைகள் மட்டுமே கடைபிடித்துள்ளார். ஒரே ஆறுதல் அவர் சண்டைக்காட்சிகளில் ரசிக்கும் படியாக செய்திருக்கிறார்.

இன்ஸ்பெக்டராக தம்பி ராமையாவுக்கு ஒரு பெரிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதை அவர் கோமாளித்தனமான உடல்மொழியோடு நம்மை வெறுப்படைய செய்துள்ளார். அதே நேரத்தில் தன் மகள் இறந்த பின் அவர் ஒரு அருமையான குணச்சித்திர நடிகர் என்பதை நிருபித்துள்ளார்.நாயகியாக ஷில்பா மஞ்சுநாத்துக்கு பெரிய அளவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை

மேலும் க்ரைம் த்ரில்லர் என்ற சீரியஸான களத்திற்கு சம்பந்தமே இல்லாத காமெடிக் காட்சிகள் திணிக்கப்பட்டுள்ளன. தம்பி ராமையா மற்றும் ரெடின் கிங்ஸ்லியின் நகைச்சுவை சுத்தமாக எடுபடவில்லை. கதாபாத்திர வடிவமைப்பும் மிகவும் பலவீனமாக உள்ளது. கதாநாயகன், வில்லன் என எந்த கதாபாத்திரமும் ஆழமாக எழுதப்படவில்லை. வில்லன் கதாபாத்திரம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் தேங்கிவிடுகிறது. தொழில்நுட்ப ரீதியிலும் படம் ஏமாற்றமளிக்கிறது.

Related posts:

"'டீசல்' படம் இந்த தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தைத் தர இருக்கிறது"- தயாரிப்பாளர் தேவராஜூலு மார்க்கண்டேயன்!

போக்ஸ்வேகன் – ஸ்கோடா நிறுவனங்கள் இணைப்பு !

ஆர் ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படமாக 'சொர்க்கவாசல்' உருவாகி வருகிறது.!

*”முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இளைஞர்களை கவரும் திரைப்படமாக ‘முஸ்தபா முஸ்தபா’ உருவாகியுள்ளது”- சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி!*

'இன்று நேற்று நாளை' மற்றும் 'அயலான்' இயக்குநர் ரவிக்குமார் எழுத்தில் உருவாகும் புத்தம் புதிய, சுவாரசிய காலப்பயணக் கதை

நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் 'அருள்வான்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு !

குடும்பஸ்தன் -- விமர்சனம்..!